கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்

- சஹ்ரானின் மனைவி ஹாதியா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதம்

0 53

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக சஹ்ரான் ஹஷீம் அறி­யப்­படும் நிலையில் , அவ­ரது மனைவி பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில், கட்­டு­வா­பிட்டி தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்­மது ஹஸ்­தூனின் மனை­வி­யான தற்­போதும் மர்­ம­மாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்ரன் நீதி­மன்றில் நிறுத்­தப்­பட வேண்டும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கல்­முனை மேல் நீதி­மன்றில் வாதிட்டார்.

பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கில், அவர் சார்பில் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைக்கும் போதே சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் இதனை நீதி­மன்றின் அவ­தா­னத்­துக்கு கொண்டு வந்தார்.

‘சாரா ஜெஸ்மின் என்­பவர் எனது சேவை பெறு­ந­ரிடம் கூறி­ய­தாக கூறப்­படும் ஒரு விட­யத்தை மைய­ப்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது. அது குற்றப் பத்­தி­ரி­கையில் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. அதற்­காக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்கு மூலத்தை மட்டும் வழக்கு தொடுநர் சாட்­சி­யாக குறிப்­பிட்­டுள்ளார்.

அப்படி­யானால் குறித்த தக­வலை கூறி­ய­தாக தெரி­விக்­கப்­படும் சாரா ஜெஸ்­மினை ஏன் சாட்­சி­யா­ள­ராக இணைக்­க­வில்லை. அவரை கண்­டிப்­பாக மன்­றுக்கு அழைத்து வர வேண்டும். நாம் ஒப்­புதல் வாக்கு மூலத்தின் சுயா­தீன தன்­மையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­கின்றோம்.

சாரா ஜெஸ்­மினை மன்றில் முன்­னி­றுத்த உள்ள இய­லுமை தொடர்பில் சட்ட மா அதிபர் குறிப்­பிட வேண்டும். அவர் இறந்­து­விட்­டாரா இல்­லையா என்­பதை அவர் கூற வேண்டும். ஏனெனில் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணைக்கு அவ­ரது சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அது மிக முக்­கி­ய­மா­னது.’ என இதன்­போது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜயராம் ட்ரொக்ஸி முன்­னி­லையில், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவைக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் விதி விதா­னங்­களை விளக்கி வாதங்­களை முன் வைக்கும் போது கூறினார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்து சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக அதனை அறிந்­தி­ருந்தும் , அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­லாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்கு மூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே குறித்த வழக்கு நேற்று முன் தினம் ( ஆகஸ்ட் 30) கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜயராம் ட்ரொக்ஸி முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.
இதன்­போது கொழும்­பி­லி­ருந்து பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் பாத்­திமா ஹாதியா சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் அழைத்து வரப்­பட்டு மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், கல்முனை மேல் நீதி­மன்ற வளா­கத்தை சூழ கடும் பொலிஸ் பாது­காப்பு உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இதன்­போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜய­வீர தலை­மையில், அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜே­சூ­ரிய மற்றும் மாதினி விக்­னேஸ்­வரன் ஆகி­யோரைக் கொண்ட குழு ஆஜ­ரா­னது.
பிர­தி­வா­தி­யான பாத்­திமா ஹாதி­யா­வுக்­காக, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைரின் ஆலோ­ச­னைக்கு அமைய, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், வசீமுல் அக்ரம், லியாகத் அலி, சப்ரின் சலா­ஹுதீன் ஆகி­யோரைக் கொண்ட சட்­டத்­த­ர­ணிகள் குழாம் ஆஜ­ரா­னது.
இந் நிலையில், மன்றில் முதலில் பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் சமர்ப்­ப­ணங்­களை முன் வைத்தார்.

‘இன்று (நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30) குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டுள்ள பிர­தி­வா­தியை இதற்கு முன்னர் எனது கனிஷ்ட சட்­டத்­த­ரணி சிறைச்­சா­லையில் வைத்து சந்­தித்து ஆலோ­ச­னை­களைப் பெற்­றி­ருந்தார். நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக, அவ­ரிடம் மேலும் சில ஆலோ­ச­னை­களைப் பெற வேண்டி உள்­ளது.

குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவைக்கு கடந்த 2022 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்தம் ஊடாக எந்த வகை­யிலும், குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள ஒரு­வ­ருக்கு இருக்கும் உரி­மைகள் குறைக்­கப்­ப­ட­வில்லை. அதன்­படி கண்­டிப்­பாக ஒரு விட­யத்தை குற்றம் சாட்­டப்­பட்­டவர் ஏற்க வேண்டும் என எதுவும் கிடை­யாது. எனது சேவை பெறு­ந­ரான குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­வ­ருடன் நான் நீதி­மன்றில் வைத்து சில நிமி­டங்கள் வரை பேசி சில அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொண்டேன். எனினும் எனக்கு மேல­திக அறி­வு­றுத்­தல்­கலைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை இருப்­பதால், முன்­வி­ளக்க மாநாட்டை நடாத்த வேறு ஒரு திக­தியை வழங்க வேண்டும் என்­பதே எனது கோரிக்­கை­யாகும்.
ஏனெனில் 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்டம் பிர­காரம், அதன் 7 (பி) பிரிவில் வழக்கின் பிர­தான விசா­ரணை அதி­காரி அல்­லது அவ­ரது பிரதிநிதி மன்றில் முன் விளக்­க­மா­நாட்டின் போது ஆஜ­ரா­கி­யி­ருக்க வேண்டும்.
அதன்­போது, குற்றம் சுமத்­தப்­பட்­ட­வ­ருக்கு எதி­ரான சாட்­சிகள் தொடர்பில் மன்றின் கவ­னத்தை ஈர்க்க முடியும்.

உண்­மை­யி­லேயே, வழக்­குக்கு அவ­சி­ய­மான சாட்­சிகள் நிர­லி­டப்­பட்­டுள்­ள­னவா என இங்கு ஆராயும் போது அதில் ஒரு முரண்­பாட்டு நிலை­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.
குற்றப் பத்­தி­ரி­கையின் பிர­காரம், சாரா ஜெஸ்மின் கூறிய ஒரு விட­யத்தை எனது சேவை பெறுநர் பொலி­ஸா­ரிடம் கூற­வில்லை எனக் கூறி குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் சாரா ஜெஸ்­மினை வழக்குத் தொடுநர் சாட்­சி­யா­ள­ராக நிரல்­ப­டுத்­த­வில்லை. இது ஒரு முரண்­பாட்டு நிலை­மை­யாகும். எனவே குறித்த சாட்­சியை நிரல்­ப­டுத்­து­வ­தற்­கான இ­ய­லுமை தொடர்பில் வழக்குத் தொடுநர் அவ­தானம் செலுத்த வேண்டும்.
இதே பெண் அதா­வது, சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உத­வி­ய­தாக இதே நீதி­மன்றில் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் வழக்குத் தொடுத்­துள்ளார். அந்த வழக்குக் கோவை­யையும் இந்த வழக்கில் உள்­ளீர்க்க நாம் எதிர்­பார்க்­கின்றோம்.
அப்­படி இருக்­கையில், சாராவை சாட்­சி­யா­ள­ராக நிரல் படுத்­தாது, ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை மட்டும் சான்­றாக முன் வைக்­கப்­பட்­டுள்­ள­மையை ஏற்க முடி­யது.
ஒப்­புதல் வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தனமை குறித்து எமக்கு பிரச்­சினை உள்­ளது.
எனது சேவை பெறுநர் கோட்டை நீதிவான் முன்­னி­லையில், 4 ஒப்­புதல் வாக்கு மூலங்­களை வழங்­கி­யுள்ளார். இதில் நீதிவான் தொடர்பில் எமக்கு பிரச்­சினை இல்லை.
எனினும் அந்த வாக்கு மூலங்­களை வழங்­கிய எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் எனது சேவை பெறுநர் சி.ஐ.டி.யிலி­ருந்தே நீதி­மன்­றுக்கு அழைத்து செல்­லப்­பட்டார். அந்த எல்லா சந்­தர்ப்­பத்­திலும் அவர் மீண்டும் சி.ஐ.டி.க்கே அழைத்துச் செல்லப்­பட்டார். இதனால் அந்த ஒப்­புதல் வாக்கு மூலத்தின் சுட்­யா­தீனத் தன்மை தொடர்பில் எமக்கு கேள்­விகள் உள்­ளன.

