அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தி: 27 மில்லியன் நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்

ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாஹ்விடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை

0 774

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை தொடர்ந்தும் கால தாம­தப்­ப­டுத்­தாமல் விரைவில் பெற்­றுத்­த­ரு­மாறு பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபைத்­த­லை­வர்­களும் அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் சேதம் 4 ½ கோடி ரூபாவென அப்­போ­தைய நிர்­வாக சபை­யினால் மதிப்­பீடு செய்­யப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டும் பள்­ளி­வா­ச­லுக்­கான சேதம் 27 மில்­லியன் ரூபா என அரச நிறு­வ­னங்­களால் மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் நஷ்­ட­ஈ­டாக 27 மில்­லியன் ரூபா வழங்­க­மு­டி­யாது எனவும் ஒரு மில்­லியன் ரூபாவே நஷ்­ட­ஈ­டாக வழங்க முடியும் எனவும் அமைச்­ச­ரவை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் பள்­ளி­வா­ச­லுக்கு நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த 27 மில்­லியன் ரூபாவும் தாம­த­மில்­லாமல் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென பள்­ளி­வா­சலின் அப்­போ­தைய தலைவர் ஏ.எல்.ஆர். ஹாரூன் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை, புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பையின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 3.6 மில்­லியன் ரூபாவே வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு மில்­லியன் ரூபாவே ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அம்­பாறை வன்­செ­யல்கள் இடம்­பெற்று ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் நஷ்­ட­ஈ­டு­களைத் துரி­தப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­திக்கு அழுத்தம் கொடுப்­ப­தாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அம்­பா­றையில் இயங்­கி­வந்த காசிம் ஹோட்­டலில் கருத்­தடை மாத்­தி­ரைகள் கலக்­கப்­பட்ட உண­வுகள் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு பரி­மா­றப்­ப­டு­கின்­றன என்று குற்­றச்­சாட்டி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இரவு பெரும்பான்மை இனத்தவர்கள் ஹோட்டலைத் தாக்கியதுடன் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலையும் தாக்கினார்கள். அம்பாறையில் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் தொடர்ந்தும் வழங்கப்படாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.