திருத்தப்படாத பிழைகள்

0 704
  • எம்.எம்.ஏ.ஸமட் 

மனிதன் தவ­றுக்கும் மற­திக்கும் மத்­தியில் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறான். இருப்­பினும், தவ­றுகள் உண­ரப்­பட்டு திருத்­தப்­ப­டு­வதும், செயற்­பா­டுகள் நிதா­னத்­து­டனும் அலட்­சி­ய­மின்­றியும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அதற்­கான மனப்­பாங்கை உரு­வாக்கிக் கொள்­வதும் முக்­கி­ய­மாகும். ஒவ்­வொ­ரு­வரும் உல­கத்தை மாற்ற வேண்டும் என நினைக்­கி­றார்கள். ஆனால், ஒருவர் கூட தங்­களை மாற்­றிக்­கொள்ள நினைப்­ப­தில்லை. தவ­று­களை, பிழை­களை திருத்­திக்­கொள்ள முயல்­வ­தில்லை.

மாற்றம் என்­பது மானி­டத்­துவம். அந்தத் தத்­து­வத்தை பின்­பற்ற வேண்­டி­ய­வர்கள், மாற்றம் காண­வேண்­டி­ய­வர்கள் மனி­தர்­கள்தான். மாறா­தி­ருக்க தவ­று­களைத் திருத்­திக்­கொள்­ளா­தி­ருக்க நாம் விலங்­கு­க­ளல்ல. மாற்­றத்­திற்­கான மனப்­பாங்­குகள் நம்மில் உரு­வாக வேண்டும். ஆனால், தற்­கா­லத்தில் இடம்­பெ­று­கின்ற நிகழ்­வுகள் சாதா­ரண மக்­க­ளி­னதும்  துறை­சார்ந்­தோ­ரி­னதும் மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான தேசிய வேலைத்­திட்­ட­மொன்றை நாடு தழு­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்தை  வலி­யு­றுத்­து­வ­தாக அமை­கின்­றன.

இந்­நாட்டின் அரச துறை மிகவும் மோச­மான நிலையில் உள்­ளது என்றால் அதற்கு அரச உத்­தி­யோ­கத்­தர்கள் கார­ண­மல்ல. அவர்­களை சரி­யாக வழி நடத்த தெரி­யாத தலை­மை­களே கார­ண­மா­கு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த திங்­கட்­கி­ழமை காலி­மு­கத்­தி­டலில் நடை­பெற்ற இலங்­கையின் 71 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போது மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­ததைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

சேவை நிலை­யங்­க­ளிலும், தொழி­ல­கங்­க­ளிலும் பணி­பு­ரி­கின்ற மனி­தா­பி­மா­ன­மற்ற மனப்­பாங்கு கொண்­டோரின் பேச்­சுக்கள், செயற்­பா­டுகள், அலட்­சி­யங்கள் போன்­ற­வற்­றினால் பலர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சேவை, தொழில், சமூக மற்றும் உள­வியல் ரீதி­யாகப் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். உயிர் பறி­போகும் நிலையும் காணப்­ப­டு­கின்­றன. இதற்குக் காரணம் அத்­த­கை­ய­வர்­களின் செயற்­பா­டுகள் திருத்­தப்­ப­டு­வ­தில்லை. பிழைகள் பிழை­க­ளா­கவே தொடர்ந்தும் காணப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக ஒரு சில தொழில்­வாண்மை கொண்ட தொழில் புரி­கின்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து அல்­லது அவர்­க­ளது தொழி­ல­கங்­க­ளி­லி­ருந்து சேவையை, உத­வியைப் பெற்­றுக்­கொள்ளச் செல்­கின்ற சாதா­ரண மக்கள் பல சந்­தர்ப்­பங்­களில் உதா­சீ­னப்­ப­டுத்தப் படு­வதும், வஞ்­சிக்­கப்­ப­டு­வதும், அலட்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­வதும், பரா­முகம் காட்­டப்­ப­டு­வதும் என்ற செயற்­பா­டு­க­ளி­னூ­டாக  பாதிக்­கப்­ப­டு­வ­தா­னது அத்­தொழில் வாண்­மைத்­து­றையில் தொழில்­பு­ரி­கின்ற நல்ல சேவை மனப்­பாங்கும் மனி­த­நே­யமும் கொண்ட ஏனை­ய­வர்­க­ளையும் அவர்­க­ளது அச்­சேவை நிலை­யங்­க­ளையும் விமர்­ச­னத்­துக்குள்­ளாக்­கு­வ­துடன் அகௌ­ர­வத்­துக்கும் நம்­பிக்­கை­யீ­னத்­துக்கும் இட்­டுச்­செல்­வ­தாக அமைந்து விடு­கி­றது.