இத­னை­விட எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக , பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதனை சாதா­ரண தண்­டனைச் சட்டக் கோவையின் கீழான குற்­றச்­சாட்­டாக மாற்­றிக்­கொள்ள முடி­யுமா அப்­படி மார்­றி­ய­மைத்தால், அது தொடர்பில் எடுக்க முடி­யு­மான தீர்­மானம் என்ன என்­பது உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து சேவை பெறு­ந­ரிடம் அறி­வு­றுத்­தலை அவரை சந்­தித்து பெற வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன் எனது சேவை பெறுநர், கடந்த 3 வரு­டங்­களும் 5 மாதங்­க­ளு­மாக கட்டுக் காவ­லிலும், விளக்­க­ம­றி­ய­லிலும் வைக்­கப்­பட்­டுள்ளார். சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் உறுதி செய்­யப்­பட்டால் , அதிக பட்­ச­மாக 7 வரு­டங்­களே சிறைத் தண்­டனை அளிக்க முடி­யு­மாக இருக்கும் நிலையில், விளக்­க­ம­றியல் காலம் தண்­ட­னை­யாக அமையக் கூடாது. அவர் பிணை­யின்றி இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்­காக பிணை விண்­ணப்பம் செய்ய நான் எதிர்­பார்க்­கின்றேன்.

பிர­தி­வா­தியைப் பொறுத்தவரை சாரா ஜெஸ்மின் எனும் பெண் மிக முக்­கி­ய­மான சாட்சி. சுயா­தீனத் தன்மை குறித்து கேள்­விகள் உள்ள ஒப்­புதல் வாக்கு மூலத்தை மட்டும் வைத்து வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பின்­ன­ணியில், சாராவை சாட்­சி­யாக சேர்க்க கோரு­வ­தற்­கான எல்லா உரி­மையும் பிர­தி­வா­திக்கு இருக்­கின்­றது.’ என சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.

இதன்­போது நீதி­பதி தலை­யீடு செய்து பிர­தி­வா­திக்கு எதி­ராக வேறு ஏதும் வழக்­குகள் உள்­ள­னவா என வின­வினார்.

அதற்கு வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜய­வீர, வேறு வழக்­குகள் இல்லை என பதி­ல­ளித்தார்.
தொடர்ந்து சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் வாதங்­களை முன் வைத்தார்.
அதில் சஹ்ரான் ஹசீமின் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை, இவ்­வ­ழக்கில் சான்­றாக முன் வைக்­கப்­படல் வேண்டும் எனவும், அவ்­வாறு முன் வைக்­கப்­பட்­டி­ரா­விட்டால் அது குறித்து நீதி­மன்றம் தலை­யீடு செய்து அதற்­கான உத்­த­ரவை பிறப்­பிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இத­னை­விட, வழக்குத் தொடுநர் வழங்­கி­யுள்ள 24 அம்ச பரிந்­துரை, வழக்கு விசா­ர­ணைக்கு முன்­பா­கவே கிடைத்­ததால், அது தொடர்பில் தனது சேவை பெறு­ந­ருடன் கலந்­தா­லோ­சித்தே முடி­வினை கூற­மு­டி­யு­மென தெரி­வித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், நியா­ய­மான வழக்கு விசா­ர­ணையின் உரிமை பிர­தி­வா­திக்கும் இருக்கும் நிலையில், அதற்­காக முன் விளக்க மாநாட்டை நடாத்த வேறு ஒரு திக­தியை குறிக்­கு­மாறு கோரினார்.

இத­னை­ய­டுத்து அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜய­வீர, ஹாதி­யாவின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் வாதங்­க­ளுக்கு பதி­ல­ளித்து பின்­வ­ரு­மாறு விட­யங்­களை முன் வைத்தார்.

