அதிகரிக்கும் நுண் கடன் நிறுவனங்களின் ஊடுருவல்
போருக்குப் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சினையே நுண்கடன் தொல்லையாகும்.
'மைக்ரோ பினான்ஸ்' என்றழைக்கப்படும் சில நிதி நிறுவனங்கள் நுண் கடனை வழங்குகின்றன. நுண் கடன் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்படுகின்றன. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இவை பிரதான இலக்காகக் கொண்டுள்ளன.
இந் நுண் கடன் முறை என்பது இலங்கையில் புதிதாக செயல்முறையில் காணப்படும் திட்டமாக இயங்குகின்றது. கூடுதலான மக்கள் இந்த முறையில் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு முன் வருகின்றனர். அதிகளவிலான வட்டியை…