சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே

0 1,070
  • நளீர்அஹமட்
    உதவி ஆய்வாளர் – லக்ஷ்மன்
    கதிர்காமர் நிறுவகம்

வரலாற்றுப் பின்னணி

15 ஆம் நூற்­றாண்டின் இறுதிக் காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 450 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலம் போர்த்­துக்­கே­ய­ருக்கும், ஒல்­லாந்­த­ருக்கும் இறு­தி­யாக பிரித்­தா­னி­யர்­க­ளுக்­கு­மாக அந்­நி­யரின் ஆதிக்­க­ஆட்­சியின் கீழ் இத்­தேசம் இருந்­தது. 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி அந்­நிய ஆதிக்க ஆட்­சி­ய­ிலி­ருந்து சுதந்­திரம் பெற்­றது. இறு­தி­யாக 150 வருட பிரித்­தா­னிய ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­பட்டு ஓர் ஆசிய வலய நாடு என்ற வகையில் அப்­போது சர்­வ­தேச ரீதி­யாக வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்த அர­சியல் கட்­சி­முறை, பாரா­ளு­மன்ற ஆட்­சி­முறை, அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்தம் என்­ப­ன­வற்றின் மூலம் சுதந்­தி­ர­மான அர­சொன்றை நோக்கி முன்­செல்­வ­தற்கு முடிந்­தது.

பிரித்­தா­னியா இலங்­கைக்கு சுதந்­திரம் வழங்­கு­வ­தென முடி­வெ­டுத்­த­தை­ய­டுத்து 1947 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் அன்­றைய பிர­தமர் டீ.எஸ்.சேன­நா­யக்­க­வுடன் மூன்று ஒப்­பந்­தங்கள் கைச்­சா­த்தி­டப்­பட்­டன. முத­லா­வது, பாது­காப்பு ஒப்­பந்தம். இதன்­படி திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிலும், கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திலும் பிரித்­தா­னியப் படை­களை வைத்­தி­ருப்­ப­தற்கு இலங்கை இணங்­க­வேண்டும்.

இரண்­டா­வது, வெளி­வி­வ­கார ஒப்­பந்தம். இதன்­படி பிரித்­தா­னிய ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெற்ற நாடு­க­ளுடன் தொடர்­பு­களை மேற்­கொள்ளும் போது பிரித்­தா­னியா விதிக்கும் நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். மூன்­றா­வது, அரச ஊழி­யர்கள் தொடர்­பான ஒப்­பந்தம். அதன்­படி இலங்­கையில் அப்­போது தொடர்ந்தும் கட­மை­யாற்றும் பிரித்­தா­னிய ஊழி­யர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் மற்றும் ஊழியர் சேம­லா­ப­நிதி என்­ப­வற்றை தெடர்ச்­சி­யாக வழங்க இலங்கை சம்­ம­திக்க வேண்டும் என்­ப­ன­வாகும். இதன் பிர­கா­ரமே இலங்கை சுதந்­திர சட்டம் அமு­லுக்கு வந்­த­தாக வர­லாறு கூறு­கி­றது.

இலங்கை சுதந்­திர சட்டம் இவ்­வாறு கிடைத்­தாலும், 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1972 ஆம் ஆண்டு வரை சோல்­பரி அர­சியல் யாப்பே நடை­மு­றையில் இருந்­துள்­ளது. இதன் பிர­காரம் இலங்கை சுயா­தீன முழு­மை­யான சுதந்­தி­ரத்தை பெற்­றி­ருக்­க­வில்லை. இலங்­கையில் பிரி­த்­தா­னிய முடியே தொடர்ந்தும் செயற்­பட்­ட­மையும், ஆட்சி நட­வ­டிக்­கை­களில் பிரித்­தா­னி­யாவின் தலை­யீடு இருந்­த­தா­கவும், அதா­வது, சட்­டத்­துறை, நீதித்­துறை, நிர்­வா­கத்­துறை போன்ற மூன்று முக்­கிய துறை­க­ளிலும் பிரித்­தா­னி­யாவின் செல்­வாக்கு காணப்­பட்­ட­தாக வர­லாறு கூறு­கி­றது.

இவை­களை களைந்து தன்­னா­திக்கம் கொண்ட சுதந்­திர யாப்­பொன்றின் தேவை­பற்றி அன்­றைய தலை­வர்­க­ளி­னதும், படித்த வர்க்­கத்­தி­னர்­க­ளி­னதும் விழிப்­பினால் 1972 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட்­டது. கம்­யூ­னிஸ, சோச­லிஸ, தாராண்­மை­வா­தி­களின் ஆத­ர­வுடன் அமைக்­கப்பட்ட அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய யாப்பில் தமிழ­ரசுக் கட்­சியின் சிபா­ரி­சுகள் புறக்­க­ணிக்கப்­பட்­டன. தமிழ் சமூ­கத்தின் நியா­ய­மான கோரிக்­கை­களை அர­சி­ய­ல­மைப்பு சபை புறக்­க­ணித்­தது.

