குழப்பமான நிகழ் காலத்திலிருந்து தெளிவான எதிர்காலத்தை நோக்கி

0 400

மூலம்: திஸாரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்

1942 நவம்பர் மாதம் ஆகும் போது ஐரோப்­பிய நாடு­களின் அனே­க­மான பகு­திகள் ஹிட்­லரின் நாசிசப் படை­யினர் வசப்­பட்­டி­ருந்­தது. சோவியத் நாடு ஜேர்­ம­னியப் படை­க­ளுக்கு எதி­ராக தனி­யாக நின்று யுத்தம் செய்து கொண்­டி­ருந்­தது. மிகப்­பெரும் ஏகா­தி­பத்­தி­யத்தின் சொந்­தக்­கா­ரன்­க­ளாக இருந்தும் பிரித்­தா­னியா தனிமைப்படுத்­தப்­பட்ட ஒரு தீவாக மாறி­யது. அந்­நாட்டு மக்கள் அத்­தி­ய­வ­சிய உணவுப் பொருட்­க­ளுக்கே திண்­டாடும் நிலையில் எதிர்­கா­லத்தை எதிர்­கொண்­டனர்.

பிரித்­தா­னிய லிபரல் கட்­சியின் தலை­வர்­களுள் ஒரு­வ­ரான சேர் வில்­லியம் பெவரிஜ் யுத்­தத்தின் பின்­ன­ரான பிரித்­தா­னி­யாவின் வடிவம் பற்­றிய ஒரு விரி­வான அறிக்­கையை இந்த இருள் சூழ்ந்த யுகத்­திலும் வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. பெவ­ரிஜின் அறிக்கை உட­ன­டி­யா­கவே மக்­க­ளி­டையே பெரும் வர­வேற்பை பெற்­றது. அதன் பிர­திகள் ஏரா­ள­­மான மக்­களால் கொள்­வ­னவு செய்­யப்­பட்­ட­துடன் அது பிரித்­தா­னிய மக்­களின் பிர­தான பேசு பொரு­ளாக மாறி­யது.

பெவரிஜ் அறிக்­கையின் அடிப்­ப­டை­யாக அமைந்­தது யுத்­தத்தின் பின்­ன­ரான பொரு­ளா­தார சமூக மறு­சீ­ர­மைப்­புக்­கான செல­வு­களை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்­ப­தாகும். மக்­களை மேலும் மேலும் வயி­று­களைச் சுருக்கிக் கொள்­ளு­மாறு கூறு­வ­தற்குப் பதி­லாக அவர்­களின் பொரு­ளா­தா­ரத்தைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு வேலைத்­திட்­டத்தை அடுத்து வரும் ஆட்­சி­யாளர் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்று அதில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இல­வச வைத்­திய சேவை, போது­மான அளவு ஓய்­வூ­தியம், குடும்­பங்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் பற்றி அவ்­வ­றிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தச் செயற் திட்­டங்­க­ளுக்­கான நிதியை உயர் வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கும் பாரம்­ப­ரி­ய­மாக தன­வந்­தர்­க­ளுக்கும் வரி விதிப்­பதன் மூலம் பெற்றுக் கொள்­ளட்டும் என்றும் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது.

பெவரிஜ் அறிக்கை தொடர்­பாக பிரித்­தா­னி­யாவின் சகல அர­சியற் கட்­சி­க­ளி­னதும் இணக்­கப்­பாடு 1945 காலப் பகு­தியில் வழங்கப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் அதா­வது 1945 ஜூலை 5ஆம் திகதி நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­தலின் போது தொழிற் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக பெவரிஜ் அறிக்கை அமைந்­தி­ருந்­தது. யுத்த காலப் பிர­தம மந்­தி­ரி­யான வின்சென்ட் சாச்சிலையும் அவ­ரது கட்­சி­யான (கொன்­ஸர்­வேடிவ்) பழ­மைபேண் கட்­சி­யையும் தோற்­க­டித்து ஒரு பாரிய வெற்­றியை அமைத்துக் கொள்ள தொழிற் கட்­சி­யினால் முடிந்­தது. அதற்­கான முக்­கிய காரணம் யுத்­தத்தின் பின்­ன­ரான மீள் கட்­டு­மானப் பணி­களின் போது செல­வுகள் பொது­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற தெளி­வான செய்தி மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­தாகும்.