மக்­களின் வரிப்­ப­ணத்தின் மூலம் அர­சினால் வழங்­கப்­ப­டு­கின்ற அதி­யுச்ச சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­கின்ற தொழில்­வாண்மை தொழிற்­து­றை­சார்ந்தோர் மக்­களின் நலன்­களில், அவர்­க­ளுக்­கான சேவை­களில் இவ்­வாறு நடந்­து­கொள்­வது அனு­ம­திக்கத் தக்­க­தல்ல. அதி­கா­ரமும் பத­வியும் இருக்­கும்­போ­துதான் மக்கள் அதி­கா­ரத்­தி­னதும் பத­வி­யி­னதும் பக்கம் சாய்ந்து கொள்­வார்கள். இவ்­வி­ரண்டும் இல்­லையேல் மக்­களின் கால­டிக்கே உரி­ய­வர்கள் செல்ல நேரிடும் என்­பது மறக்­கப்­ப­ட­லா­காது என்­பதை ஞாப­கப்­ப­டுத்­து­வதும் சம­கா­லத்தில் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

இறைவன் சிலரை பட்டம், பதவி, சொத்து, அந்­தஸ்து போன்­ற­வற்றில் உயர்ந்­த­வர்­க­ளாக அதி­கப்­ப­டி­யா­ன­வர்­க­ளாக ஆக்­கி­யி­ருக்­கிறான். அவ்­வாறு இறைவன் அவர்­களை ஆக்­கி­யி­ருப்­பது பெரு­மை­ய­டித்துக் கொண்டும் ஏனை­ய­வர்­களை அலட்­சி­யப்­ப­டுத்திக் கொண்டும் வாழ்­வ­தற்­கல்ல. இறை­ய­ருளால் கிடைத்­துள்ள வளங்­களை உரிய முறையில் மற்­ற­வர்­க­ளுக்கு பய­ன­ளிக்கும் வகையில் பயன்­ப­டுத்­தும்­போ­துதான் அவற்­றை­ய­ளித்த இறை­வ­னுக்கு நன்றி செலுத்­து­வ­தாக அமையும்.

சமூக மட்­டத்தில் ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு தொழில் புரி­கின்­ற­வர்­க­ளா­கவும் சேவை செய்­கின்­ற­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். அரச, தனியார் துறை­களில் பல சேவை நிலைகள் காணப்­ப­டு­கின்­றன. அரச சேவையில் அத்­தி­யா­வ­சிய சேவைகள் என்றும் சாதா­ரண சேவைகள் என்றும் பல சேவைகள் மக்­களின் தேவை­களின் நிமித்தம் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, பாது­காப்பு, கல்வி போன்ற அத்­தி­யா­வ­சிய சேவைகள் அரச துறையில் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் அதிக முக்­கி­யத்­துவ­மிக்க, அத்­தி­யா­வ­சிய சேவை­யாகக் கரு­தப்­ப­டு­வதும் மக்கள் நலன் அதிகம் கொண்ட சேவை­யாக விளங்­கு­வதும் சுகா­தார வைத்­திய சேவை­யாகும்.