‘கனம் நீதி­பதி அவர்­களே, பிர­தி­வா­தியின் (ஹாதியா) சட்­டத்­த­ர­ணியின் வாதங்­களின் படி, குற்றப் பகிர்வுப் பத்­தி­ரி­கையில் சான்றுப் பொருட்கள் தொடர்­பி­லான நிரலில் உள்ள குறைப்­பா­டுகள் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். உண்­மையில் குற்றப் பகிர்வுப் பத்­தி­ரி­கையில் கடந்த 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, அப்­போ­தைய கோட்டை நீதி­வா­னுக்கு பிர­தி­வாதி, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 8 ஆவது அத்­தி­யாயம் பிர­காரம் வழங்­கிய ஒப்­புதல் வாக்கு மூலம் மட்­டுமே நிரல்படுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் 2019 ஆகஸ்ட் 20, செப்­டம்பர் 4, ஒக்­டோபர் 2 ஆகிய திக­தி­க­ளிலும் பிர­தி­வா­தியால் மேலும் மூன்று ஒப்­புதல் வாக்கு மூலங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவை குற்றப் பகிர்வுப் பத்­தி­ரி­கையில் நிரல்படுத்­தப்­பட்­டி­ராத போதும், பிர­தி­வாதி தரப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் சான்றுப் பொருள் பட்­டி­யலை திருத்­தவும், ஏனைய மூன்று ஒப்­புதல் வாக்கு மூலங்­க­ளையும் நிரல் படுத்­தவும் அனு­மதி கோரு­கின்றேன்.
(அதற்­கான அனு­மதி நீதி­ப­தியால் வழங்­கப்­பட்­டது)

இன்­றைய தினம் (நேற்று முன் தினம் 30) இவ்­வ­ழக்கு முன்­வி­ளக்க மாநாடு தொடர்பில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி நாம் 24 விட­யங்­களை மையப்­ப­டுத்­திய முன் மொழி­வு­களை பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணிக்கு இன்று திறந்த நீதி­மன்றில் வைத்து கைய­ளித்­துள்ளோம். அதன் தமிழ் மொழி மூல மொழி பெயர்ப்­பையும் நாம் கொடுத்­துள்ளோம்.

அத்­துடன் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி மிக நீள­மான சமர்ப்­ப­ணங்­களை மன்றில் முன் வைத்தார். வழக்கில் அழைக்­கப்­ப­ட­வுள்ள சாட்­சி­யா­ளர்கள், எதிர்வாதம் தொடர்­பி­லான விட­யங்­களை மையப்­ப­டுத்தி அவர் வாதங்­களை முன் வைத்தார்.
அந்த சமர்ப்­ப­ணங்கள் முன்­வி­ளக்க மாநாட்டின் ஒரு அங்­க­மாக அமைய வேண்­டி­ய­வை­யாகும்.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவைக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் 7 ( பி) அத்­தியாம் பிர­காரம் சமர்ப்­பணம் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணியால் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதா­வது முன்­வி­ளக்க மாநாட்டின் போது விசா­ரணை பொறுப்­ப­தி­காரி அல்­லது அவ­ரது பிரதி நிதி ஒருவர் ஆஜ­ரா­வது தொடர்­பி­லான வாதம் அது. இன்று ( நேற்று முன் தினம் 30) சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­காரி மன்றில் மன்றில் முன்­னி­லை­யா­கின்றார் என்­பதை நான் பதிவு செய்­கின்றேன்.

இன்­னொரு விடயம், சஹ்­ரானின் தொலை­பேசி தொடர்­பி­லான பகுப்­பாய்வு அறிக்கை மன்றில் முன் வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதும், அது சான்­றாக முன் வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் எனவும் பிர­தி­வாதி தரப்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. எனவே அத்­த­கைய அறிக்­கையை பெற நீதி­மன்றம் தலை­யீடு செய்ய வேண்டும் எனவும் கோரப்­பட்­டது.
எனினும் சஹ்­ரானின் தொலை­பேசி தொடர்­பி­லான அறிக்கை குறித்து நான் சி.ஐ.டி.யின் அதி­கா­ரி­க­ளிடம் வின­வினேன்.

அதன்­படி பிர­தி­வாதி அல்­லது சஹ்ரான் தொடர்பில் எந்த தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்­கை­களும் பெறப்­ப­ட­வில்லை என புல­னாய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
சஹ்­ரானின் தொலை­பேசி கைப்­பற்­றப்­ப­ட­வில்லை. மாற்­ற­மாக, பல பாகங்­க­ளாக உடைந்த தொலை­பேசி பாகங்­களே கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவை சாட்­சிகள் கட்­டளை சட்­டத்தின் 27 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பட்­டன. அதி­லி­ருந்து எந்த உள்­ள­டக்­கத்­தையும் பெற முடி­யாது என அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் அறி­வித்­துள்ளார். எனவே அத்­த­கைய தொலை­பேசி பாகங்­களை வைத்து மேல­திக அறிக்கை பெற எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது.
இத­னை­விட, பிர­தி­வாதி பயன்­ப­டுத்­திய தொலை­பேசி தொடர்­பிலும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்ட பின்னர், அவ்­வாறு அவரின் தொலை­பேசி குறித்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதை குற்­ற­வியல் சட்டக் கோவையின் பிரி­வுகள் தடுக்­கின்­றன.