இரண்டாம் உலக யுத்­தத்தை தொடர்ந்து ஐரோப்­பாவின் அனே­க­மான நாடுகள் இந்த உதா­ர­ணத்தைக் கையாண்டு இலா­பத்­துக்கும் சமூக நீதிக்­கு­மி­டை­யி­லான ஒரு வகை­யான சம­நி­லையை உறு­திப்­ப­டுத்தும் பொரு­ளா­தார முறையின் பால் ஈர்க்­கப்­பட்­டனர். வரி­மு­றையில் மறை­முக வரி­களில் தளர்­வுகள் ஏற்­ப­டுத்தி நேர­டி­யான வரு­மான வரி போன்­ற­வற்றில் கவனம் செலுத்­தப்­பட்­டது. காணிகள் சொத்­துகள் மீது வரி விதிக்கும் முறையும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. வரி வரு­மா­னத்தின் குறிப்­பி­டத்­தக்க பகுதி குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­களின் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்தும் திட்­டங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டது.

யுத்­தத்தின் பின்னர் ஐரோப்­பா­வெங்கும் கடும் நிதி நெருக்­க­டியும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான தட்­டுப்­பாடும் தலை தூக்­கி­யது. யுத்த அழி­வு­களினால் மொத்த ஐரோப்­பா­வுமே பிச்­சைக்­கா­ரர்­க­ளா­னார்கள் என்று கூறி­னாலும் மிகை­யா­காது. வர­லாற்றில் எப்­போ­து­மில்­லாத நெருக்­க­டி­யான நிலையில் பிரித்­தா­னியா அதி­கூ­டிய நலன்­புரி சேவை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது ஏன் என்ற வினாவை வர­லாற்­றா­சி­ரி­ய­ரான (Tony Judt) டோனி ஜூட் தம­து Post war என்ற நூலில் எழுப்­பி­யி­ருந்தார். அதற்கு அவர் வழங்கும் பதில் இத்­த­கைய நலன்­புரி வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஐரோப்­பிய நாடுகள் தூண்­டப்­படக் காரணம் அவர்கள் எதிர்­கொண்ட கடு­மை­யான நெருக்­க­டி­க­ளி­னா­லாகும் என்­ப­தாகும். யுத்­தத்­தினால் அல்லல் பட்ட மக்­க­ளி­டையே நல்­ல­தொரு எதிர்­காலம் பற்­றிய ஒரு நம்­பிக்­கை­யான எதிர்­பார்ப்பை தோற்­று­விக்­காதுவிடின் மீண்டும் அவர்கள் தீவி­ர­வா­தத்தின் பால் ஈர்க்­கப்­ப­டலாம் என்ற ஆபத்தை உணர்ந்து கொள்ளும் அள­வுக்கு ஐரோப்­பிய முத­லா­ளித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் புத்­தி­சா­லி­க­ளாக இருந்­தனர்.

