மட்டக்களப்பில் கொள்ளையிடப்படும் ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம்

0 441

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்­தான்­குடி மற்றும் பூநொச்­சி­முனை ஆழ்­கடல் மீன­வர்­களின் மீன்கள் அடிக்­கடி கொள்­ளை­யி­டப்­ப­டு­வதால் இவர்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பூநொச்­சி­முனை மட்­டக்­க­ளப்பு நக­ருக்கு தெற்கே நான்கு கிலோ­மீட்டர் தொலைவில் அமைந்­துள்ள கட­லோர வர­லாற்றுக் கிரா­ம­மாகும்.
காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்கள் சம்­மே­ள­னத்தின் காத்­தான்­குடி வர­லாற்று நூல், ஏறாவூர் பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்கள் சம்­மே­ள­னத்தின் ஏறாவூர் வர­லாற்று நூல் மற்றும் நட­ரா­சாவின் மட்­டக்­க­ளப்பு மாண்­மியம் வர­லாற்று நூல் என்­ப­வற்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தன்­படி மட்­டக்­க­ளப்­புக்கு அரே­பி­யர்கள் வருகை தந்த முத­லா­வது தளம் இப் பூநொச்­சி­முனை என்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழைச்­சே­னைக்கு அடுத்­த­ப­டி­யாக ஆழ்­கடல் மீன்­பிடி நடை­பெ­று­வது புரா­த­ன­மிக்க பூநொச்­சி­முனை துறை­மு­கத்தில் ஆகும். இங்கு பல நூற்­றுக்­க­ணக்­கான மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் முடி­வுக்­கு­வந்த பின்னர் இப்­பி­ர­தேச மீன­வர்கள் எதிர்­கொள்ளும் மிகப் பாரிய பிரச்­சனை இவர்­களின் மீனகள் கொள்­ளை­யி­டப்­ப­டு­வ­தாகும். அதா­வது இப் பூநொச்­சி­முனை மீன்­பிடி முகத்­தி­லி­ருந்து ஆழ்­க­ட­லுக்கு மீன்­பி­டிக்கச் செல்லும் மீன­வர்கள் தமது வலை­களை கடலில் விரிக்­கின்­றனர் இவ்­வாறு சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்­துக்கு ஒவ்­வொரு பட­கு­க­ளி­லி­ருந்தும் கடலில் வலைகள் விடப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு விடப்­படும் வலையின் ஒரு அந்­தத்தில் தமது ஆழ்­கடல் மீன்­பிடி பட­கினை இணைத்து சுமார் 4 தொடக்கம் 6 மணித்­தி­யா­லங்கள் இவ் வலை கடலில் மிதக்கவிடப்­ப­டு­கின்­றது.

குறித்த நேரத்தின் பின் இவ்­வ­லைகளை மீன­வர்கள் தமது பட­கு­க­ளுக்கு இழுத்து ஏற்­று­கின்­றனர். கடலில் இரவு நேரத்தில் இவ்­வாறு விரிக்­கப்­படும் வலை­களில் சிக்­குண்டு கிடக்கும் மீன்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் செயல்­படும் ஒரு குழு­வி­னரால் தொட­ராக கொள்ளையிடப்­பட்டு வரு­வ­தாக பூநொச்­சி­முனை மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

நாளாந்தம் சுமார் பல மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான வலை­களில் கிடக்கும் மீன்கள் இக்­கு­ழு­வி­னரால் கொள்­ளை­யி­டப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு மாதம் ஒன்­றுக்கு பல கோடி ரூபாய் பெறு­ம­தி­யான மீன்­களை இந்த மீன­வர்கள் பறி­கொ­டுத்து தமது ஜீவ­னோ­பா­யத்தை இழப்­ப­தா­கவும் மீன­வர்கள் வருத்தம் தெரி­விக்­கின்­றனர்.

இந்த மீன் கொள்­ளையை தடுக்க கடந்த பல வரு­டங்­க­ளாக இப் பிர­தேச மீன­வர்கள் போராடி வரு­கின்­றனர்.

இந்தக் கொள்­ளையை உரிய அர­ச் நிறு­வ­னங்களை தடுக்­கு­மாறு கோரி இம்­மீ­ன­வர்­க­ளினால் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாரிய ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்றும் நடத்­தப்­பட்­டது.

