இலங்கை முஸ்லிம் ஆய்வியல் பாதையில் ஒரு வசந்தம் : கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

0 390

கலா­நிதி ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி)
இணைப்­பே­ரா­சி­ரியர்
மலே­ஷிய இஸ்­லா­மிய அறி­வியல்
பல்­க­லைக்­க­ழகம் (USIM)

 

பேரா­ளு­மையின் சின்னம், அறிவுப் பண்­பாட்டின் அடை­யாளம் மர்ஹூம் கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புல­மைத்­துவ வர­லாற்றில் தனித்­து­வ­மான இடத்தை தக்க வைத்­துக்­கொண்­டவர். தென்­னி­லங்­கையில் தோன்றி தேசி­யத்­துக்கு மாத்­தி­ர­மின்றி சர்­வ­தே­சத்­துக்கும் அறிவுத் தொண்­டாற்­றி­யவர். தேச நல­னுக்­காக உழைத்த கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் அவர்­களின் செல்­வத்தால் ஸ்தாபிக்­கப்­ப­டட ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்­துக்கு தனது அறிவால் பெரும் பங்­காற்­றி­யவர். நான்கு தசாப்த காலம் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றி அக்­க­லா­நி­லை­யத்தைச் செம்­மைப்­ப­டுத்­தி­யவர். அவர் மறைந்து மூன்று ஆண்­டுகள் கழிந்­தாலும் பலர் மனங்­களில் மறை­யாது இன்றும் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

விரி­வு­ரை­யாளர், ஆய்­வாளர், எழுத்­தாளர், மொழி­பெ­யர்ப்­பாளர், பேச்­சாளர், பரீட்­சகர், ஆலோ­சகர்… என பல்­ப­ரி­மா­ணங்­களில் பரி­ண­மித்­தவர். அவர் நம்­மி­டையே விட்­டுச்­சென்ற சிந்­த­னை­களும் கருத்­துக்­களும் ஏராளம். பல தலைப்­புக்­களில், கோணங்­களில் ஆரா­யப்­படத் தகு­தி­யா­னவர் அவர். அவ்­வ­கையில், அவர்­களின் ஆய்­வியல் ஆளுமைப் பெறு­மா­னத்தை அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கி­றது இக்­கட்­டுரை.

பன்­மொழித் தேர்ச்சி

அறி­வியல் பாரம்­ப­ரி­யத்தில் தன்­னையும் வாரி­சாக மாற்­றிக்­கொண்ட கலா­நிதி சுக்ரி, தனது புத்­தி­ஜீ­வித்­து­வத்தை வெவ்­வேறு வடி­வங்­களில் வெற்­றி­க­ர­மாக வெளிக்­காட்­டினார். Islam and Education (1979), Mankind in Peril (1979) மற்றும் Muslims of Sri Lanka: Avenues to Antiquity (1986) போன்ற நூல்கள் அவரின் ஆங்­கில மொழிப்­பு­ல­மையின் சான்­றுகள். ஆத்ம ஞானி­களும் அறப்­போ­ராட்­டங்­களும் (1984), நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் (1993), இஸ்­லாமும் மனித உரி­மை­களும் (1996), இஸ்­லா­மிய வாழ்­வியல் கோட்­பா­டுகள் (1999) போன்ற நூல்­களும் ஏனைய பல எழுத்­தாக்­கங்­களும் முஸ்லிம் தமிழ் இலக்­கி­யத்­துக்கு கலா­நிதி அவர்கள் ஆற்­றிய பங்­க­ளிப்பின் அடை­யா­ளங்கள்.

இலங்கை வானொ­லி முஸ்லிம் சேவையில் பிர­பல நிகழ்ச்­சி­யாக விளங்­கிய “தத்­துவ வித்­துக்கள்” எனும் அரபு மூலா­தா­ரங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தொடர் பேச்சு க­லா­நிதி அவர்­களின் அரபு மொழித்­தேர்ச்­சிக்கு ஓர் எடுத்­துக்­காட்டு.

தவி­ரவும் தேசிய- பன்­னாட்டு அரங்­கு­களில் பல­மொ­ழி­களில் அவர் வழங்­கிய சொற்­பொ­ழி­வுகள், மாநாட்டுப் பேரு­ரைகள், தொடக்க உரைகள், ஆய்­வு­ரைகள், ஆய்­வுக்­கட்­டு­ரைகள் சமர்ப்­பித்தல் போன்­ற­னவும் அவரின் மொழிச்­செ­ழு­மைக்கு தகுந்த சான்­றுகள். அவ்­வாறே அவர் தேசிய மொழி சிங்­க­ளத்­திலும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி, உரை­க­ளையும் நிகழ்த்த தவ­ற­வில்லை.

