தேசிய காங்கிரஸிலிருந்து விலகினார் உதுமாலெவ்வை

தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தான் முற்று முழுதாக விலகிக் கொள்வதோடு, இக்கட்சியின் பெயரால் தான் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைளை விட்டும் நீங்கிக் கொள்வதாகவும் இவ்விடயம் தொடர்பில் பத்தொன்பது பக்கங்கள் அடங்கிய கடிதமொன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை…

அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது திடீர் தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் பகுதியில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசலினுள் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது இஸ்ரேலியப் படையினர் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை தாக்குதல் நடத்தினர் இதன்போது பலர் காயமடைந்த அதேவேளை ஏனையோரை இஸ்ரேல் படையினர் கைது செய்தனர் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர். சர்ச்சைக்குரியதாகக் காணப்படும் பள்ளிவாசலின் அல்ரஹ்மா நுழைவாயிலுக்கு அருகே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சம்பவத்தோடு தொடர்புடைய இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கையினை தெரிவிக்கவில்லை. காயமடைந்த நபர்…

பாராளுமன்ற உறுப்பினர்களில் கொக்கைன் பாவிப்பது யார்?

கொக்கைன் பாவிக்கும் 24 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார்? அவர்களின் பெயர்ப் பட்டியலை உடனடியாக சபையில் முன்வைத்து மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சனிடம் இருந்தே விசாரணையை ஆரம்பித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் அலல்து பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன,…