இச்­சேவைத் துறையில் உள்ள ஒவ்­வொரு சேவை­யா­ள­ரி­னதும் சேவை நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் இன்­றி­ய­மை­யா­தது. அதிலும், வைத்­தி­யத்­து­றை­சார்ந்த வைத்­திய அதி­கா­ரி­க­ளி­னதும் தாதி உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னதும் சேவை­க­ளா­னது அதி­முக்­கி­ய­மா­னது. ஏனெனில், அவர்­க­ளது ஆக்­க­பூர்­வ­மா­னதும் அலட்­சி­ய­மற்­ற­து­மான மனி­தா­பி­மா­னத்­து­ட­னான சேவை உயிர்­க­ளோடு சம்­பந்­தப்­பட்­டது.

அத­னால்தான், சமூக மட்­டத்தில் வைத்­தி­ய­து­றை­சார்ந்­தோர்கள் கௌர­வத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கி­றார்கள். அத்­த­கைய கௌர­வத்­துக்­கு­ரி­ய­வர்­களின் சேவைகள் மனி­தா­பி­மா­ன­மிக்க மனப்­பாங்­குடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. மருத்­துவ சேவை­யா­னது மனி­த­நே­யத்­துடன் முன்­னெ­டுக்­கப்­படும் போதுதான் இச்­சே­வைக்­கான கௌரவம் பாது­காக்­கப்­படும்.  மக்­க­ளி­டத்­திலே நன்­ம­திப்­பையும் பெறும்.

சம­கா­லத்தில் வைத்­தி­யத்­து­றையில் அத்­து­றை­சார்ந்த சில­ரினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அலட்­சி­யங்கள், கவ­னக்­கு­றை­வுகள், கரு­ணை­யற்ற கருத்­தா­டல்கள் என்­பன அத்­து­றை­மீ­தான மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பா­டுகள் நம்­பிக்­கையை இழக்கச் செய்­கி­றது. குறிப்­பாக வைத்­தி­ய­சா­லை­களில் இடம்­பெ­று­வ­தாகக் கூறப்­ப­டு­கின்ற அலட்­சியச் செயற்­பா­டுகள் அவ் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கும் வைத்­தி­யத்­து­றைக்கும் அத்­துறை சார்ந்த வைத்­திய அதி­கா­ரிகள், தாதி உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் ஏனைய ஆள­ணி­யி­ன­ருக்கும் அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன், விமர்­ச­னங்­களை எதிர்­நோக்கச் செய்­வ­தையும்  அவ­தா­னிக்க முடி­கி­றது.

வைத்­தி­ய­சா­லைகள் மக்­களின் ஆரோக்­கி­யத்­துக்­காகச் செயற்­ப­டக்­கூ­டிய பொது ஸ்தாப­ன­மாகும். இதில் எத்­த­னி­ந­ப­ரி­னதும், எந்த அர­சியல் சக்­தி­யி­னதும் தலை­யீ­டுகள் இடம்­பெறக் கூடாது. அவ்­வாறு தலை­யீ­டு­க­ளுக்கு உள்­வாங்கப் படு­கின்ற பட்­சத்தில் அவ்­வைத்­தி­ய­சா­லையின் நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­வ­தோடு அதன் தரமும் மக்கள் மத்­தியில் குறை­வா­கவே கணிக்­கப்­ப­டு­கி­றது.

