கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்த முயற்சிக்கும் நகர்வுகள்

0 321

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த சில மாதங்­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடாத்­தும்­படி பாரா­ளு­மன்­றத்­திலும், மக்கள் மத்­தி­யிலும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வந்­தன. நாடு தழு­விய ரீதியில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் மெள­ன­மாக இருந்த வேளையில் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அப்­போ­தைய தலைவர் தேர்தல் உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்தார். ஆனால் அனைத்தும் கானல் நீரா­கிப்­போ­யின.

பிற்­போ­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை உட­ன­டி­யாக நடாத்­த வேண்டும் என்று எதிர்­க்கட்­சி­யினர் போர்க்­கொடி ஏந்­தி­னாலும் இந்தக் கோஷங்­களை முறி­ய­டித்து தேர்­தலை நடத்­தாமல் இருப்­ப­தற்கு அர­சாங்கம் காய்­ந­கர்த்தி வரு­கி­றது. அத்­தோடு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும் பாரா­ளு­மன்றில் உள்ள பெரும்­பான்­மை­யையும் பயன்­ப­டுத்தி அர­சுக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளையும், எதிர்ப்­பு­க­ளையும் முறி­ய­டிப்­பதில் ஈடு­பட்­டுள்ளார். அவர் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் இதனை உறுதி செய்­கின்­றன. உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடத்தும் விட­யத்தில் அர­சாங்கம் ஜன­நா­யக நடை­மு­றை­களைப் பின்­தள்­ளி­யுள்­ளது. மக்­களின் ஜன­நா­யக உரி­மையைப் பறித்­தெ­டுத்­துள்­ளது.

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தா­மலே இருப்­ப­தற்கு அர­சாங்கம் காய்­ந­கர்த்தி வரு­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இன்­றைய சூழ்­நி­லையில் நடாத்­தினால் அர­சாங்கம் படு­தோல்­வியைக் கவ்விக் கொள்ளும் என்­பதை ஜனா­தி­பதி புரிந்து வைத்­துள்ளார் என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கி­றது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வந்­த­த­னை­ய­டுத்து அவை கலைக்­கப்­பட்­டன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் கலைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு மீண்டும் உயிர்­கொ­டுத்து அதற்குப் பொறுப்­பான அமைச்சர் விரும்பும் கால எல்­லை­வரை அதி­கா­ரத்தை வழங்­கு­வதே அர­சாங்­கத்தின் சூட்­சு­ம­மான முயற்­சி­யாகும். பதவி காலா­வ­தி­யா­கி­யுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களை மீண்டும் பத­வியில் அமர்த்­து­வதே திட்­ட­மாகும்.
பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த கெட்­ட­கொ­டவே முன்­வைத்­துள்ளார். என்­றாலும் இத்­திட்டம் பொது­ஜன பெர­மு­ன­வி­னதும் ஜனா­தி­ப­தி­யி­னதும் தேவை கரு­தி­ய­தாகும்.

தற்­போ­தைய சூழ்­நி­லையில் பிற்­போ­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் அண்­மையில் ஒரு தினத்தில் நடத்­தப்­பட்டால் ஜனா­தி­பதி தலைமை தாங்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் பொது­ஜன பெர­முன என்­பன தோல்­வியைத் தழுவும் என இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நடாத்­தப்­பட்ட மக்­களின் கருத்­துக்­க­ணிப்பின்படி தெளி­வா­கி­யுள்­ளது.

கடந்த வருடம் அக்­டோபர் மாதம் அர­சாங்கம், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அரை­வா­சி­யாகக் குறைக்கப் போவ­தாக அறி­விப்புச் செய்து அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது. அச்­சந்­தர்ப்­பத்தில் அர­சாங்கம் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான சூழ்ச்­சியே இது என எதிர்­க்கட்­சிகள் குற்றம் சுமத்­தின. இத­னை­ய­டுத்து தேர்தல் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு தனது அறிக்­கையை ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு சமர்ப்­பித்­தி­ருந்த நிலை­யிலும் அர­சாங்கம் இது தொடர்பில் மீண்டும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க முயற்­சித்­தது.

இதே­வேளை ஓய்­வு­நிலை இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்த வேண்­டா­மென உத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பிக்­கும்­படி கோரி உயர்­நீ­தி­மன்றில் ரிட்­ம­னு­வொன்­றினைத் தாக்கல் செய்தார்.
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் அறி­விப்புச் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அதனை சவா­லுக்­குட்­ப­டுத்தும் விதத்­தி­லான இரண்டு சட்ட மூலங்கள் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டன. இறு­தியில் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை தடுத்­து­வைத்­தி­ருக்க முடி­யா­தென உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பித்­தது. நீதி­மன்றின் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் அந்­நிதி விடு­விக்­கப்­ப­டா­ததால் தேர்தல் கால­வ­ரை­ய­றை­யின்றி பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.

தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக
உயர் நீதி­மன்றில் மனு தாக்கல்
கலைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை மீண்டும் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த கெட்­ட­கொ­டவால் பாரா-­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தனி நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் மனு­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹன ஹெட்­டி­யா­ராச்சி குறித்த மனுவை சமர்ப்­பித்­துள்­ள­துடன் சட்­டமா அதிபர் மனுவில் பிர­தி­வா­தி­யாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்ளார்.

உள்­ளூ­ராட்­சி ­சபை கட்­டளைச் சட்­டத்தில் திருத்­த­மொன்­றினைச் சேர்க்கும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த கெட்­ட­கொ­டவால் புதிய வரைபு ஜூலை மாதம் 5ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மனு­தாரர் குறிப்­பிட்­டுள்ளார்.

குறித்த சட்ட மூலத்தின் மூலம் கலைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை மீள அழைக்கும் அதி­காரம் மற்றும் மீள அழைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் அதி­காரம் என்­பன அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தேர்தல் இடம்­பெறும் நிலையில் கலைக்­கப்­பட்ட உள்­ளு­ராட்சி மன்­றங்­களை மீள அழைக்கும் அதி­கா­ரத்தை அமைச்­ச­ருக்கு வழங்­கு­வ­தா­னது மக்­களின் வாக்­கு­ரி­மையை மீறும் செய­லெ­னவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

2-/3 பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன
வாக்­கெ­டுப்பும் தேவை
கலைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி சபை­களை மீண்டும் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்க தரப்பில் கொண்­டு­ வ­ரப்­படும் தனி­நபர் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற வேண்டும் என்­ப­துடன் அதற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடாக மக்­களின் அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று சட்­டமா அதி­ப­ரினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்சி பிர­தம கொர­டா­வான பாரா­ளுன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது; உள்­ளூ­ராட்சி சபைகள் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­வ­தற்­காக தனி­நபர் பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக கலைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி சபை­களை மீள செயற்­படச் செய்யவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் எதிர்­பார்க்­காத வகையில் இது சிக்­க­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. அதா­வது இதனை செயற்­ப­டுத்த பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மாகும் என்று சட்­டமா அதி­ப­ரினால் கூறப்­பட்­டுள்­ளது.

அரச தரப்பில் பெரு­ம­ள­வான உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­களும் நிறு­வ­னங்­களும் உள்­ளன. இத­னா­லேயே தந்­தி­ர­மாக அர­சாங்கம் இந்தச் சட்­டத்தைத் திருத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. எதிர்­வரும் தேர்­த­லுக்கு இவர்கள் அவ­சி­ய­மா­ன­வர்­க­ளாவர். இத­னா­லேயே இவ்­வா­றான முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இந்தச் சட்­டத்தை செயற்­ப­டுத்­தும்­போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின்றி ஆளும் தரப்­பினர் மாத்­தி­ரமே நிய­மிக்­கப்­பட போகின்­றனர் என்ற தக­வல்­களும் பர­வு­கின்­றன.

இந்­நி­லையில் சட்­ட­மா­அ­திபர் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி இது தொடர்பில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று அறி­வித்­துள்ளார்.
தேர்­தலை நடத்­து­வ­தற்குப் பணம் இல்லை என்று கூறிக்­கொண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தப்­போ­கி­றார்­களா? இது தொடர்பில் அர­சாங்கம் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்றார்.

ஜனா­தி­பதி மெளனம்
உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதி­ரான அர­சாங்­கத்தின் காய் நகர்த்தல்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை காலம் வழிகாட்டியாக இருந்தார். மெளனம் காத்தார். இந்நிலையில் தற்போது சர்ச்சையினை உருவாக்கியிருக்கும் தனிநபர் பிரேரணை குறித்து ஜனாதிபதி இதுவரை எவ்வித பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தற்போதைக்கு நடத்துவதற்-கு ஒத்துழைக்கக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை ஜனாதிபதி கொண்டிருக்கிறார். இந்நிலையில் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு அவர் ஆதரவு வழங்குவாரா? என்பது சந்தேகமே. ஏனென்றால் 340 உள்ளூராட்சி சபைகளில் 330 சபைகள் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலே இருந்தன. மீண்டும் சபைகளை உயிர்ப்பித்தால் அது பொதுஜன பெரமுனவுக்கே சாதகமாக அமையும்.

பொதுஜன பெரமுனவின் நலன்கருதியே தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முகங்கொடுக்காது பீதியில் இருக்கும் அரசு மீண்டும் பதவியைக் கைப்பற்றிக்கொள்வதற்கு இவ்வாறான யூகங்களைக் கையாளுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.