பல்கலை நிபு­ணத்­துவம்

நன்கு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட வாசிப்பு, தொட­ரான அறிவுத் தேடல், துறைசார் நிபு­ணர்­க­ளு­ட­னான சந்­திப்­புகள் மூலம் பரந்த அறி­வையும் விரிந்த புரி­த­லையும் பெற்­றுக்­கொண்ட கலா­நிதி அவர்கள், தஸவ்வுப் எனும் தனது துறைசார் கல்­விக்கு அப்பால் பல கலை­க­ளிலும் கால் பதிக்­க­லானார். அல்­குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், தமிழ் இலக்­கியம், அரபு மொழி, மெய்­யியல், மதங்கள், வர­லாறு, சமூ­க­வியல், ஆய்வு முறைமை போன்ற இன்­னோ­ரன்ன துறை­களில் பாண்­டித்­தி­யத்தை அவர் வெளிப்­ப­டுத்­தினார்.

அல்­குர்­ஆனும் அதன் வாழ்­வி­யலும், ஹதீஸும் கீழைத்­தேய வாதி­களும், சட்ட மர­பு­களை தோற்­று­வித்தோர், சூபி தரீ­காக்­களின் தோற்­றமும் வளர்ச்­சியும், இப்னு கல்­தூனின் இல்முல் உம்ரான், இலங்­கையில் யூனானி மருத்­துவம், இஸ்­லா­மிய நோக்கில் தொல்­பொ­ரு­ளியல், இஸ்­லா­மிய கட்­டடக் கலை பாரம்­ப­ரி­யமும் அதன் வர­லாற்று வளர்ச்­சியும், இமாம் கஸ்­ஸாலி (ரஹ்) அறிவுக் கோட்­பாடும் தத்­து­வமும், முஸ்லிம்- பௌத்த உரை­யாடல் பற்­றிய ஒரு நோக்கு முத­லான கலா­நிதி சுக்ரி அவர்­களின் ஆய்வுக் கட்­டு­ரைகள் உள்­ள­டங்­க­லான எழுத்­தாய்வுப் பணிகள் அவரின் புல­மைப்­பன்­மு­கப்­பாட்­டுக்கு உதா­ர­ணங்­க­ளாகத் திகழ்­கின்­றன.

மேலும், நளீ­மிய்யா வெளி­யீட்டு பணி­ய­கத்தின் முத்­திங்கள் ஆய்­விதழ் “இஸ்­லா­மிய சிந்­த­னை”யில் காலத்­துக்­கேற்ற தலைப்­புக்­களில் யதார்த்­த­பூர்­வ­மாக அவர் எழு­திய சுமார் 120 ஆசி­ரியர் கருத்­துக்­களை ஆழ அறிந்த அறி­வியல் களஞ்­சியம் எனக் கொள்­ளலாம்.

ஒருங்­கி­ணைந்த அறிவு(Integrated Knowledge)

பல சர்­வ­தேச இஸ்­லா­மிய பேர­றி­ஞர்கள் இஸ்­லா­மியப் பார்­வையில் அறிவை ஒன்­றி­ணைத்தல் (Integration of Knowledge),அறிவை இஸ்­லா­மிய மய­மாக்கல் (Islamization of Knowledge)ஆகிய தலைப்­புக்­களில் கருத்­துக்­களை வெளி­யிட்டு அதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இந்த கருத்­தாடல் நீரோட்­டத்தில் இணைந்து கொண்ட கலா­நிதி சுக்ரி, இலங்­கையில் இச்­சிந்­த­னையை ஒழுங்­க­மைக்­கப்­பட்ட விதத்தில் அறி­வியல் பூர்­வ­மாக அறி­முகம் செய்­தவர் எனக் குறிப்­பிட முடியும்.

Islam and Education (நூல், 1979),இஸ்­லா­மிய கல்­வித்­தத்­துவம் (ஆய்வுக் கட்­டுரை 1985), மதமும் அறி­வி­யலும் (நூல், 1994), இறை­தூதின் அவ­சியம் (ஆய்வுக் கட்­டுரை 1997) போன்ற அவர்­களின் ஏனைய பல எழுத்­தாக்­கங்கள் அறிவின் முக்­கி­யத்­துவம், வகி­பாகம் பற்றி மேலும் அழ­காக விப­ரிக்­கின்­றன. அறிவின் ஒரு­மைப்­பாட்­டையும் (Unity of knowledge)ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­து­கின்­றன.