சிறு­பான்­மை­யினர் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­ ஒரு யாப்­பாக இருந்­தது. அன்­றைய ஆட்­சியின் தன்­னிச்­சை­யான யாப்­பா­கவே அது இருந்­தது. கம்­யூ­னிஸ்­டுகள், சோச­லிஸ்­டு­கள்­கூட அன்று சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை அங்­கீ­க­ரிக்­கா­தது துர­திஷ்­டமே. அதன்­பின்னர் 1978ஆம் ஆண்டு புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்க முயற்­சி­களின் பின்­னணி பற்றி நாங்கள் அறிந்­ததே. மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் 1978 ஆம் ஆண்டு யாப்பில் இருந்­தாலும் அதி­காரப் பகிர்வு கைகூ­டவே இல்லை. அன்­றும்­கூட அப்­போ­தைய தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சிபா­ரி­சுகள் புறக்­க­ணிக்­கப்­பட்ட யாப்­பா­கவே இருந்­தது.

அன்று தொடக்கம் இன்­று­வரை இந்த யாப்பின் குறை­பா­டு­களும், சில­போது யாப்­பி­லுள்ள விட­யப்­ப­ரப்­பு­களை இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூ­கத்­த­வர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் தலை­வர்­க­ளினால் வெறும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல் போன­தனால் ஏற்­பட்ட அர­சியல், சமூக விப­ரீ­தங்­களை நன்­கு­ணர்ந்து வைத்­தி­ருக்­கிறோம். அது­போக யுத்­த­வெற்­றிக்கு அப்­பாலும் இந்­த ­நாட்­டிலே மிகக்­கு­று­கி­ய­கால இடை­வெ­ளியில் ஏற்­பட்ட பிறி­தொரு அச்சம் இன்னும் தொடர்­கி­றது. அது வெறும் அச்­ச­மல்ல. இந்­நாட்டில் சிறு­பான்மை மக்­களின் இருப்­புக்­கான கேள்­வி­களை விட்டுச் செல்­கி­றது.

மிக அண்­மையில் இடம்­பற்ற அர­சி­யல்­யாப்பு மீறல்­கள்­கூட இன்று ஒரு சாதா­ரண விட­ய­மாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது. எந்­த­விதக் கேள்­வி­க­ளுக்கும், அவ­தா­னிப்­பு­க­ளுக்கும், எந்­த­வித குற்றம் சார்ந்த விட­யப்­ப­ரப்­புக்­குள்ளும் உள்­வாங்­கப்­ப­டாத விட­ய­மாகத் தொடர்­கி­றது. இந்­நாட்­டி­லுள்ள ஜன­நா­யக சமூகம் சிந்­திக்­க­வேண்டும்.

பன்மைச் சமூ­கத்தின் இயல்பை உள்­வாங்­காத பௌத்த சமூ­கத்தின் மூடிய தேசிய விழிப்­பு­ணர்வு அல்­லது குறு­கிய தேசிய உணர்வு இந்­நாட்­டுக்கு மிக ஆபத்­தான விடயம், மிக கவ­லை­ய­ளிக்கும் விடயம் இந்­நாட்­டி­லுள்ள சக்­தி­வாய்ந்த பௌத்த பிரி­வெ­னாக்கள், அதன் பிர­தான சங்­கைக்­கு­ரிய தலைமை தேரர்கள் மௌன­மாக இருப்­பதும், கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­கு­ரிய சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்­தா­ம­லி­ருப்­பதும், அர­சியல் ரீதி­யாக உணர்ச்­சி­வ­சப்­பட்டு நிலை­மை­களை அங்­கீ­க­ரிப்­பதும் துர­திஷ்­ட­வ­ச­மான விட­யங்­க­ளாகும். இந்­நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பன்­மைத்­து­வத்தை அங்­கீ­க­ரித்து புரி­த­லி­னூடாக ஒரு­மித்த தேசிய உணர்வை வெளிப்­ப­டுத்­தா­த­போது இந்­நாடு முன்­னேறு­வது பற்றி சிந்­திப்­பதும் கொள்கை வகுப்­பதும் பய­ன­ளிக்­காத செயல்­களே.