 

வைத்­தி­ய­சா­லை­களும்

ஆரோக்­கி­ய­முள்ள பிர­ஜை­களும்

சமூக, பொரு­ளா­தார, ஆன்­மீக மற்றும் உள ஆரோக்­கிய விருத்­தியில் ஆரோக்­கி­ய­முள்ள பிர­ஜை­களின் பங்­க­ளிப்பைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே அரசின் இலக்­கா­க­வுள்­ளது. இந்த இலக்கை அடை­வதில் அதிக பங்கு வகிப்­பது வைத்­தி­ய­சா­லை­க­ளாகும். ஏனெனில் ஆரோக்­கி­ய­மற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லை­களை நாடும் நோயா­ளர்­களின் நோய்­களைக் குணப்­ப­டுத்தி அவர்­களை ஆரோக்­கியம் மிக்­க­வர்­க­ளாக மாற்றும் நற்­ப­ணியில் வைத்­தி­ய­சா­லை­களும் வைத்­தி­யர்­களும் செயற்­ப­டு­கின்­றனர்.

வைத்­தி­ய­சா­லை­க­ளி­னதும். அவ்­வைத்­தி­ய­சா­லை­களில் பணி­பு­ரியும் வைத்­திய அதி­கா­ரிகள், தாதி உத்­தி­யோ­கத்தர், வைத்­தியத் துறை­சார்ந்தோர் மற்றும் ஏனைய ஆள­ணி­யரின் வகி­பாகம் இவ்­வி­லக்கை அடைந்­து­கொள்­வதில் அளப்­பெ­ரி­ய­தாகும். நக­ரங்­க­ளிலும் கிரா­மங்­க­ளிலும் காணப்­படும் மக்கள் தொகைக்­கேற்­பவும் வைத்­தி­ய­சா­லை­களின் எண்­ணிக்­கைக்கு ஏற்­பவும் வைத்­திய அதி­கா­ரி­களும் தாதி உத்­தி­யோ­கத்­தர்­களும் நிய­மனம் செய்­யப்­பட்டு சேவை செய்து வரு­கின்­றனர். நக­ரப்­புற வைத்­தி­ய­சா­லை­களில் காணப்­ப­டு­கின்ற வாய்ப்பு வச­தி­க­ளுக்கு ஏற்ப கிராமப் புற வைத்­தி­ய­சா­லை­களில் காணப்­ப­டு­வ­தில்லை என்ற போதிலும், அவ்­வைத்­தி­ய­சா­லை­களில் மனி­த­நே­யத்­துடன் பணி­பு­ரி­கின்ற வைத்­திய அதி­கா­ரி­க­ளையும், தாதி­யர்­க­ளையும் பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

ஆனால், ஒரு சில வைத்­திய அதி­கா­ரி­களும் தாதி உத்­தி­யோ­கத்­தர்­களும் இத்­த­கைய வசதி வாய்ப்­புக்கள் குறைந்த வைத்­தி­ய­சா­லை­களில் பணி­பு­ரி­வ­தற்கு வருத்­தப்­ப­டு­வ­தையும் அவற்றை ஏற்க மறுப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. கடந்த காலங்­களில் வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த வைத்­திய அதி­கா­ரிகள் கூட அப்­பி­ர­தே­சங்­களில் கடமை புரி­வ­தற்கு விரும்­பாத நிலை காணப்­பட்­டதை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும். இதற்குக் காரணம் அவர்கள் மத்­தியில் காணப்­படும் சேவை  மனப்­பாங்­கற்ற உள­நி­லையின்  வெளிப்­பா­டாகும்.

மக்­களின் சுகா­தார மேம்­பாட்­டுக்கும் முகா­மைத்­து­வத்­துக்­கு­மாக சுகா­தார அமைச்சு பல்­வேறு திட்­டங்­களை வகுத்து செயற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. இவற்­றிற்­காக பல மில்­லியன் ரூபாய்கள் செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. இந்த ரூபா பெறு­ம­தி­மிக்­க­தாக மாற்­றப்­ப­டு­வதில் சுகா­தா­ரத்­துறை சார்ந்­தோரின் ஒத்­து­ழைப்பு இன்­றி­ய­மை­யா­தது.

