அம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகளை ஆராய குழு நியமனம்

அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

0 551

அம்­பாறை மாவட்ட கரும்புச் செய்கை விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வு­களை காண்­ப­தற்கு ஏது­வாக, குழு­வொன்றை நிய­மித்து, அதன் அறிக்­கையை ஒன்­றரை மாதங்­க­ளுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் தம்மை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் முன்­னி­லை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். கரும்புச் செய்­கையில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக பொரு­ளா­தார ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு தேவை­யான இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்­டத்தில் மூன்று தசாப்த கால­மாக சீனி உற்­பத்­திக்கு தேவை­யான கரும்புச் செய்­கையில் உரிய அனு­மதி பத்­தி­ரங்­க­ளுடன் ஈடு­பட்டு வரும் நிலையில், கல்­லோயா பெருந்­தோட்ட (பிரத்­தியேக) கம்­ப­னியின் செயற்­பா­டு­களின் கார­ண­மாக வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்ட நிலை­யி­லுள்ள கரும்பு செய்கை விவ­சா­யிகள் அமைச்சர் ஹக்­கீ­முடன், பெருந்­தோட்ட கைத்­தொழில் துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்­கவை கொழும்பு தேயிலை சபையின் கேட்போர் கூடத்தில் சந்­தித்து தமது பிரச்­சி­னைகள் பற்றி முறை­யிட்ட போது, சம்­பந்­தப்­பட்ட தனியார் கம்­ப­னியின் சார்­பிலும் உயர் அதி­கா­ரிகள் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர்.

ஆரம்­பத்தில் இந்த பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி அமைச்சர் ஹக்கீம் விளக்­க­ம­ளித்த பின்னர், கரும்பு செய்­கையில் ஈடு­படும் விவ­சா­யி­களின் பிர­தி­நி­திகள் அமைச்சர் நவீன் திசா­நா­யக்­க­விடம் தமக்கு போதிய வரு­மானம் இல்­லாத கார­ணத்­தினால் நெற் செய்­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

பிரஸ்­தாப தனியார் கம்­பனி, கரும்பு செய்­கை­யா­ளர்­களை பயன்­ப­டுத்தி தங்­க­ளுக்கு மட்டும் இலா­ப­க­ர­மாக நடந்­து­கொள்­வ­தா­கவும், பாதிக்­கப்­பட்ட வறிய கரும்பு செய்­கை­யா­ளர்­களை நஷ்­டத்­திற்­குள்­ளாக்கி வரு­வ­தா­கவும், அமைச்சர் நவீன் திசா­நா­யக்­க­விடம் அவர்கள் ஆத்­தி­ரத்­துடன் கூறினர். சம்­பந்­தப்­பட்ட கம்­ப­னியின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் அங்கு முன்­வைத்த தக­வல்கள் முற்­றிலும் தவ­றா­னவை என்றும் விவ­சா­யிகள் தெரி­வித்­தனர்.

கரும்பு செய்­கையில் ஈடு­படும் இந்த விவ­சா­யிகள் யுத்தம் நில­விய காலத்­திலும் 1990 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2012ஆம் ஆண்டு வரை கரும்புச் செய்­கையில் ஈடு­ப­டு­வ­தை­வி­டுத்து நெற் பயிர் செய்­கையில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும், ஆனால், இப்­பொ­ழுது குறிப்­பிட்ட கம்­பனி தங்­க­ளுக்கு கரும்பு செய்­கைக்கு தேவை­யான நிலத்தை பண்­ப­டுத்தல், உரம், களை நாசி­னிகள், அறு­வடை செலவு என்­ப­வற்றை வழங்­கி­விட்டு, உற்­பத்தி செய்த கரும்பின் நிறையை அள­விட்டு கொள்­வ­னவு செய்­யும்­பொ­ழுது வட்­டி­யுடன் சேர்த்து செலவை கழித்­து­விட்டு சிறிய தொகை பணத்­தையே தங்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக விவ­சா­யிகள் விசனம் தெரி­வித்­தனர்.

1965 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தால் கரும்பு செய்­கைக்­காக தங்­க­ளுக்கு 6 ஏக்கர் காணி வழங்­கப்­பட்­ட­தா­கவும், 1968ஆம் ஆண்­ட­ளவில் அந்த காணிகள் தலா 4 ஏக்­கர்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

குடும்பச் செல­வி­னங்கள், பிள்­ளை­களின் படிப்பு செலவு என்­ப­வற்றை சமா­ளிக்க முடி­யாமல் தாங்கள் திண்­டா­டு­வ­தா­கவும் அவர்கள் கூறி­னார்கள். இவற்றை கவ­ன­மாக செவி­ம­டுத்த அமைச்சர் நவீன் திசா­நா­யக்க விவசாயிகளின் மனக்­கு­றை­களை தாம் நன்கு புரிந்­து­கொண்­ட­தா­கவும், அமைச்சர் ஹக்கீம் தலை­மையில் தம்மை சந்­தித்து பிரச்­சி­னைக்­கான தீர்வை பெற முன்­வந்­துள்ள விவ­சா­யி­க­ளுக்கு, தமது அமைச்சின் மேல­திக செய­லாளர் ஜனக தர்­ம­கீர்த்தி தலை­மையில் தாம் நிய­மித்த குழுவின் அறிக்கை 45 நாட்­களில் கிடைத்­த­வு­டனே உரிய தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டை மதிப்பிட்டு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, வாங்காமம், அக்கரைப்பற்று, நுரைச்சோலை, அட்டாளைச்சேனை, ஆலங்குளம், சம்மாந்துறை, ஹிங்குராண, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிகளவில் வசித்து வருவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.