வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!

உடன் தடுத்து நிறுத்திய பொலிஸார்

0 747

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அரபு மத்­ர­ஸாக்கள் தடை செய்­யப்­பட வேண்டும். தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­களின் கலா­சார உடைக்கு குறிப்­பாக முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்­களின் அபா­யா­வுக்கு கூட அரச அலு­வ­ல­கங்­களில், பாட­சா­லை­களில் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அபா­யா­வுடன் கட­மைக்குச் செல்லும் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு பாட­சா­லைகள் தடை விதித்­துள்­ளன.

இந்த வரி­சையில் அண்­மையில் வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் வென்­னப்­புவ பிர­தேச செய­ல­கத்தின் அதி­கார எல்­லைக்­குட்­பட்ட தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரிகள் வியா­பாரம் செய்­வ­தற்குத் தடை விதித்­துள்ளார். அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­களின் இன ரீதி­யான தன்­னிச்சை தீர்­மா­னங்­க­ளுக்கு இது சிறந்த உதா­ர­ண­மாகும். அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் நாட்டில் தேசிய ஒற்­று­மை­யையும் இனங்­க­ளுக்கு மத்­தியில் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தற்குப் பதி­லாக இன­வா­தத்தை ஊதிப் பெருப்­பிக்­கி­றார்கள் என்­பது இதன் மூலம் நிரூ­ப­ண­மா­கி­றது.

தங்­கொட்­டுவ வாராந்த சந்தை

வென்­னப்­புவ நக­ரி­லி­ருந்தும் 7 கிலோ மீற்றர் தொலைவில் தங்­கொட்­டுவ நகர் வாராந்த சந்தை அமைந்­துள்­ளது. தங்­கொட்­டுவ வாராந்த சந்தை வென்­னப்­புவ பிர­தேச சபையின் நிர்­வா­கத்தின் கீழேயே நடை­பெ­று­கி­றது. இந்தச் சந்­தைக்கு வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சுமார் 100க்கும் மேற்­பட்ட முஸ்லிம் வியா­பா­ரிகள் வருகை தரு­கி­றார்கள்.

தங்­கொட்­டுவ வாராந்த சந்தை ஒவ்வோர் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை முதல் திங்­கட்­கி­ழமை மாலை­வரை இடம்­பெ­று­கி­றது. இச்­சந்­தைக்கு வர்த்­தகம் செய்­வ­தற்­காக குரு­ணாகல், குளி­யாப்­பிட்டி உட்­பட பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் முஸ்லிம் வியா­பா­ரிகள் வருகை தரு­கின்­றனர்.

இச்­சந்­தையில் 100 ற்கும் மேற்­பட்ட முஸ்லிம் வியா­பா­ரிகள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் அதே­வேளை பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்­பட்ட வியா­பா­ரிகள் கலந்து கொண்டு வியா­பாரம் செய்­கி­றார்கள்.

முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு தடைகள்

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களில் தங்­கொட்­டு­வை­யிலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டன. ஏப்ரல் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் பெரும்­பான்­மை­யின வர்த்­த­கர்கள் முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு எதிர்ப்­புகளை வெளி­யிட்­டனர். தூசன வார்த்­தை­களைப் பிர­யோ­கித்­தனர். முஸ்லிம் வியா­பா­ரிகள் ஐவரை வர்த்­தகம் செய்ய விடாது விரட்­டி­ய­டித்­தனர்.
இத­னை­ய­டுத்து துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளான முஸ்லிம் வியா­பா­ரிகள் 10 பேர் கையொப்­ப­மிட்டு பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை எழுதி முறைப்­பாடு செய்­தனர். அந்த முறைப்­பாட்டு கடி­தத்­தினை பொலிஸ் தலை­மை­ய­கத்தில் கைய­ளித்­தனர்.

2019.06.19 ஆம் திக­தி­யிட்ட பொலிஸ் மா அதி­ப­ருக்கு கைய­ளிக்­கப்­பட்ட கடி­தத்தில் தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பாரம் செய்யும் முஸ்லிம் வியா­பா­ரிகள் தங்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­களை விளக்­கி­யி­ருந்­தனர். ‘பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தை வியா­பா­ரிகள் நாங்கள் வியா­பாரம் செய்­வதை எதிர்க்­கி­றார்கள். தூசன வார்த்­தை­க­ளினால் ஏசு­கி­றார்கள். எங்­களில் 5 வியா­பா­ரி­களை விரட்­டி­ய­டித்­தார்கள். இது தொடர்பில் நாங்கள் 119 பொலிஸ் அவ­சர அழைப்­புக்கு மூன்று தட­வைகள் அறி­வித்தும் எவ்­வித பயனும் ஏற்­ப­ட­வில்லை.

அத­னை­ய­டுத்து முஸ்லிம் வியா­பா­ரிகள் நாங்கள் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறை­யிட்டோம். பொலிஸ் நிலை­யத்தில் எங்­க­ளது முறைப்­பாட்­டினைப் பதிவு செய்­ய­வில்லை. சில தினங்கள் வாராந்த சந்­தைக்குச் செல்ல வேண்டாம் என்றே பொலிஸார் கூறி­னார்கள்.

பொலி­ஸிலும் எங்­க­ளுக்கு நியாயம் கிடைக்­கா­ததால் வென்­னப்­புவ பிர­தேச சபையில் முறை­யிட்டோம். வென்­னப்­புவ பிர­தேச சபை­யிலும் எங்­க­ளுக்கு நியாயம் கிடைக்­க­வில்லை.