இந்தப் பழைய கதை முன்­னெப்­போ­து­மில்­லாத நெருக்­க­டியைச் சந்­தித்­துள்ள எமது நாட்டின் இன்­றைய நிலைக்கும் பொருத்­த­மா­னது. 1970 -– 77 காலப்­ப­கு­தியில் சாதா­ரண மக்கள் மிக­வுமே சிர­மங்­க­ளுக்­குள்­ளா­னார்கள் என்­பது உண்மை. ஆயினும் அது ஒரு பொரு­ளா­தாரக் கொள்­கையின் தூர நோக்கின் ஒரு விளை­வாக நிகழ்ந்­த­வை­யாகும். மூடிய பொரு­ளா­தா­ரத்தின் நன்மை தீமை பற்றி நாம் வேறாக ஆராய வேண்டும். இன்­றைய நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் பிழை­யான பொரு­ளா­தார கொள்கையல்ல. மாறாக பொரு­ளா­தா­ரத்தின் அ, ஆ கூடத் தெரி­யாத ஆட்­சி­யா­ளர்­களின் மடத்­த­ன­மான செயற்­பா­டாகும்.

நெருக்­கடி மிகப் பார­தூ­ர­மா­னது என்­பதால் செலவும் அதற்குச் சம­மாக இருக்க வேண்டும். அது தொடர்­பான அர­சியல் களத்­திலும் சமூ­கத்­திலும் ஏற்­பட வேண்டி பரந்த உரை­யாடல் இடம்­பெற வேண்­டி­யது தேர்­தலை நெருங்­கிய பின்­ன­ரல்ல, மாறாக இப்­போ­தி­லி­ருந்­தே­யாகும்.

தவறு எங்கே? யாரு­டை­யது?
2022 ஆம் ஆண்டின் எதிர்­பார்த்த பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியைப் பெற முடி­யாது என சர்­வ­தேச நாணய நிதியம் ஜன­வரி மாதத்­தி­லேயே அறி­வித்­தது. ரஷ்ய ஜனா­தி­பதி புடின் யுக்­ரே­னுக்கு படை­யெ­டுக்க முன்­னரே இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யது. அதற்குப் பதி­லாக ஐரோப்­பிய நாடுகள் ரஷ்­யாவின் மீது விதிக்கும் பொரு­ளா­தாரத் தடைகள் உலகப் பொரு­ளா­தா­ரத்தில் எத்­த­கைய மாற்­றங்­களைத் தோற்­று­விக்கும் என்­பதை மதிப்­பீடு செய்­வ­தற்கு சற்றுக் கால­மெ­டுக்கும். ஆயினும் அது எதிர்க் கணி­ய­மான பாதிப்­பாக இருக்கும் என்­பது தெளிவு.

2021 இல் இலங்கைத் தேயி­லையின் இரண்­டா­வது பெரும் இறக்­கு­ம­தி­யாளர் ரஷ்­யா­வாகும். இலங்­கைக்கு வரும் உல்­லாசப் பிர­யா­ணி­களில் பெரும்­பா­லானோர் ரஷ்­யா­வையும் உக்­ரை­னையும் சேர்ந்­த­வர்கள். எனவே உக்ரைன் யுத்தம் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்த இன்­னொரு பேரி­டி­யாக அமை­யலாம். இந்த நிலை­மையை எதிர்­கொள்­வது எப்­படி என்­ப­தற்­கான விளக்­கமோ தேவையோ எமது நாட்டு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. கொவிட் தொற்றுப் போலவே ரஷ்யா உக்ரைன் யுத்­தமும் அர­சாங்­கத்தின் பல­வீ­னத்தை மூடிக்­கொள்ளக் கிடைத்­துள்ள ஒரு போர்வை மட்­டுமே.

உரு­வா­கி­யுள்ள டொலர் நெருக்­க­டிக்கு தாமோ தமது அரசோ எவ்­வி­தத்­திலும் கார­ண­மல்ல என்றும் ஒரே ஒரு காரணம் பெருந் தொற்று என்றும் சில நாட்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி கூறி­னார்.இப்­போது அவர் தவறு யாரு­டை­யது? என்ற பட்­டி­யலில் உக்ரைன் நெருக்­க­டி­யையும் உட்­ப­டுத்­தி­யுள்ளார். அது­வல்­லாது நாட்­டுக்கு என்ன நடக்­கி­றது என்­பது பற்றி ராஜ­ப­க்ஷக்­க­ளுக்குப் புரிந்­து­ணர்வு உள்­ளது என்­பதை காண முடி­யா­துள்­ளது. ஒரு பிர­தே­சத்­துடன், மாகா­ணத்­துடன் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் முழு இலங்­கை­யிலும் ஒரே­மா­தி­ரி­யான அபி­வி­ருத்தி நடை­பெறும் ஒரு காலம் இன்று போன்று முன்­னெப்­போதும் இருந்­த­தில்லை என்று அன்­மையில் கட்­டு­வன என்ற இடத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் பிர­தமர் கூறினார்.

