ஹஜ் யாத்திரைக்கு 3500 பேர் தெரிவு

0 581

இந்த வருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் விண்­ணப்­பித்த விண்­ணப்­பங்களின் பதி­விலக்­கத்தின் வரி­சைக்­கி­ர­மப்­ப­டியே தெரிவு­ செய்யப்பட்டுள்­ளார்கள். தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான கடி­தங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அனுப்பி வைக்­கப்­படும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். இவ்­வ­ருட ஹஜ் பய­ணி­களின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான  தெளி­வூட்டல் கருத்­த­ரங்­குகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மாவட்ட ரீதியில் நடை­பெ­ற­வுள்­ளன. அவர்­க­ளுக்­கான தெளி­வூட்டல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­ப­டும்­போது அவர்கள் ஹஜ் யாத்­தி­ரைக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையை உறு­தி­செய்யும் கடி­தங்­களும் அனுப்பி வைக்­கப்­படும். கடந்த வரு­டத்­தினை விட இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் சுமார் ஒரு இலட்சம் ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை ரூபாவின் மதிப்­பி­றக்­கமும் சவூ­தியில் ஹஜ் தொடர்­பான கட்­ட­ணங்கள் அதி­க­ரிப்பும் 5 வீத வற்­வரி அதி­க­ரிப்­புமே ஹஜ் கட்­டண உயர்­வுக்கு காரணமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் கட்டணங்கள் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.