வாராந்த சந்­தையில் சமா­தா­னத்தை குலைக்கும் முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே எங்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறும். நாம் வழ­மைபோல் வியா­பார நட­வ­டிக்­கைளில் ஈடு­ப­டு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்து தரு­மாறும் வேண்­டு­கிறோம் என்று அந்தக் கடி­தத்தில் குறி­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பிர­தேச சபைத் தலை­வரின் தடை­யுத்­த­ரவு

இவ்­வா­றான நிலை­யிலே வென்­னப்­புவ பிர­தேச சபைத்­த­லைவர் கே.வி. சுசந்த தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரிகள் வியா­பாரம் செய்­வ­தற்கு தற்­கா­லிக தடை விதித்தார். இந்தத் தடையை அமுல்­ப­டுத்­து­மாறும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அவர் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு கடி­த­மொன்­றி­னையும் அனுப்பி வைத்­தி­ருந்தார். வென்­னப்­புவ பகு­தியில் பாது­காப்­பினை பலப்­ப­டுத்­து­மாறும் வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அவர் அனுப்பி வைத்­தி­ருந்த கடி­தத்தில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

‘தங்­கொட்­டுவ வாராந்த சந்தை தற்­போது வென்­னப்­புவ பிர­தேச சபையின் பொறுப்பின் கீழ் செயற்­ப­டு­கி­றது. ஏப்ரல் அடிப்­படை வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் இனக் கல­வ­ரங்கள் தோற்றம் பெற்­றன. தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் பல இன மக்கள் வியா­பார நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­டுள்­ளனர். இங்கு முஸ்லிம் வியா­பா­ரி­களும் உள்­ள­மை­யினால் பல மாறு­பட்ட கருத்­து­களும் முரண்­பா­டான சூழ்­நி­லை­களும் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லைமை தொட­ரு­மானால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது பல விளை­வுகள் இடம்­பெறும்.

முரண்­பா­டு­களைத் தீர்த்து அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்தி இப்­பி­ர­தேச பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த வேண்டும். எனவே முஸ்லிம் வியா­பா­ரிகள் தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கைளில் ஈடு­ப­டு­தற்கு தற்­கா­லிக தடையை அமுல்­ப­டுத்த உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பிர­தேச சபைத் தலைவர் தன்­னி­சை­யா­கவே இந்த தடை­யுத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்ளார். பிர­தேச சபையின் தீர்­மா­னங்கள் சபை அமர்­வி­லேயே மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யீடு

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­கி­ர­ம­ரத்­ன­விடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் வர்த்­த­கர்கள் சார்பில் எம்.ஐ.எம். யாசீன் சமூக நல்­லி­ணக்­கத்­துக்­கான குழுவின் தலைவர் என்.எம். அமீ­னி­னிடம் புகார் தெரி­வித்தார். அவர் இவ்­வி­வ­கா­ரத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளார்.

பிர­தேச சபைத் தலை­வ-­ருக்கு அழைப்­பாணை

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்­லிம்கள் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் வென்­னப்­புவ பிர­தேச சபைத்­த­லைவர் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­தமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு மார­வில நீதிவான் நீதி­மன்று அழைப்­பாணை அனுப்பி வைத்­துள்­ளது. அவர் இன்று 28 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் நிலை­யத்தில் முஸ்­லிம்­களால் பதிவு செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலே இந்த அழைப்­பாணை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இன­வெறிச் செயல்

முஸ்­லிம்கள் வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட தடை செய்­துள்­ள­மையை வன்­மை­யாகக் கண்­டித்­துள்ள நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர அதனை இன­வெ­றிச்­செயல் எனவும் வர்­ணித்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கட்­டுப்­பாட்டில் உள்ள உள்­ளூ­ராட்சி சபையே இந்தத் தடையை விதித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த 15 வரு­டங்­க­ளாக இச்­சந்­தையில் எவ்­வித முரண்­பா­டு­க­ளு­மின்றி அனைத்து இன வியா­பா­ரி­களும் ஒற்­று­மை­யாக வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இன­வாதம் பேசும் கட்­சி­யி­னரும், அர­சியல் வாதி­க­ளுமே இவ்­வா­றான மோச­மான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்­றனர்.

தடைக்கு இட­ம­ளிக்க முடி­யாது

‘வென்­னப்­புவ பிர­தேச சபைக்கு எதி­ராக நீதி­மன்ற உத்­த­ர­வினை நாங்கள் பெற்­றி­ருக்­கிறோம். இஸ்­லா­மிய வெறுப்­பு­ணர்­வான இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது’ என பொலிஸ் அத்­தி­யட்­சகர் கே.ஏ.பி.குமா­ர­பெலி ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைத் தலைவர் முஸ்லிம்களை வரவேண்டாம் எனவும் அவர்கள் அங்கு வருவது பிராந்தியத்தில் வன்முறையைத் தூண்டும் எனவும் கூறியிருக்கிறார். அந்தப் பகுதியில் அதிகளவு கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் இந்தப் பிராந்தியம் அதிகம் பாதிக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபையினால் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. சபையின் தலைவர் சமூகங்களுக்கிடையில் பதற்றத்துக்கு காரணமாக இருப்பதனால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் நீதிமன்றினைக் கேட்டிருந்தோம். அதன்படி விசாரணை வெள்ளிக்கிழமை இடம்பெற்வுள்ளது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயற்படுவது ஆபத்தானதாகும். இந்நிலைமை நாட்டில் மீண்டும் வன்முறைகளுக்கு தூபமிடுவதாகவே அமையும். இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்க வேண்டியது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்களின் பொறுப்பாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.