ஒரு கிலோ அரிசி இரண்டு பேர்­க­ளுக்கு ஒரு வாரத்­துக்குப் போது­மா­னது என அண்­மையில் அமைச்சர் சமல் ராஜ­பக்ஷ குறிப்­பிட்டார். தனது குழந்­தைக்கு மூன்று நாட்­க­ளாக பசிக்கு உணவு வழங்க முடி­யாத பரி­தாப நிலையில் ஒரு தந்தை தற்­கொலை செய்து கொண்ட ஒரு நாட்டையே தாம் ஆட்சி செய்­வ­தாக ராஜ­பக்­சக்களின் பேச்­சுக்கள் உணர்த்­த­வில்லை.

2019 நவம்­பரில் ராஜ­பக்­ச­வா­திகள் 69 இலட்சம் வாக்­குகள் பெற்று ஆட்­சிக்கு வரும் போது இலங்­கையின் வெளி­நாட்டுச் செலா­வணி இருப்பு 7.5 பில்­லியன் அம­ரிக்க டொலர்­க­ளாக இருந்­தது. முன்­னைய அர­சாங்­கத்தின் போது வெளி­நாட்டுச் செலா­வணி இருப்பு ஆகக்­கு­றைந்த மட்­டத்­துக்குச் சென்ற 2016 இல் அது 6.01 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். எனவே டொலர் நெருக்­கடி சிறி­சேன – விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சியில் ஏற்­ப­ட­வில்லை என்­பது இதன் மூலம் தெளி­வா­கின்­றது.

கொவிட் தொற்று டொலர் நெருக்­க­டியில் செல்­வாக்குச் செலுத்­தி­யது என்­பது உண்­மையே. ஆயினும் இந்த நாட்டின் வெளி­நாட்டுச் செலா­வணி இருப்பு இழி நிலையை அடைந்­தமைக்கான பிர­தான காரணம் கண்மண் தெரி­யாமல் பணத்தாள் அச்­சிட்­ட­மை­யாகும். 2020 பெப்­ர­வ­ரியில் இருந்து இன்று வரை இந்தப் பணத் தாள் அச்­ச­டிப்புத் தொடர்­கி­றது.

அர­சாங்கம் பணத்தை அச்­சிட்டு தனது நிதிப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யு­மானால் பொரு­ளா­தாரக் கோட்­பா­டுகள் எதற்கு? அச்­சி­யந்­தி­ரங்­களும் பணம் அச்­சிடும் தாளும் இருந்தால் போது­மா­னது. இந்த எளிய உண்­மையைக் கூடப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ராஜ­ப­க்ஷாக்­க­ளுக்கு இல்லை. அந்த உண்­மையை அவர்­க­ளுக்கு விளங்கும் பாஷையில் எடுத்­துக்­கூற எந்த அர­சாங்க அதி­கா­ரி­களும் முன்­வ­ர­வு­மில்லை.

