எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி

எத்­தி­யோப்­பி­யாவில் இருந்து கென்ய தலை­நகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று விபத்தில் சிக்­கி­யது. இதில் பய­ணித்த 149 பய­ணிகள், 8 ஊழி­யர்கள் என மொத்தம் 157 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டுச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மீட்புப் பணிகள் துரி­த­மாக இடம்பெற்று வரு­கின்ற நிலையில், உயிரிழந்தவர்­களின் குடும்பத்தினருக்கு அந்­நாட்டு ஜனா­தி­பதி அலுவ­லகம் அனுதா­பங்­களை தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபி­ரிக்க நாடு எத்­தி­யோப்யா. இந்த நாட்டின் தலை­நகர் அடிஸ் அபா­பாவில் இருந்து எத்­தி­யோப்­பியன்…

காஸாவில் அல்-கஸ்ஸாம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

பலஸ்­தீ­னத்தின் ஹமாஸ் குழுவின் இரா­ணுவப் பிரி­வான அல்-­–கஸ்ஸாம் படை­ய­ணியின் மேற்குக் காஸா­வி­லுள்ள இரா­ணுவ காவ­ல­ரண்கள் மீது இஸ்­ரே­லிய ஜெட் விமா­னங்கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கடந்த செவ்­வாய்­கி­ழமை சம்­ப­வத்தை நேரில்­கண்டோர் தெரி­வித்­தனர். இஸ்­ஸதீன் அல்-­–கஸ்ஸாம் படை­ய­ணியின் காவ­லரண் மீது ஜெட் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ள அவர்கள் உயிர்ச்­சே­தங்கள் தொடர்பில் எத­னையும் தெரி­விக்­க­வில்லை. எரியும் தன்மை கொண்ட பலூன்­களை இஸ்­ரே­லினுள் பறக்­க­விட்­ட­மைக்கு பதி­லடி கொடுக்கும்…

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பில் துண்டு பிரசுரம்

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும்…

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

இந்­தே­னே­சி­யாவின் வடக்கு சுல­வேசி மாகா­ணத்தில் தங்கச் சுரங்­க­மொன்று இடிந்து வீழ்ந்­ததில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 16 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­தாக தேசிய அனர்த்த முன்­னா­யத்த முக­வ­ர­கத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். விபத்தின் தற்­போ­தைய நிலை­வரம் தொடர்பில் தகவல் வெளி­யிட்ட பேச்­சாளர் சுடோபோ புர்வோ நுக்­ரோஹோ, கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் மேலும் ஏழு உடல்கள் கண்­டெ­டுக்கப் பட்­ட­தாகத் தெரி­வித்தார். மீட்புப் பணி­யா­ளர்கள் இது­வரை 18 பேரை உயி­ருடன் மீட்­டுள்­ளனர் எனவும் நுக்­ரோஹோ தெரி­வித்தார். அனு­மதி…