கா­ஸாவில் பேர­வ­லம்

உயிரி­ழ­ப்­புகள் 20 ஆயி­ரத்தை எட்­டி­ன; 2 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்­வு

0 105

காஸா மீது இஸ்ரேல் வான் வழி­யா­­கவும் தரை வழி­யா­கவும் 11 ஆவது வார­மா­க­வும் தாக்­கு­தல்­களை நடத்தி வரும் நிலையில் உயி­ரி­ழப்­பு­களின் எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­தை எட்டி­­யுள்­ள­ன. அத்­துடன் தாக்­கு­தல்கள் ஆரம்­பித்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி முதல் நேற்று வரை 20 இலட்சம் மக்கள் தம­து சொந்த இடங்­களை விட்டும் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். நேற்­றைய தினம் ஜபா­லியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடாத்­தி­ய தாக்­கு­தலில் 46 பலஸ்­தீன பொது மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர்.

ரபா­ஹ் பகுதியில் உள்ள பெரிய பள்­ளி­வாசல் ஒன்று நேற்­று விமானக் குண்டுத் தாக்­கு­தலில் முற்­றாக தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று மாலை வரை ஒக்­டோபர் 7 ஆம் திக­திக்குப் பின்னர் காஸாவில் உயி­ரி­­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 19667 என அல் ஜெஸீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இஸ்ரேல் படைகள் தரை­வ­ழி­யா­கவும் காஸா­வினுள் நுழைந்­துள்ள நிலையில் அங்கு பலஸ்­தீன போரா­ளிக்­கு­ழுக்­க­ளுடன் கடு­மை­யான மோதல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை நேற்­று வரை ஹமா­ஸுக்கு எதி­ரான போரில் 464 இஸ்ரேல் இரா­ணுவத்­தினர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக ஏஏ செய்தி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
கடந்த வாரம் காஸா­வில் கடும் மழை பெய்­ததால் பல இடங்­க­ளிலும் வெள்ள நீர் நிரம்­பி­யுள்­ளது. அகதி முகாம்­க­ளி­லுள்ள கூடா­ரங்­களில் வெள்ளம் தேங்­கி­யுள்­ள­தாக மக்கள் கடும் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக சுமார் 360000 பேர் தொற்று நோய்­க­ளுக்கு முகங்­­கொ­டுத்­துள்ள ஐ.நா. முகவர் அமைப்­புகள் தெரி­விக்­கின்­ற­ன.

இதே­வேளை ஹமா­ஸின் கஸ்ஸாம் இரா­ணுவப் பிரிவின் தலை­வர் முஹம்மத் தாயிப் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வெளி­யான தக­வல்­களில் உண்­மை­யில்லை என்றும் அவ­ர் உயி­ருடன் உள்­ள­தா­கவும் இஸ்­ரே­லிய ஊடகங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இத­னி­டையே யுத்த நிறுத்தம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களும் தொடர்ந்து இட­ம்­பெற்று வரு­கின்­றன. ஹமாஸ் தலைவர் இஸ்­மாயில் ஹனியா எகிப்தில் முக்­கிய தலை­வர்­களைச் சந்­தித்­துள்ளார். ஈரான் வெளி­வி­வ­கார அமைச்­ச­­ரை­யும் அவர் சந்­தித்து பேசி­யுள்ளார்.

மேலும் ஹமாஸின் பிடி­யி­லுள்ள பணயக் கைதி­க­­ளை விடு­விக்கும் நோக்கில் மற்­று­மொரு தற்­கா­லிக யுத்த நிறுத்­தத்­திற்கு செல்ல தயா­ரா­க­வுள்ள இஸ்ரேல் ஜனா­தி­பதி ஐசாக் ஹெர்சோக் குறிப்­பிட்­டுள்­ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.