கல்வி, இலக்­கியம், வர­லாறு, உள­வியல், ஒழுக்­க­வியல், தொல்­பொ­ரு­ளியல், சூழ­லியல், ஆய்­வியல்,அழ­கியல் என பல ஆய்வுத் தலைப்­புக்­களில் நூல்கள், சஞ்­சிகை ஆக்­கங்­களை வெளி­யிட்­டுள்­ளமை கலா­நிதி சுக்ரி அவர்­களின் வர­லாற்றுச் சாத­னைக்­கான சான்று.
அறி­வு­க­ளுக்­கி­டையில் மாத்­தி­ர­மல்ல, அறி­ஞர்­க­ளுக்­கி­டை­யிலும் ஒப்பு நோக்­கு­தல்­களை மேற்­கொள்­வதன் மூலம், இஸ்­லா­மிய சிந்­த­னையை மேலும் ஆழப்­ப­டுத்த முடியும் என்­ப­தற்கு அவர் உதா­ரண புரு­ஷ­ராக விளங்­கி­யுள்ளார். பார­தி, -­இக்பால், இமாம் கஸ்­ஸாலி -டேகார்ட், இப்னு கல்தூன் – ஆகஸ்ட் காம்ட் போன்ற ஆளு­மை­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பீட்­டாய்­வுகள் அவற்றுள் சில.

ஆராய்ச்சி முறைமை (Research Methodology)

ஆய்வு ஒரு தேசத்தின் அச்­சாணி, ஒரு சமூ­கத்தின் உயிர் நாடி. இவ்­வ­கையில், ஆய்வை சரி­யாகப் புரிந்து, முறை­யாகப் பயன்­ப­டுத்தி, அதற்­கான முன்­மா­தி­ரி­க­ளையும் காட்டிச் சென்­றவர் என்ற வகையில், இலங்கை முஸ்லிம் ஆய்­வா­ளர்கள் பட்­டி­யலில் பிர­தான இடத்தைப் பிடித்துக் கொள்­கிறார் கலா­நிதி சுக்ரி.

அவரின் ஆய்வு வெளி­யீ­டுகள் அசல் தன்மை (Originality) கொண்­டவை, இலக்­கியக் கொள்­ளை­யி­லி­ருந்து (Plagiarism) பரி­சுத்­த­மா­னவை. ஆய்வுப் பிரச்­சினை (Problem Statement) , அதன் நோக்­கங்கள் (Research Objectives), இலக்­கி­யத்­தி­ற­னாய்வு (Literature Review),முறை­மைகள் (Research Methods), தலைப்பின் முக்­கி­யத்­துவம் (Significance of the Study) முதன்மை, இரண்­டாம்­நிலை ஆதா­ரங்கள் (Primary and Secondary Sources) போன்ற ஆராய்ச்சி விதி முறை­களை தனது நூல்­க­ளிலும் சஞ்­சிகை ஆக்­கங்­க­ளிலும் அவர் முறை­யாகக் கையாண்­டுள்ளார். விளக்க பகுப்­பாய்வு (Descriptive Analysis), ஒப்­பீட்­டாய்வு, விமர்­சன நோக்கு, வர­லாற்று அணுகு முறை­களை கலா­நிதி அவர்கள் எழுத்­தாக்­கங்­களில் அதி­க­மாக கடைப்­பி­டித்­துள்ளார்.

முதன்மை மூலா­தா­ரங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட மேற்­கோள்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கிய அவர், இமாம்கள், கலை மேதைகள், வர­லாற்று ஆய்­வா­ளர்­களின் பாரம்­ப­ரிய நூல்­களை அதிகம் நேசிப்­ப­வ­ராக இருந்தார். அவை “வழுக்கல் இல்­லாத வலு­வான தக­வல்கள்” எனும் அவரின் அறி­வி­யல்­பூர்வ வாதத்தை அல்­லது நியா­யத்தை ஆராய்ச்சி நிபு­ணர்கள் நன்கு புரிந்து கொள்வர். அத்­துடன், சரித்­தி­ரச்­சான்­றுகள், மெய்­யியல் அணு­கு­மு­றை­க­ளையும் ஆய்வு நட­வ­டிக்­கையில் கையாள அவர் தவ­ற­வில்லை.

காத்­தி­ர­மான ஆய்­வியல் ஆக்­கங்­களை கச்­சி­த­மாக முன்­வைத்த கலா­நிதி அவர்­களின் ஆராய்ச்சிப் பண்­பி­யல்­பு­க­ளையும் கோடிட்டுக் காட்­டு­வது இங்கு பொருத்தம். கவ­னக்­கு­விப்பு (Focus), ஆழ்ந்த வாசிப்பு, இடை­வி­டாத தேடல், விசால ஆய்வுப் பார்வை, வாசி­க­சாலைத் தரி­சனம், பகுப்­பாய்வுத் திறன் (Analytical Ability),நேர முகா­மைத்­துவம், கருத்­துக்­களை தொகுத்து அவற்றை அழ­காக முன்­வைக்கும் வல்­லமை என பல­வற்றைக் கூறலாம். இவை தவிர, எளிமைச் சுபாவம், நடு­நிலைச் சிந்­தனை, ஆர­வா­ர­மற்ற போக்கு, அறி­வுசார் மாற்றுக் கருத்­துக்­களை மதித்தல் போன்­றவை அவர்­களின் பேரா­ளுமைக் குணங்­களை அலங்­க­ரிக்கும் மேல­திக நற்­பண்­புகள்.

