மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ளும் முன் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டான்

0 204

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘நான் உங்­க­ளது விசா விட­ய­மாக எம்­ப­சிக்குப் போய்க்­கொண்­டி­ருக்­கிறேன். விசா ஏற்­பா­டுகள் முடிந்த பிறகு மீண்டும் போன் பண்­ணு­கிறேன்.’

தென்­கொ­ரி­யாவின் தலை நகர் சியோலில் இருந்து மொஹமட் ஜினாத் இறு­தி­யாக தனது மனைவி பாத்­திமா சப்­னா­வுடன் உரை­யா­டிய வார்த்­தைகள் இவை.
அதன்­பின்பு மொஹமட் ஜினாத் மனை­வியை தொடர்பு கொள்­ள­வில்லை.
தென் கொரி­யாவின் சியோல் நகரில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சனிக்­கி­ழமை இடம் பெற்ற பாரிய சன நெரி­சலில் சிக்­குண்டு அவர் வபாத்­தானார்.

27 வய­தான முனவ்வர் மொஹமட் ஜினாத் கண்டி மாவட்டம் உட­த­ல­வின்­னையில் அலு­கொல்ல என்ற கிரா­மத்தைச் சேர்ந்­தவர். அனர்த்தம் இடம் பெற்று அவர் வபாத்­தான அன்­றைய தினமே அவ­ரது பெற்­றோ­ருக்கு மரணச் செய்தி அறி­விக்­கப்­பட்­டது. எதிர்­பா­ராத துயரச் செய்தி பெற்றோர், மனைவி, உற­வி­னர்கள் மற்றும் கிரா­மத்­த­வர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. உற­வி­னர்­களால், ஊரா­ரினால் அவர் மிகவும் நேசிக்­கப்­பட்­டவர்.அனைவர் மீதும் கரு­ணை­யுள்­ளவர்.

மொஹமட் ஜினாத் உட­த­ல­வின்னை ஜாமியுல் அஸ்ஹர் கல்­லூரி மற்றும் வத்­தே­கெ­தர முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்­றவர். அவர் 2 வரு­டங்­க­ளுக்கு முன்பு தென் கொரி­யா­வுக்குச் சென்று தொழில் புரிந்து விட்டு 4 மாதங்­க­ளுக்கு முன்பு இலங்கை திரும்­பி­யி­ருந்தார். இலங்கை திரும்­பிய அவர் பாத்­திமா சப்னா (25) என்ற பெண்ணை திரு­மணம் செய்து கொண்டார். மனைவி தற்­போது கர்ப்­பி­ணி­யா­க­வுள்ளார்.

திரு­ம­ணத்தின் பின்பு அதா­வது ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்புதான் அவர் தென்­கொ­ரி­யா­வுக்குத் திரும்­பி­யி­ருந்தார். இந்தக் குறு­கிய காலத்தில் இந்த அனர்த்­தத்­துக்கு ஆளா­கி­யுள்ளார்.

அவர் தனது மனை­வி மீது உயி­ரிலும் மேலாக அன்பு செலுத்­தி­ய­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கி­றார்கள்.

தனது மனை­வியை தான் வதியும் கொரிய நாட்­டுக்கே அழைத்­துக்­கொள்ள வேண்­டு­மென விரும்பி அதற்­கான ஏற்­பா­டு­களை வேக­மாக முன்­னெ­டுத்து வந்தார். என்­றாலும் மனை­வியை அவர் ­தன்­னிடம் அழைத்துக் கொள்­வ­தற்கு முன்பு இறை­வன் அவரை தன்­பக்கம் அழைத்­துக்­கொண்டான். அவ­ருக்கு ஜென்­னதுல் பிர்­தெளஸ் கிட்ட வேண்டும் என பிரார்த்­திப்­போ­மா­க.

தென்­கொ­ரி­யாவின் சியோல் தலை­ந­கரில் ஓர் குறு­கிய வீதி­யிலே ஹெலோவின் திரு­விழா நடந்­துள்­ளது. இந்தத் திரு­வி­ழாவில் பங்­கேற்­ப­தற்­கென்று அவர் அங்கு செல்­ல­வில்லை. அன்று அவர் தனது மனை­விக்­கான கொரியா விசாவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்­காக இலங்கை தூத­ர­கத்­திற்குச் சென்று விட்­டு தான் தங்­கி­யி­ருக்கும் இடத்­துக்கு புகை­யி­ர­தத்தில் திரும்பி வந்­துள்ளார்.