எனவே தனி­யாக வேறு அறிக்­கைகள் பெற இம்­மன்­றினால் உத்­த­ர­விட முடி­யாது.
இந்த மேல் நீதி­மன்ற வழக்கின் ஆரம்பம் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்­காகும். அவ்­வ­ழக்கில் இந்த வழக்கின் பிர­தி­வாதி ஒரு சந்­தேக நப­ராக இருந்தார். தற்­போதும் அவ்­வ­ழக்கு ஏனைய சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக நடக்­கின்றது. அவ்­வ­ழக்கு கோவை­யி­லி­ருந்து பிரித்­தெ­டுத்தே பிர­தி­வா­திக்­கு­ எ­தி­ராக இந்த குற்றப் பத்­தி­ரி­கையின் கீழான வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அப்படி இருக்­கையில் பிர­தி­வாதி சார்பில் கோட்டை நீதி­மன்றில் இந்த விட­யங்கள் குறித்து எதுவும் சமர்ப்­ப­ணங்கள் முன் வைக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான நிலையில் இங்கு வந்து அவற்றை கோரு­வது நியா­ய­மற்­றது.

இன்­னொரு விட­யமும் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணியால் முன் வைக்­கப்­பட்­டது. அதா­வது, பிர­தி­வா­திக்கு சில தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய ஒரு பெண் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டது.

இந்த வழக்கை முன் கொண்டு செல்ல குறித்த பெண்ணை சாட்­சி­யாக அழைப்­ப­திலோ அல்­லது, அவ­ரது வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்­கவோ அவ­சி­ய­மில்லை. இவ்­வ­ழக்கை முன் கொண்டு செல்ல நாம் அப்­பெண்ணின் சாட்­சி­யத்தில் தங்­கி­யி­ருக்­க­வில்லை.

எனவே முன்­வி­ளக்க மாநாட்டை ஆரம்­பிக்க முடி­யு­மான சூழலே நில­வு­கின்­றது. எனவே அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும். ‘ என வாதங்­களை முன் வைத்தார்.

இந் நிலையில் தொடர்ச்­சி­யாக வழக்குத் தொடுநர் தரப்பின் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் வழக்கின் முன் விளக்க மாநாட்டை விரை­வு­ப­டுத்த வேண்டும் என வாதிட்­டுக்­கொண்­டி­ருந்த நிலையில், குற்றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், அப்­ப­டி­யானால் ‘நாளைக்கே (ஆகஸ்ட் 31) அதனை நடாத்­துங்கள். நான் தயார்.’ என கூறினார்.

இத­னை­ய­டுத்து பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் சற்று அமை­தி­யானார்.
எவ்­வா­றா­யினும், பயங்­க­ர­வாத தடை சட்­டத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள புதிய திருத்­தங்­களில், குற்றப் பத்­தி­ரிகை சமர்ப்­பிக்­கப்­பட்டு ஒரு வரு­ட­மா­கியும் வழக்கு விசா­ரணை நடக்­க­வில்­லை­யாயின், குற்றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு பிணை­ய­ளிக்க வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளதால், அந்த விட­யத்தை சாத­க­மாக பயன்­ப­டுத்தி பிணை பெறவே முன் விளக்க மாநாட்டை தாம­தப்­ப­டுத்த பிர­தி­வாதி தரப்பு முனை­வ­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் குறிப்­பிட்டார்.

அதற்கு பதி­ல­ளித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி, குற்றம் சாட்­டப்­பட்­ட­வரை தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைக்க வழக்குத் தொடுநர் தரப்பு அதே விட­யத்தை தமக்கு சாத­க­மாக்­கிக்­கொள்ள முயற்­சிப்­ப­தாக குறிப்­பிட்டார்.

இந் நிலையில் அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜயரான் ட்ரொஸ்கி, வழக்கின் பார­தூரத் தன்மை உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்து குற்றம் சாட்­டப்­பட்­ட­வரின் தரப்பில் முன் வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமைய முன் விளக்க மாநாட்டை வேறு திக­தி­யொன்றில் நடாத்­து­வ­தற்கு திகதி குறிப்­ப­தாக அறி­வித்தார்.