தொடர்ச்­சி­யாக கடற்­றொழில் அமைச்சு மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்­றொழில் நீரியல் வளத்­தி­ணைக்­களம் பொலிசார் கடற்­படை போன்ற பல அரசு நிறு­வ­னங்­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்தும் எந்த முன்­னேற்­றமும் இது­வரை ஏற்­ப­ட­வில்லை என்­பது மன வருத்­தத்­துக்­கு­ரி­ய­தாகும் என இம் மீன­வர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இந்­நி­லையில் கடந்த 10.04.2023 ஆம் திகதி சுற்­றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலை­மையில் நடை­பெற்ற காத்­தான்­குடி பிர­தேச அபி­வி­ருத்தி குழு கூட்­டத்தில் இம் மீன் கொள்ளை தொடர்­பாக மீன­வர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்டு கோரிக்­கையும் முன்­வைக்­கப்­பட்டு தீர்வு கோரப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் இப்பிரச்­ச­னைக்­கான தீர்­வினை எட்­டு­வ­தற்­கான விசேட கூட்டம் ஒன்று காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் யு.உதய சிறீதர் தலை­மையில் கடந்த 17.05.2023 திகதி நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ரிகள் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் மட்­டக்­க­ளப்பு கடற்­படை அதி­கா­ரிகள் மற்றும் இப் பிர­தேச மீனவர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் பங்­கு­பற்­றினர்.

இக்­கூட்­டத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ரிகள் மட்­டக்­க­ளப்பு களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­லகப் பிரிவில் உள்ள மீன்­பிடி துறை­மு­கங்­களில் இருந்து செல்லும் ஒரு குழு­வி­னரே இம்மீன் கொள்­ளையில் ஈடு­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டினர். அதே­போன்று காத்­தான்­குடி பொலி­சாரின் கூற்­றுப்­படி இந்த மீன் கொள்ளை கோஸ்­டியின் குழுவின் தலை­வ­ராக உள்­ளவர் ஒரு முன்னாள் பயங்­க­ர­வாத குழுவின் உறுப்­பினர் எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதன் அடிப்­ப­டையில் இக்­கூட்­டத்தில் மீன் கொள்­ளையை தடுக்க பொறி­முறை ஒன்­றினை உரு­வாக்கும் முக­மாக சில முடி­வுகள் எடுக்­கப்­பட்­டது.
01.களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­லகப் பிரிவில் உள்ள நான்கு மீன்­பிடி இறங்கு துறை­களை இரண்டு மீன்­பிடி இறங்கு துறை­க­ளாக குறைத்து மட்­டுப்­ப­டுத்தல்.
02. இப் பிர­தேச செய­லகப் பிரிவில் உள்ள மீன­வர்கள் பயன்­ப­டுத்தும் 25 குதிரை வலு­வுக்கு மேற்­பட்ட வெளி­யினை இயந்­தி­ரங்­களின் பாவ­னையை முற்­றாக தடை செய்தல்.
03. நாளாந்தம் இப்­பி­ர­தேச செய­லகப் பிரிவில் இருந்து கடல் தொழி­லுக்கு செல்லும் மீன­வரின் பட­குகள் பிடிக்­கப்­படும் மீன் போன்­ற­வற்றை பொலிசாரின் உத­வி­யுடன் கடற்­ப­டை­யினர் தொடர் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுதல்.

இந்த தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் முடிவு செய்­யப்­பட்­டது.

இருந்தபோதும் இத் தீர்­மா­னங்கள் எதுவும் இன்­று­வரை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும் என மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
மேற்­படி தீர்­மா­னங்­களின் முன்­னேற்றம் தொடர்­பாக கடந்த 13.07.2023 ஆம் திகதி நடை­பெற்ற காத்­தான்­குடி பிர­தேச அபி­வி­ருத்தி குழு கூட்­டத்தில் மீளவும் ஆரா­யப்­பட்­டது. இவ்­விடயத்தில் கடற்றொல் நீரியல் வளத்­திணைக்களத்தின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகுந்த விசனம் தெரி­விக்­கப்­பட்­டது.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்ய உள்ள கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா ஊடாக தொடர் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கடற்றொழில் என்­பது மிகக் கடி­ன­மான தொழில் நட­வ­டிக்­கை­யாகும். காற்று மழை கடல் சீற்றம் இவ்வாறு பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொழிலில் ஈடுபடும் இம்மீனவர்களை இந்த மீன் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசினதும் இம் மாவட்ட சிவில் அமைப்புக்களினதும் கடமையாகும். மிக விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என பாதிக்கப்படும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனூடாக இன ஐக்கியமும் நல்லுறவும் நிரந்தர சமாதானமும் ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மீன் கொள்ளை போன்ற செயற்பாடு இம்மாவட்டத்தின் அமைதிக்கும் சகவாழ்வுக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.