ஆய்­வியல் முன்­மொ­ழிவு

அறி­வியல் மற்றும் ஆய்­வுத்­துறை தொடர்­பான கருத்­தாடல் கலா­நிதி அவர்­களின் பேச்­சுக்­க­ளிலும் எழுத்­துக்­க­ளிலும் அதி­க­மாக கரு­வூ­ல­மிட்­டு­ருந்­ததை அவ­தா­னிக்க முடி­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் சமூகம், ஆய்­வுத்­து­றையில் அதிக அக்­கறை காட்ட வேண்டும் எனும் கருத்தை அதி­க­மாக வலி­யு­றுத்தி வந்­தவர் அவர்.

முஸ்­லிம்கள் எதிர் நோக்­கி­யுள்ள சவால்­களில் சிந்­தனைச் சிக்­கலும் அறி­யா­மையும் மிக ஆபத்­தா­னவை, இதை நன்கு அடை­யா­ளப்­ப­டுத்­திய அவர், அவற்றை சமூ­கத்­தி­லி­ருந்து களை­வ­தற்­கான வழி­மு­றை­க­ளையும் விளக்­கி­யுள்ளார்.

“முஸ்லிம் சமூ­கத்தில் ஆய்­வுக்­கான அவ­சி­யமும் ஆய்வு பற்­றிய இஸ்­லா­மிய நோக்கும்” (2015) எனும் கட்­டு­ரையில் அறி­வு-­ ஆ­ராய்ச்சி தொடர்­பான துறைகள், தலைப்­புகள், முறை­மை­களை அவர் பின்­வ­ரு­மாறு முன்­மொ­ழிந்­துள்­ளமை ஆழ்ந்து நோற்­கத்­தக்­கது. ”வர­லாறு, கல்வி, சமூக வாழ்வு, அர­சியல், பொரு­ளா­தாரம், சன்­மார்க்­கத்­துறை சார்ந்த விட­யங்கள் என பல துறை­களில் முஸ்லிம் சமூகம் ஆய்வை வேண்டி நிற்­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் தேசிய ஒரு­மைப்­பாடு பற்­றிய சிறு­பான்மைச் சமூ­கத்தின் கண்­ணோட்டம், முஸ்லிம் குடும்ப அமைப்பு எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், பெரு­கி­வரும் விவா­க­ரத்­துக்­கான கார­ணங்கள், முஸ்லிம் இளை­ஞர்கள் எதிர்­நோக்கும் சவால்கள், சமூக வலைத் தளங்கள் ஏற்­ப­டுத்தும் பாதக விளை­வுகள், ‘பிக்ஹுல் அகல்­லிய்யாத்’ தொடர்­பான ஆய்­வுகள்” எனப் பரிந்­து­ரைக்­கிறார். அத்­துடன், வர­லாற்றுச் சுவ­டுகள், சமூ­க­வியல் தட­யங்கள், கையெ­ழுத்துப் பிர­திகள், தர­வுகள், புள்­ளி­வி­ப­ரங்கள், நேர்­காணல் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஆய்வு முறை­மைகள் அமையும் போது அது வலு­வான ஆராய்ச்­சிக்கு வழி­வகை செய்யும் என ஆலோ­சனை வழங்­கு­கிறார். பண்­பியல் ஆய்வு (Qualitative Research),எண்ணியல் ஆய்வு (Quantitative Research) என ஆய்வியலின் இரு பெரும் முறைமைகளை கலாநிதி அவர்கள் பரிந்துரைத்துச் சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவாக, ஆராய்ச்சி வெளியீடுகள், அறிவியல் பங்களிப்புகள் மூலம் இலங்கை முஸ்லிம் புலமைத்துவ நெறியில் வசந்தமாக காட்சியளிப்பவர் மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர் விட்டுச் சென்ற அறிவுசார் மரபு சமூகத்தில் விசாலப்படுத்தப்பட வேண்டும். அவரின் இஸ்லாமிய சிந்தனைப் பணி புதுமை வளர்க்கும் பெரு நெறி என்பதால், அவரின் கருத்துக்களும் சிந்தனைகளும் ஆழப்படுத்தப்பட வேண்டும். அவர் முன்மொழிந்துள்ள ஆராய்ச்சிப் பரிந்துரைகள் சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

களம், காலம் அறிந்து சமூகத்துக்கு அவர் சேவை ஆற்றினார் என்ற வகையில், சமூகத்தை அவர் புரிந்து கொண்டார். சமூகம் அவரை நன்கு புரிந்து கொண்டதா? எனும் வினாவுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.