சமூக, பொரு­ளா­தார, அர­சியல் நிலை­மைகள் கார­ண­மாக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குற்றம் சாட்­டப்­பட்­ட­வரை சந்­தித்து அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்­வதில் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு இருந்த இடை­யூ­றுகள் தொடர்பில் இதன்­போது நீதி­பதி திறந்த மன்றில் விப­ரித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்­கு­தல்­கலின் பின்னர் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராக இருந்த தடங்­கல்கள் தொடர்பில் தான் அறி­வ­தாக கூறிய நீதி­பதி, நியா­ய­மான வழக்கு விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்க தேவை­யான அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்ள பிர­தி­வாதி தரப்­புக்கும் அவ­கா­ச­ம­ளித்து வழக்கை முன் விளக்க மாநாட்­டுக்­காக எதிர்­வரும் செப்­டம்பர் 30 ஆம் திக­தி­வரை ஒத்தி வைத்தார்.

அத்­துடன் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பாத்­திமா ஹாதி­யாவின் பிணைக் கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களை முன் வைக்­கவும் நீதி­பதி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீ­புக்கு அனு­ம­தி­ய­ளித்தார். எழுத்து மூல பிணைக் கோரிக்கை சமர்ப்­ப­ணத்தின் ஒரு பிர­தியை அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லுக்கும் கைய­ளிக்க அவர் ஆலோ­சனை வழங்­கினார்.

இதன்­போது, நீதி­பதி ஜயராம் ட்ரொஸ்கி, தான் அட்டன் நீதி­வா­னாக இருந்த போது நடந்த சம்­பவம் ஒன்­றி­னையும் மன்றில் விப­ரித்தார்.

2019 இல் தான் அட்டன் நீதி­வா­னாக இருந்த போது, நபர் ஒரு­வரை சம­ய­ல­றை­யி­லி­ருந்த கத்­தியை மையப்­ப­டுத்தி ஐ.எஸ். ஐ. எஸ். சந்தேக நபராக சித்திரித்து பொலிசார் தன் முன் ஆஜர் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது எந்த சட்டத்தரணியும் அப்போதைய சூழலில் அவருக்காக ஆஜராகவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, அப்போது சந்தேக நபருக்கு எதிராக எந்த அடிப்படைகளும், சான்றுகளும் இல்லாமையால் தான் பிணையளித்ததாக கூறினார்.
எனினும் மறுநாள் பத்திரிகையொன்றில் ‘ இரு மாங்காய்களை திருடியவர் விளக்கமறியலில்; ஐ.எஸ். ஐ.எஸ். நபருக்கு பிணை ‘ என தலைபிட்டு செய்தி வெளியானதாக நீதிபதி குறிப்பிட்டார்.

எனினும் அச்செய்தியை திருத்தி வெளியிட தேவையான ஆலோசனைகளை தான் உரிய நிருபருக்கு பொலிஸார் ஊடாக வழங்கிய போதும், திருத்திய செய்தியானது ஒரு உள் பக்கம் ஒன்றில் மூலையில் சிறிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு, 2019 இன் பின்னர் சந்தேக நபர்கள் சட்டத்தரணிகளின் சேவையை பெற்றுக்கொள்வதில் இருந்த நடைமுறை சிக்கல்களை விளக்கியமை குறிப்பிடத்தக்கது.

முன்­ன­தாக கடந்த 2019 ஏப்ரல் 21 தொடர் தற்­கொலை குண்டுத்தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி கல்­முனை – சாய்ந்­த­ம­ருது பகு­தியில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டு­வெ­டிப்பு மற்றும் பாது­காப்புப் பிரி­வி­னு­ட­னான பரஸ்­பர துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை அடுத்து காய­ம­டைந்த நிலையில், பாத்­திமா ஹாதி­யாவும் அவ­ரது 4 வயது மகளும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் பின்னர் ஹாதியா சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்­பட்டு பின்னர், கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஷெங்­ரில்லா ஹோட்டல் குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான வழக்குக் கோவையின் கீழ் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­கமறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இந் நிலை­யி­லேயே தற்­போது ஹாதி­யா­வுக்கு எதி­ராக கல்முனை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.