சிறுபான்மை மக்கள் தாம் சிறுபான்மையினர் என்ற மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும்

ஜமாஅதே இஸ்லாமி மாநாட்டில் ஏரான் விக்கிரமரத்ன எம்.பி.

0 96

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘இந்­நாட்டு மக்கள் அனை­வரும் சம­மா­ன­வர்­களே. எங்­க­ளுக்குள் ஏற்­றத்­தாழ்வு மற்றும் வேறு­பா­டுகள் கூடாது. சிறு­பான்மை மக்கள் தாம் சிறு­பான்­மை­யினர் என்ற மனோ நிலை­யி­லி­ருந்தும் விடு­ப­ட­வேண்டும். நாங்கள் எம்மை இனம், மதம், குலம் என்ற ரீதியில் வேறு­ப­டுத்திக் கொள்­கிறோம். இது தவறு. பெரும்­பான்மை மக்கள் சிறு­பான்­மை­யுடன் ஒன்­றாக இணைந்து வாழ வேண்டும். இவ்­வா­றான நிலைமை மூலமே எமது நாட்­டைக்­ கட்­டி­யெ­ழுப்ப முடியும்’ என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏரான் விக்­கி­ர­ம­ர­த்ன தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற ஜமா அத்தே இஸ்­லா­மியின் வரு­டாந்த மாநாட்டில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, 67 வரு­ட­கால வர­லாற்­றினைக் கொண்ட ஸ்ரீலங்கா ஜமா அத்தே இஸ்­லா­மியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றக்­கி­டைத்­த­மை­யை­யிட்டு பெரு­மைப்­ப­டு­கிறேன். இவ்­வி­யக்கம் சமூ­கப்­ப­ணி­களில் தொடர்ந்து ஈடு­பட்டு வறு­மைக்­கோட்டில் வாழும் மக்­க­ளுக்கு உத­வி­களைச் செய்து வரு­கி­றது. இந்­நாட்டில் பிறந்த மக்கள் அனை­வரும் சம­மாக நடத்­தப்­ப­ட­வேண்டும். சிறு­பான்மை அல்­லது பெரும்­பான்மை என்ற வேறு­பாடு காட்­டக்­கூ­டாது. நாட்டு மக்கள் அனை­வரும் இந்­நாடு அனை­வ­ருக்கும் சொந்­த­மா­னது என்ற மனப்­பான்­மையைக் கொண்­டி­ருக்க வேண்டும்.

நாடு இன்று பாரி­ய­ பொ­ரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளது. இந்­தப் ­பொ­ரு­ளா­தார நெருக்­க­டி­யினை சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வி­யுடன் தீர்த்­துக்­கொள்ள முடியும். நாட்டு மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு என்ன தீர்வு? எனக் கேள்­வி­யெ­ழுப்­பு­கி­றார்கள். இதற்கு குறு­கிய கால, இடைக்­கால மற்றும் நீண்­ட­கால தீர்­வுகள் என வகைப்­ப­டுத்­தலாம். யார் ஆட்­சியில் இருக்­கி­றார்கள் யார் எதிர்­கட்­சியில் இருக்­கி­றார்கள் என்­பது பிரச்­சி­னை­யல்ல. யார் பத­வியில் இருந்­தாலும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் ஒத்­து­ழைப்­புடன் நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்வு காண முடியும். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு நாம் உட்­பட்டே ஆக வேண்டும். வரிகள் அதி­க­ரிக்­கப்­ப­டலாம். ஊழல்கள் ஒழிக்­கப்­ப­ட­வேண்டும். பாது­காப்­புக்­கென செல­விடும் நிதியில் குறைப்பு செய்­யப்­ப­டலாம். இதே­வேளை கல்­விக்கும் சுகா­தா­ரத்­துக்கும் பெரு­ம­ளவில் நிதி ஒதுக்­கப்­ப­ட­வேண்டும்.

அனைத்துக் கட்­சி­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வெளி­நாட்­டுக்­கொள்கை கடைப்­பி­டிக்­க­வேண்டும்.அனைத்து நாடு­க­ளுடன் நட்­பு­றவைப் பேணும் வெளி­நாட்­டுக்­கொள்­கையே எமக்குத் தேவை. இது ஒரு அர­சியல் கட்­சியின் வெளி­நாட்­டுக்­கொள்­கை­யாக இருக்­கக்­கூ­டாது. இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்­கை­யாக அமைய வேண்டும்.

அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்­ளது. பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­ய­ளிக்க நான் பிரார்த்­திக்­கிறேன் என்றார்.
ஜமா அத்தே இஸ்­லா­மியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்­லாஹி பிர­தம அதி­திக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெள­ர­வித்தார்.

மாநாட்டில் அடுத்த இரண்டு ஆண்டு காலத்­துக்­கான இரண்டு உதவித் தலை­வர்­களும் மத்­திய ஆலோ­சனை சபைக்­கான (ஷுரா) 16 உறுப்­பி­னர்­களும் இர­க­சிய வாக்­கெ­டுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.