அரச சேவையில் அதி உன்­ன­த­மான சேவை­யாகக் கரு­தப்­படும் வைத்­திய சேவைக்­கா­கவும் அச்­சே­வை­யி­லுள்­ள­வர்­களின் நலன்­க­ளுக்­கா­கவும் பல சலு­கைகள் அர­சினால் வழங்­கப்­ப­டு­கி­றது. வழங்­கப்­ப­டு­கின்ற நலன்­களில்  ஒரு சில குறை­பா­டுகள் உள்ள போதிலும், இச்­சே­வையில் உள்­ள­வர்­களின் பல்­வேறு தேவைகள் நிறை­வேற்றி வைக்­கப்­ப­டு­கின்­றன.

 

வைத்­தி­யத்­து­றையும் விமர்­ச­னங்­களும்

மக்­களின் ஆரோக்­கி­யத்­துக்­கான அடி­நா­த­மாக விளங்­கு­கின்ற வைத்­தி­ய­சா­லை­களில் பணி புரி­கின்ற ஓரிரு வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் மற்றும் ஏனைய ஆள­ணி­யி­னரின் செயற்­பா­டுகள் அவ்­வைத்­தி­ய­சாலை குறித்த விமர்­ச­னங்­க­ளையும் கேள்­வி­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன. ஒரு சில வைத்­தி­யத்­துறை சார்ந்­தோரின் அலட்­சி­யங்கள், கவ­ன­யீ­னங்­கள், பொறுப்­பற்ற செயற்­பா­டுகள் நோயா­ளர்­களின் ஆரோக்­கி­யத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்­கு­வ­துடன், அவர்­களின் உயிர்கள் வீணாகப் பறி­போ­கவும் கார­ண­மாக அமைந்­து­வி­டு­கி­றது.

ஒரு சிலரை நீண்ட கால அங்­க­வீ­னர்­க­ளாக மாற்­றவும் செய்­கி­றது. இந்­நிலை ஒரு­சில அரச வைத்­தி­ய­சா­லை­களில் காணப்­படும் அதே­வேளை தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் பணத்தை மையப்­ப­டுத்தி ஆரோக்­கியம் விலை­பே­சப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றேனும் நோயையும் அதனால் ஏற்­படும் உயிர் ஆபத்­தையும் தவிர்த்துக் கொள்­வ­தற்­காக தனியார் வைத்­தி­ய­சா­லை­களை நாடி நோயைக் குணப்­ப­டுத்தி உயிரைக் காப்­பாற்­றிக்­கொண்­ட­வர்கள் அவற்­றிற்­காக செல­வ­ழித்து இன்னும் கட­னா­ளி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்­த­ள­வுக்கு தனியார் வைத்­தி­ய­சா­லை­களின் கட்­டண அற­வீ­டுகள் காணப்­ப­டு­கின்­றன. மனி­தா­பி­மா­னமும் மனி­த­நே­யமும்  பணத்­திற்­காக விலை­பே­சப்­ப­டு­வதை இங்கு அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஒரு சில அரச வைத்­தி­ய­சா­லை­களில் கவ­ன­யீ­ன­மா­கவும், அலட்­சி­ய­மா­கவும் பொறுப்­பற்ற விதத்­திலும் மேற்­கொள்­ளப்­பட்ட சிகிச்சை நட­வ­டிக்­கைகள் ஒரு சிலரை நிரந்­தர நோயா­ளர்­க­ளாக்­கியும் உள்­ளது. அத்­தோடு, ஒரு சில வைத்­தி­யர்­க­ளுக்­கி­டையே காணப்­ப­டு­கின்ற போட்டா போட்­டிகள், வெட்­டுக்­குத்­துக்கள் நோயா­ளர்­களைப் பாகு­பாட்­டுடன் நோக்­கவும் செய்­கி­றது. இவ்­வா­றான சம்­ப­வங்­களும் கடந்த காலங்­களில்  வைத்­தி­ய­சா­லை­களில் இடம்­பெற்­றிக்­கின்­றன.

