மிஹிந்தலை தாதுகோபுரத்தில் ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் நேற்று கைது

மிஹிந்­தலை ரஜ­மஹா விகாரை வளா­கத்­தி­லுள்ள  பிர­பல சைத்­தியம் ஒன்­றுக்கு அருகில் உள்ள புரா­தன வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தாது­கோ­புரம் ஒன்றின் மேல் ஏறி புகைப்­படம் எடுத்­த­தாக கூறப்­படும் இரு மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 18,20 வய­து­களை உடைய - திஹா­ரிய பகு­தியிலுள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றில் கற்கும் மூதூர் பகு­தியைச் சேர்ந்த இரு­வரே இவ்­வாறு  மிஹிந்­தலை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மூதூர் அப்துல் லதீப் வீதியைச் சேர்ந்த 20 வய­தான ரஷீத் மொஹம்மட் ஜிப்­ரியும்,  நெய்தல் நகர், மூதூர் - 1…

அம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகளை ஆராய குழு நியமனம்

அம்­பாறை மாவட்ட கரும்புச் செய்கை விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வு­களை காண்­ப­தற்கு ஏது­வாக, குழு­வொன்றை நிய­மித்து, அதன் அறிக்­கையை ஒன்­றரை மாதங்­க­ளுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் தம்மை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் முன்­னி­லை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். கரும்புச் செய்­கையில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக பொரு­ளா­தார ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு தேவை­யான…

வக்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்: விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு நியமனம்

36 வருட கால­மாக எவ்­வித மாற்­றங்­க­ளுக்கோ திருத்­தங்­க­ளுக்கோ உட்­ப­டுத்­தப்­ப­டாத வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற நவீன சீர்­தி­ருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் அடுத்­த­வாரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­க­வுள்ளார். வக்பு சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை வரைபு செய்­வ­தற்­காக ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் 7 பேர் கொண்ட குழு­வொன்றும்…

சூடானில் கல்வியியலாளர்கள், ஒலிபரப்பாளர்கள் கைது

கல்­வி­யி­ய­லா­ளர்கள், ஒலி­ப­ரப்­பா­ளர்­களைக் கொண்ட குழு­வொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தலை­நகர் கார்ட்­டூமில் வைத்து சூடான் பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக சூடா­னிய ஊடக சங்கம் தெரி­வித்­துள்­ளது. ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக கார்ட்­டூமில் அமைந்­துள்ள தகவல் அமைச்­சுக்கு முன்னால் எதிர்த்­த­ரப்பு சூடா­னிய தொழில்சார் நிபு­ணர்கள் அமைப்­பினால் ஆர்ப்­பாட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அது நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக இந்தக் கைது இடம்­பெற்­றுள்­ளது என அர­ச­சார்­பற்ற நிறு­வனம் ஒன்றின்…