ஹெலோவின் திரு­விழா நடை­பெற்ற வீதிக்கு அரு­கிலேயே அவர் தங்­கி­யி­ருந்த அறை அமைந்­துள்­ளது. அ­றைக்கு திரும்பி வந்­த­போதே திரு­விழா சன­நெ­ரி­சலில் சிக்கி இப்­ப­ரி­தாப நிலைக்­குள்­ளா­கி­யுள்ளார்.

மொஹமட் ஜினாத் தொழில் நிமித்­த­மாக வெளி­நாடு சென்­ற­வ­ரல்ல எனவும் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே தென்­கொ­ரியா சென்­றுள்ளார் எனவும் தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் செய­லாளர் ஆர்.பி.எ.விம­ல­வீர தெரி­வித்­துள்ளார். இதே­வேளை அவர் கொரி­யா­வி­லி­ருந்து இரண்டு வரு­டங்­களின் பின்பு நாடு திரும்பி வந்து மீண்டும் விசிட்­ வி­சாவில் சென்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் வெளி­நாட்டு தொடர்பு பிரி­வினர் தென்­கொ­ரி­யா­வி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரி­களைத் தொடர்பு கொண்டு இவ்­வி­பத்து மரணம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

மொஹமட் ஜினாத்தின் ஜனா­ஸாவை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அவ­ரது பெற்றோர் வெளி­வி­வ­கார அமைச்­சிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அதற்­கிணங்க ஜனா­ஸாவை இலங்­கைக்கு கொண்­டு ­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வெளி­வி­வ­கார அமைச்சர் சட்­டத்­த­ரணி அலி­சப்ரி இதற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்­துள்ளார்.

இதே­வேளை ‘ஹெலோவின் கொண்­டாட்ட சன நெரி­சலில் சிக்­குண்டு மேலும் இலங்­கை­யர்கள் எவரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களா? என்­பது தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்கு தூத­ரக அதி­கா­ரி­களை சியோல் பொலிஸ்­ நி­லைத்­துக்கும் வைத்­தி­ய­சா­லைக்கும் அனுப்பி வைத்­துள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி தெரி­வித்தார்.
தென்­கொ­ரி­யாவில் மொஹமட் ஜினாதின் ஜனாஸா தொழுகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்­பெற்­றுள்­ள­து.

ஜனாஸா கொண்டு வரப்படுகிறது
மொஹமட் ஜினாத்தின் ஜனாஸா இன்று கொரி­யா­வி­லி­ருந்து இலங்கையை வந்­த­டை­ய­வுள்­ளது. இன்று காலை 4.25 மணிக்கு விமானம் மூலம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் என அவ­ரது பெற்றோர் தெரி­வித்­தார்கள்.
ஜனா­ஸாவை இலங்­கைக்கு அனுப்பி வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை கொரி­யாவில் தொழில் புரியும் அவ­ரது நண்­பர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

மொஹமட் ஜினாத்தின் தந்தை
மொஹமட் ஜினாத்தின் தந்தை முனவ்­வரை ‘ விடி­வெள்ளி’ தொடர்பு கொண்­ட­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

‘‘மகனின் மரணச் செய்தியை அறிந்து கொண்­ட­தி­லி­ருந்து நாங்கள் அதிர்ச்­சிக்­குள்ளா கியுள்ளோம். அவ­ரது மனைவி அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து இன்னும் மீள­வில்லை.
மகன் ஜினாத் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தொழில் தேடியே கொரி­யா­வுக்குச் சென்றார். நானும் எனது மனை­வியும் வயோ­தி­பர்கள். நோயா­ளிகள். எங்­க­ளையும், மனை­வி­யையும் பரா­ம­ரிப்­ப­தற்­கா­கவே அவர் வெளி­நாடு சென்றார்.
மக­னுக்கு ஜென்­னத்துல் பிர்­தெளஸ் கிட்ட வேண்டும். அவ­ருக்­காக அனை­வரும் துஆ பிரார்த்­தனை செய்­யுங்கள் ’’ என்றார்.

154 பேர் பலி
சியோல் ஹெலோவின் கொண்­டாட்­டத்­தின்­போது சன நெரி­சலில் சிக்­குண்டு பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை 154 ஆக அதி­க­ரித்­துள்­ள­தா­க அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்த பெரும்­பா­லா­ன­வர்கள் அந்­நாட்டின் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். பலி­யான 154 பேரில் 19 பேர் வெளி­நாட்­ட­வர்கள் என தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கை­யி­லி­ருந்து கொரி­யா­வுக்கு வேலை வாய்ப்பு பெற்று, வெளி­நாட்டு பணி­ய­கத்தில் தங்­களை பதிவு செய்து கொண்டு அங்கு சென்றிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.