ரதன தேரரின் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை

ஆளும் கட்சி உறுப்பினர் மஸ்தான்

0 668

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்­தாலும் அதற்கு ஆத­ரவு கிடைக்­கப்­போ­வ­தில்லை. அந்த தனி­நபர் பிரே­ரணை தோல்­வி­யி­லேயே முற்­றுப்­பெறும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி­நபர் பிரே­ரணை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் அர­சாங்கத் தரப்­பிலும் இதற்கு ஆத­ரவு கிடைக்­காது.

தங்­க­ளது வாக்கு வங்­கியை நிரப்பிக் கொள்­வ­தற்­கா­கவே இன­வாத நோக்குக் கொண்­ட­வர்கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கி­றார்கள்.

இன­வாதக் கொள்­கை­களைக் கொண்­டுள்­ள­வர்கள் எல்லா தரப்­பிலும் இருக்­கி­றார்கள். அத்­தோடு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா புல­னாய்வு பிரிவின் முக்­கிய பத­விக்கு முஸ்லிம் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டமைக்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்ளார்.

இது தவ­றாகும். தகு­தி­யா­ன­வர்கள் எந்தச் சமூ­கத்தில் இருந்­தாலும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.