மிஹிந்தலை தூபி விவகாரம்: இரு மாணவர்களும் விடுதலையாகலாம்

மிஹிந்­தலை பிர­தே­சத்தில் பௌத்த புரா­தன சின்­னங்கள் மீது ஏறி படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாண­வர்கள் தொடர்­பான வழக்கு இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு அவர்கள் விடு­விக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. குறித்த மாண­வர்­க­ளுக்கு எதி­ரான குற்­ற­வியல் அறிக்­கையை பொலிசார் இன்­றைய தினம் நீதி­மன்றில் தாக்கல் செய்­வார்கள் என்றும் குறித்த அறிக்­கையில் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இல்லை என்றும் தொல்­பொ­ரு­ளியல் திணைக்­கள அதி­காரி ஒருவர்…

பதிவு செய்யப்படாத முகவர்களூடாக ஹஜ், உம்ராவுக்கு செல்ல வேண்டாம்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளப்­ப­டாத எந்­தவோர் ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டாகவும் ஹஜ், உம்ரா பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்டாம் என அரச ஹஜ் குழு மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டி­ராத போலி ஹஜ், உம்ரா முக­வர்கள் ஊடாக பய­ணங்­களை மேற்­கொண்ட பய­ணிகள் இம்­மு­கவர் நிலை­யங்கள் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ள­த­னாலே இவ் அறி­வு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­வ­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி. சியாத் தெரி­வித்தார். அவர்…

இந்திய விமானி இன்று விடுவிக்கப்படுகிறார்

அமைதி மற்றும் நல்­லெண்ண அடிப்­ப­டையில் அபி­நந்தன் நாளை (இன்று) விடு­விக்­கப்­ப­டுவார் என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் நேற்று அறி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பாகிஸ்தான் வான் பரப்­புக்குள் நுழைந்த இந்­திய போர் விமா­னத்தை பாகிஸ்தான் சுட்­டு­வீழ்த்­தி­யது. இதில் இந்­திய விமா­னி­யான அபி­நந்தன் கைது செய்­யப்­பட்டார். இவரை கடந்த இரு தினங்­க­ளாக பாகிஸ்தான் மிகவும் கண்­ணி­ய­மாக நடாத்­தி­வந்த நிலையில் அவரை நல்­லெண்ண அடிப்­ப­டையில் விடு­தலை செய்யத் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாகிஸ்தான் பிர­தமர்  இம்ரான் கான் நேற்­றைய தினம்…

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தி: 27 மில்லியன் நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை தொடர்ந்தும் கால தாம­தப்­ப­டுத்­தாமல் விரைவில் பெற்­றுத்­த­ரு­மாறு பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபைத்­த­லை­வர்­களும் அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் சேதம் 4 ½ கோடி ரூபாவென அப்­போ­தைய நிர்­வாக சபை­யினால் மதிப்­பீடு…