உலமா சபையின் தலைவரது போலி கையொப்பத்துடன் போலி செய்தி

சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார் செயலாளர்

0 183

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் கடிதத் தலைப்பு, உத்­தி­யோ­கப்­பூர்வ சின்னம் மற்றும் உல­மா­ ச­பையின் தலை­வ­ரது கையொப்பம் என்­ப­ன­வற்றை போலி­யாக தயா­ரித்து சமூக வலைத்­த­ளங்­களில் போலி­யான செய்தி பரப்­பப்­பட்டு வரு­கின்­ற­மைக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

திகோ நிதி நிறு­வ­னத்தின் நிதி­மோ­சடி தொடர்பில் போலி ஆவ­ணங்­களைத் தயா­ரித்து, உலமா சபைத் ­த­லை­வ­ரி­னது கையொப்­பத்தை போலி­யாக பதிவு செய்து பரப்­பப்­பட்­டு­வரும் போலி­யான செய்­தி­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தேடிக் கண்டுபிடித்து சட்­டத்­தின்முன் நிறுத்தும்படி உலமா சபை பொலிஸ்மா அதி­ப­ரிடம் கடி­த­மொன்­றினை கைய­ளித்­துள்­ளது.

குறிப்­பிட்ட கடி­தத்தை அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்­பினர் ரிபா ஹசன் சட்­டத்­த­ர­ணி­யூ­டாக பொலிஸ்மா அதி­ப­ரிடம் கைய­ளித்­துள்ளார். இக்­குற்­றச்­செயல் குறித்து உலமா சபையின் பிர­தி­நி­திகள் பொலிஸ்மா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

போலி செய்தி பரப்­பிய ஐந்து சமூக வலைத்­த­ளங்­களின் பெயர் விப­ரங்­களும் பொலிஸ்மா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட செய்­தியின் பிர­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ்மா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட கடி­தத்தின் பிரதி சைபர் குற்­றங்கள் விசா­ர­ணைப்­பி­ரி­வுக்கும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித் மேலும் தெரி­விக்­கையில், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் கடி­தத் ­த­லைப்பைப் பயன்­ப­டுத்தி இதற்கு முன்பும் இவ்­வா­றான தவ­றான துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்பெற்­றுள்­ளன. தவ­றான செய்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ளன. இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் ஏற்க­னவே பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளோம். அப்­போது எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயல்கள் இடம்­பெற்றால் அறி­விக்­கும்­படி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்தார். உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

பொலிஸார் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நி-றுத்துவார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

சமூ­கத்தின் மத்­தியில் இவ்­வா­றான போலி­யான செய்­தி­களை, தக­வல்­களை உலமா சபையின் பெயரில் பரப்­பு­ப­வர்கள் தொடர்பில் மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.