ஒரு தசாப்தத்தின் பின் பாகிஸ்தான் சந்தித்துள்ள பெரு வெள்ளம்

ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி, 33 மில்லியன் பேர் பாதிப்பு

0 287

பாகிஸ்­தானில் ஏற்­பட்­டி­ருக்கும் பாரிய வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மில்­லியன் கணக்­கானோர் உதவி கோரி வரு­வ­தாக அந்­நாட்டின் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தானின் தேசிய அனர்த்த முகா­மைத்­துவ அதி­கார சபை­யினால் கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி, பரு­வ­ம­ழை­யினால் ஏற்­பட்ட வெள்ள அனர்த்தம் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 1,136 ஐ எட்­டி­யுள்­ளது.
அத்­தோடு பாகிஸ்­தானின் தென் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள சில கிரா­மங்­க­ளு­ட­னான தொடர்­புகள் முழு­மை­யாக துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­மையால் அப்­பி­ர­தே­சத்தின் தக­வல்­களை பெற்­றுக்­கொள்­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
வர­லாறு காணாத மழைக்­காலம் பாகிஸ்­தானில் நான்கு மாகா­ணங்­களை பெரு­வா­ரி­யாக பாதித்­துள்­ளது. ஏறக்­கு­றைய ஒரு மில்­லியன் வீடுகள் அழிக்­கப்­பட்­டுள்­ளன அல்­லது மோச­மாக சேத­ம­டைந்­துள்­ளன. குறித்த மாகா­ணங்­க­ளி­லுள்ள பெருந்­தெ­ருக்கள் மற்றும் வீதிப் போக்­கு­வ­ரத்­துகள் முற்­றாக தடைப்­பட்­டுள்­ள­துடன் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. குறைந்­தது 33 மில்­லியன் மக்­களை இந்த வெள்ள அனர்த்தம் வெகு­வாக பாதிக்­கி­றது.

உணவு, குடிநீர் மற்றும் தங்­கு­மி­டத்­திற்­காக லட்­சக்­க­ணக்­கானோர் காத்­தி­ருக்கும் நிலையில், இந்த துண்­டிக்­கப்­பட்ட சமூ­கங்­களை அடைய மீட்புக் குழுக்கள் போராடி வரு­கின்­றன.

வீதி இணைப்­புகள் சேத­ம­டைந்­துள்­ளதால், ஹெலி­கொப்­டர்கள் மட்­டுமே பெரும்­பா­லான சமூ­கங்­களைச் சென்­ற­டைய ஒரே வழி­யாக உள்­ளன. வெள்ளம் பாதித்த பகு­தி­க­ளுக்குச் செல்­வ­தற்கு உதவி நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ பாகிஸ்தான் இரா­ணு­வமும் அழைக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்ளம் சூழ்ந்த பகு­தி­களில் இருந்து லட்­சக்­க­ணக்­கான மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக, வட­மேற்கு கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தில் உள்ள சார்­ச­டாவில் இருந்து 180,000 பேரும், நவ்­ஷேரா மாவட்­டத்தில் இருந்து 150,000 பேரும் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர் என்று பாக். அர­சாங்க தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பலு­சிஸ்தான் மாகா­ணத்­திற்கு 45 மில்­லியன் டொலர் நிவா­ரண நிதியை பிர­தமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­வித்தார். அத்­தோடு, வீடு­களை இழந்த அனை­வ­ருக்கும் அரசு வீடு வழங்கும் என்றார்.
அத்­தோடு, தெற்கு சிந்து மாகா­ணத்தின் பல பகு­திகள் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்கி இருப்­பதால் அங்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கன­ம­ழையால் ஏற்­பட்ட திடீர் வெள்­ளத்தால் கிரா­மங்கள் மூழ்­க­டிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பயிர்ச் செய்­கை­களும் கிரா­மிய மற்றும் சிறு கைத்­தொ­ழி­லி­டங்­களும் அழி­வ­டைந்­துள்­ளன. இந்­நி­லையில், படை­யி­னரும் மற்றும் மீட்புப் பணி­யா­ளர்­களும் வெள்­ளத்தில் சிக்­குண்டு தவிக்கும் மக்­களை நிவா­ரண முகாம்­க­ளுக்கு பாது­காப்­பாக வெளி­யேற்றி வரு­கின்­றனர்.

இந்த ஆண்டு ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்தம் 2010 இன் அனர்த்­தத்­துடன் ஒப்­பி­டப்­ப­டு­கி­றது. அப்­போது 2,000க்கும் அதி­க­மா­ன­வர்கள் உயி­ரி­ழந்­த­தோடு நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி நீரில் மூழ்­கி­யது. இந்­நி­லையில் தற்­போது பல வாரங்­க­ளாக இடை­வி­டாமல் பெய்­து­வரும் அடை மழையால் மில்­லியன் கணக்­கான ஏக்கர் பயிர் நிலங்கள் மூழ்­கி­யுள்­ளன.
இத­னி­டையே பாகிஸ்தான் அர­சாங்கம், தேசிய அவ­ச­ர­நி­லையை அறி­வித்து சர்­வ­தேச உத­வியை நாடி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, துருக்கி மற்றும் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இருந்து கூடா­ரங்கள், உணவு மற்றும் பிற அத்­தி­ய­வ­சியப் பொருட்­களை ஏற்­றிக்­கொண்டு விமா­னங்கள் வந்தன. கத்தார் செஞ்சிலுவைச் சங்கமும் அவசர உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இதனிடையே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சர்வதேசத்திடம் கோரியுள்ளது. அத்தோடு, பாகிஸ்தான் அரசாங்கம், இந்தப் பேரழிவைச் சமாளிக்க, நட்பு நாடுகள், நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை நாடி வேண்டுகோள் விடுத்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.