இலங்கை முஸ்­லிம்கள் இந்­நாட்டின் தேசிய இறை­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­தாத ஓர் தேசிய சமூகம். முஸ்­லிம்கள் தங்கள் உரி­மை­களை பற்றி பேசும் அதே­நேரம், தங்­களின் கடமை­களைப் பற்­றியும் சிந்­திக்க வேண்டும். தங்­களின் முயற்­சி­யாண்­மை­களை இந்­நாட்­டிற்கு வழங்க வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து கட்­ட­மைக்­க­ப்பட்ட இன­வாத செயற்­பா­டுகள் குறைவு. முஸ்­லிம்கள் முற்­றாக இதி­லி­ருந்து தூர­வி­லகி இருக்­க­வேண்டும். அவ்­வாறு ஏதும் நடக்கும் பட்­சத்தில் இந்­நாட்டின் நீதிக்­கு முன்நிறுத்­தப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்கள் எப்­போதும் அர­சினை நோக்­கியே செற்­பட்டு வந்­துள்­ளனர். தற்­போது ஆயுதப் போராட்ட தோல்­வியின் பின்னர் தமிழ் சமூ­கமும் அர­சினை நோக்­கியே திரும்­பி­யி­ருக்­கி­றது. இதனை பௌத்த சமூகம் சரி­யாக விளங்­கிக்­கொள்ள முயற்­சிக்க வேண்டும்.

இலங்­கையின் தேசி­ய­வாதம் அந்­நிய ஆட்­சிக்கு எதி­ரான போராட்ட வாச­க­மாக சுதந்­தி­ரத்­திற்கு முன்­னி­ருந்­தது. இட­து­சாரிக் கட்­சி­களும் ஆளு­மையும் உள்­ளக இன­வாத மேலு­கை­களை தணித்து சுதந்­திரப் போராட்­டத்தில் பன்மை சமூ­கத்தை இணைத்துக் கொண்டு வெற்­றி­கண்­டது. துர­திஷ்­ட­வ­ச­மாக சுய­நல அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவும், அதி­கார அர­சி­ய­லுக்­கா­கவும் இன்­றுள்ள அதே கொள்­கை­களைக் கொண்ட இட­து­சா­ரிகள் உள்­ளக இன­வாத செயற்­பா­டு­களை கண்டும் காணா­மலும் இருப்­ப­தையும், பல் எண்­ணிக்கை இன­வாத  குழுக்­க­ளுடன் தொடர்­பு­களை வெளிப்­ப­டை­யாக வைத்­தி­ருப்­பதும் நாட்டின் நலனைப் பாதிக்கும் மிகக் கீழ்த்­தர  அர­சியல் எண்­ணப்­பா­டு­க­ளையே வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

பௌத்த தேரர்­களை கொண்ட அர­சியல் அமுக்கக் குழுக்கள், சமூக அமுக்கக் குழுக்கள், சிவில் அமைப்­புக்கள், அதிலும் குறிப்­பாக இளம் பிக்­கு­களைக் கொண்ட அமைப்­புக்கள் மிக குறு­கிய காலத்தில் பல்கிப் பெரு­கி­யி­ருக்­கி­ன்றன. அதே­போன்று பல் வேறு பிரி­வெ­ணாக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தேரர்கள் அடிக்­கடி அர­சியல் பேசும் வீதம் கூடிக் கொண்டு போவதை அவ­தா­னிக்­கும்­போது புரிந்­து­கொள்­ளலாம். தேரர்­களின் ஊடக மாநாட்டு பங்­கேற்­புகள், ஊட­க­வெ­ளி­யீ­டுகள் என்­ப­ன­வற்­றிலும் அதி­க­ரித்த போக்கு காணப்­ப­டு­கி­றது. இது அங்­கீ­க­ரிக்க முடி­யாத விட­ய­மாக இங்கு சுட்­டிக்­காட்ட முனை­ய­வில்லை. ஆனால் வெறும் குறு­கிய இன­வா­தங்­க­ளுக்­காவும், தனிப்­பட்ட சில நபர்­களின் அர­சியல் நிலைத்­த­லுக்­காகவும் கட்­சி­களின் வாக்­கு­களை அதி­கரிப்­ப­தற்­கா­கவும் உபாய ரீதி­யாக செயற்­ப­டு­வது பிழை­யான விடயம்.

இந்­நாட்டின் நீதி யாவ­ருக்கும் சமம். நீதிக்­குமுன் கட்­டுப்­பாடு இருக்­க­வேண்டும். தேரர்­க­ளுக்கும் விதி­வி­லக்­கல்ல. அந்த மன­நிலை இந்­நாட்டுத் தேரர்­க­ளுக்கு வர­வேண்டும்.

