சுற்று நிருபத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

பொது­நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் வெளி­யிட்­டி­ருந்த அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அரச சேவை­யி­லுள்ள பெண்கள் சேலை அல்­லது ஒசரி என்ற ஆடையே அணிந்து கட­மைக்கு வர­வேண்டும் என்று பொது­நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டி­ருந்த சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை பொது­நிர்­வாகம் அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த அமைச்­ச­ரவைப்…

இஸ்லாம் பாடநூல் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம்

இஸ்­லா­மிய பாடப்­புத்­த­கங்­களில் இன­மு­று­கல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அடிப்­படை வாதம் மற்றும் பயங்­க­ர­வாத கருத்­துகள் இருந்தால் அவற்றை நீக்கி பாடப்­புத்­த­கங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் தேசிய பாட­சா­லை­க­ளுக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் ஜயந்த விக்­ர­ம­நா­யக்க தெரி­வித்தார். அடிப்­ப­டை­வாதி ஸஹ்ரான் போன்றோர் உரு­வா­கு­வ­தற்கு கல்வி அமைச்­சினால் 1980 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வெளி­யி­டப்­பட்ட இஸ்­லா­மிய பாட­நூல்­களே காரணம் என அண்­மையில் …

வீடுகள், தனியார் நிறுவனங்களிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றத் தேவையில்லை

அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அரச நிறு­வ­னங்­க­ளிலும் வீதி­க­ளிலும் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த முடி­யாது. வீடு­க­ளிலும், தனியார் நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் பயன்­ப­டுத்த முடியும் என தேசிய நல்­லி­ணக்க அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். கல்­மு­னையில் அல்­ஹா­மியா அறபுக் கல்­லூ­ரி­யி­லுள்ள அறபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸாரால் விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை யடுத்து அவ்­வி­வ­காரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

இஸ்லாம் பாடநூலில் பயங்கரவாத கருத்து

பாட­சா­லை­களில் இஸ்லாம் மதத்தைக் கற்­பிக்கும் பாட­நூல்­களில் அடிப்ப­டை­வாதம் மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பான கருத்­துகள் உள்­ள­டங்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவற்றை இஸ்லாம் பாட­நூல்­க­ளி­லி­ருந்து நீக்­கு­மாறும் கோரி சிங்­களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்­திர நிலை­யமும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளன. இஸ்­லாத்­தி­லி­ருந்து ஏனைய மதங்­க­ளுக்கு மதம் மாறு­ப­வர்­க­ளையும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளையும் கொலை செய்து தண்­டனை நிறை­வேற்ற வேண்டும் என இஸ்லாம் சமய பாடப்­புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அண்­மையில்…