மருத்­துவம் என்­பது நோய்­களைக் குணப்­ப­டுத்­து­வ­தற்­கான கலையும் அறி­வி­யலும் ஆகும். இது நோய்த்­த­டுப்பு, குணப்­ப­டுத்தல் போன்­ற­வற்றின் மூலம் மனி­தர்­களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்­வித்தல் ஆகி­ய­வற்­றுக்­காக உரு­வாக்­கப்­பட்ட பல்­வேறு உடல்­நலம் பேணற் செயல் முறை­களை உள்­ள­டக்கும். தற்­கால மருத்­துவம், காயங்­க­ளையும் நோய்­க­ளையும் கண்­ட­றிந்து குணப்­ப­டுத்­து­வ­தற்கு உடல்­நல அறி­வியல், உயிர்­ம­ருத்­துவ ஆய்­வுகள், மருத்­துவத் தொழில்­நுட்பம் போன்­ற­வற்றைப் பயன்­ப­டுத்­து­கி­றது. இவ்­வா­றான குணப்­ப­டுத்தல் பெரும்­பாலும் மருந்­துகள், அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்­சைகள் மூலம் செய்­யப்­ப­டு­கி­றது. தற்­கால மருத்­து­வத்­துக்கு மருத்­துவ தொழில்­நுட்­பமும் நிபு­ணத்­து­வமும் இன்­றி­ய­மை­யா­தவை. எனினும் நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு அவர்களை அந்நோய்களிலிருந்து குணப்படுத்துவதற்கு அவர்களின் நோய்களைக் கண்டறிவதற்கு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் கருணையும், மனிதாபிமானமும் நல்ல சேவை மனப்பாங்கும் தற்காலத்தில் வைத்தியத்துறை சார்ந்தோருக்கு தொடர்ந்தும் அவசியமாகவுள்ளது.

தற்கால வைத்தியத்துறையில் மனிதாபிமானத்திற்கு மதிப்பளிப்பதை விடவும் பணத்திற்கு மதிப்பளிப்பதைக் காண முடிகிறது.  பிரதேசம் ஒன்றாக இருந்தாலும் நோயின் வகை ஒன்றாக இருந்தாலும் அந்நோய்க்கான ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு வைத்திய நிபுணர்களை சந்திப்பதற்கு செலுத்தும் கட்டணம் ஒவ்வொரு தனியார் வைத்தியசாலைக்கும் வித்தியாசமாகவே உள்ளது என்பது சிறு உதாரணமாக இங்கு முன்வைக்க வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தையும் தொழில் கௌரவத்தையும் பின்தள்ளி பணம் என்ற பேய் வைத்தியத்துறையில் மாத்திரமின்றி சகல துறையிலும் தலைவிரித்து ஆடும் தற்காலத்தில் பிழைகளை பிழையென்று சுட்டிக்காட்டி பிழைதிருத்தம் செய்ய முயல்வதும் பிழையாகக் கொள்ளப்படுகிறது என்பதையும் பதியவேண்டியுள்ளது.

நாகரிகமிக்க மனிதப்பண்புகள் மறக்கப்படுகின்றபோது அல்லது அவற்றை வெளிக்காட்ட முயற்சிக்காதபோது அவற்றினால் ஏற்படுகின்ற தவறுகள், பிழைகள், அலட்சியங்கள் வைத்திய சேவை, ஆசிரியர் சேவை உட்பட அத்தனை சேவையையும், சேவையாளர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுடன் சேவை பெறுநர்களின் உள்ளத்தோடும், உடலோடும், உயிரோடும் விளையாடச் செய்கிறது. இத்தகைய நிலைமைகள் தவிர்க்கப் படுவதற்கும், தடுக்கப்படுவதற்கும் குறித்த சேவையிலுள்ளவர்கள் அல்லது சேவைத்துறைசார்ந்தோர் திருத்தப்படாத பிழைகளை பிழைதிருத்தம் செய்ய முயற்சிப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் என்பதே நிதர்சனமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.