இன்று சிங்­கள தேசி­ய­வாதம், சிங்­கள தேசம், பௌத்த தேசம், பௌத்த தேசிய உணர்வு தானாக குறு­கிய பார்­வையை தன்­ன­கத்தே உரு­வாக்கி வரை­ய­றுத்துக் கொண்­டுள்­ளது. அகிம்சை போதிக்கும் பிரி­வி­ன­ரி­லி­ருந்து துவம்­சமும், துவே­சமும் தீவி­ர­மாக வெளிப்­ப­டு­கி­றது. ஒரு­வ­கை­யான பாசிச சிந்­தனை ரீதி­யான செயற்­பா­டு­களை இந்­நாட்டு இளம் தேரர்கள் வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ரான தேசிய உணர்­வாக வெளிப்­ப­டு­கி­றது. மக்­கள்­ நலன் சார்ந்த கொள்­கை­க­ளி­னாலும், சமூக மேம்­பாட்டு கரி­ச­னை­யி­னாலும், மனி­தா­பி­மான உணர்­வி­னா­லுமே ஒரு­ மதத் தலை­வரின் சமூக அடை­யாளம் வடிவம் பெற­வேண்டும்.

பெரும்­பான்மை, சிறு­பான்மை இன அர­சி­யல்­வா­திகள் சாதா­ரண மக்­க­ளுக்­குள்­ளி­ருக்கும் அடிப்­ப­டை­யான நிலைப்­பா­டு­களை நேர்­மை­யாக வளர்த்­தெ­டுத்து சமூக மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­க­வேண்டும். சில­போது பெளத்த தேரர்­களால் அதி­தீ­விர செயற்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. ஏனைய இனத்­த­வர்­க­ளுக்குப் பாது­காப்பற்ற தேசி­ய­வா­த­மாக மேலு­யர்ந்து நிற்­கி­றது. இந்­நாட்டில் புத்­தி­ஜீ­வித்­துவ முற்­போக்கு பௌத்த தேரர்கள் இது­பற்றி தீவி­ர­மாக சிந்­திக்­க­வேண்டும். இல்­லை­யெனில் இந்­நாட்டின் கிரா­மப்­பு­றங்­க­ளி­லி­ருந்து சாதா­ரண குடி­ம­க­னி­லி­ருந்து திட்­ட­மி­டப்­ப­டாத இன­வாத செயற்­பா­டுகள் வெளி­வ­ரு­வதை தடுக்­க­மு­டி­யாமல் போகும். இந்­நாட்டில் இன­வாத அர­சி­யலின் தீவிரப் போக்கை தணிக்­க­வேண்டும். இது சாதா­ரண பொது­மக்கள் சார்ந்­த­வி­டயம். வாக்­க­ளிக்கும் மக்கள் தங்கள் வாக்­கு­ரி­மை­களை விழிப்பு நிலையில் பிர­யோ­கிக்க வேண்டும். சிங்­கள கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் சங்­க­ட­மான நிலையை இது தோற்றுவித்திருக்கிறது. இதிலிருந்து வெளிவரும் பொதுவெளிகள் குறித்து சகல இன மக்களும் திறந்த மனப்பான்மையுடன் சிந்திக்கவேண்டும்.

‘சந்தர்ப்பவாத தேசியவாதம்’ இது மிகப் பெரிய ஆபத்தான விடயம். இது சிலபோது பௌத்த சமூகத்திலிருந்து வெளிப்பட்டாலும் அவ்வப்போது தமிழ் சமூகத்திலிருந்தும், முஸ்லிம் சமூகத்திலிருந்தும் வெளிப்படுவதை நன்றாக அவதானிக்கும்போது புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசியல் நோக்கங்களுக்காக வந்துபோகிறது. இதிலிருந்தும் நாங்கள் மிக அவசரமாக விடுபடவேண்டும். 71 ஆவது சுதந்திரதின வருடம் தொடர்ச்சியான தேர்தல் வருடமாக இருக்கப் போகிறது. தேர்தல்களை இலக்காகக் கொண்ட இனவாத தேர்தல் பிரசார முடிச்சுக்களை அவிழ்த்து அதன் செயற்பாட்டுத் தன்மையை இந்நாட்டிலிருந்து முற்றாக நீக்கும் வகையில் சகல இன மக்களும் விழிப்பாக இருக்கவேண்டும். நீண்டகால இலக்கினை அடைவதற்கான வலுவான பன்மைத்துவ அங்கீகாரம் தேவைப்படுகிறது. ஒன்றிணைந்து தேசிய வலுவை சக்திப்படுத்தவேண்டும். இலங்கையின் ஜனநாயகம் அரசியல்வாதிகளின் கைகளிலிருந்து மக்களிடம் வரவேண்டும். சுதந்திர தின உணர்வு தனிமனிதர்களிடம் வரவேண்டும். இந்நாட்டில் சகோதரத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னும் இன்னும் தூரமாக்காமல் இருக்கட்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.