இலங்கை ரூபாவின் மதிப்பை வலுக்­கட்­டா­ய­மாக பிடித்து வைத்துக் கொண்­டதால் வெளி­நாட்டில் பணி­பு­ரியும் ஊழி­யர்கள் வங்­கி­க­ளுக்கு பணம் அனுப்­பு­வதை தவிர்த்து உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற வழி­களை நாடத் தொடங்­கினர். உதா­ர­ண­மாக 2021 ஜன­வ­ரியில் இலங்­கைக்கு வெளி­நாட்டுப் பணி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த டொலர்­களின் எண்­ணிக்கை 675.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். 2022 இல் அது 259.2 மில்­லியன் டொலர்­களை அதா­வது 61% வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. கடந்த இரண்டு வரு­டங்­களில் 1.5 டிரில்­லியன் ரூபாய்­களை அச்­சிட்­டமை கார­ண­மாக இலங்கை இழந்த வெளி­நாட்டுச் செலா­வணி 5.5 பில்­லியன் டொலர்­க­ளாகும்.

குறைந்து வரும் அரச வரு­மா­னத்தை ஈடு செய்­யவே ராஜ­பக்­சக்கள் பணம் அச்­சிட்­டனர். அரச வரு­மானம் 2020 ஜன­வரி முதல் வீழ்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யது. பெப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்தே பணம் அச்­சிடும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. அப்­போது கொவிட்-19 இலங்­கையைத் தாக்­கி­யி­ருக்­க­வில்லை. அரச வரு­மான வீழ்ச்சி 2019 நவம்பர்,- டிசம்பர் மாதங்­களில் அர­சாங்கம் வழங்­கிய பாரிய வரிச்­ச­லு­கை­யு­ட­னேயே தொடங்­கி­யது. இவ்­வாறு வரிச்­ச­லுகை வழங்­கு­வது குறித்து இலங்கை மத்­திய வங்கி கூட அறிந்­தி­ருக்­க­வில்லை என்று மத்­திய வங்­கி­யுடன் எவ்­விதக் கலந்­து­ரை­யா­டலும் இது தொடர்­பாக நடத்­தப்­ப­ட­வில்லை என்றும் அண்­மையில் ரொய்ட்டர் சேவைக்கு வழங்­கிய நேர்­மு­கத்தில் மத்­திய வங்­கியின் முன்னாள் பிரதி ஆளுனர் நந்­தலால் வீர­சிங்ஹ குறிப்­பிட்டார்.

எவ்­வித ஆய்­வு­மின்றி வரிக் குறைப்பு செய்­த­மையே வீழ்ச்­சியின் ஆரம்­ப­மாகும். காலத்­துக்கும் நாட்­டுக்கும் பொருத்­த­மான வரி­மு­றையை முன்­மொ­ழி­வதன் மூலமே இதனைச் சரி செய்ய முடியும். இதன் பின்னர் வரும் எந்த அர­சாங்­க­மா­யினும் மேற்­கொள்ள வேண்­டிய முக்­கிய தெரிவு ராஜ­பக்ச வாதி­களின் பொரு­ளா­தார அனர்த்­தத்தின் சுமையை மக்­களின் எந்த வகுப்­பினர் தாங்­கிக்­கொள்ளப் போகின்­றனர் என்­ப­து­மாகும்.

உயர் வரு­மானம் பெறு­ப­வர்கள் மீது கூடிய வரி விதிக்கப்படு­வ­தனால் பொரு­ளா­தார விருத்­தியில் வீழ்ச்­சி­யேற்­ப­டு­வ­தில்லை என்­பதை 1980 முத­லான 40 ஆண்டு அனு­ப­வத்தில் சர்­வ­தேச நாணய நிதியம் தீர்­மா­னித்­துள்­ளது. வரு­மானம் அதி­க­ரிக்­கும்­போது வரியை அதி­க­ரிக்­கும் Progressive taxation கூடிச் செல்லும் முறையை அர­சாங்­கங்கள் கையாளத் தயங்­கு­வ­தற்குக் காரணம் சமூ­கத்தின் முக்­கிய புள்­ளி­களைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என்­ப­த­னா­லாகும் என்றும் சர்­வ­தேச நாணய நிதியம் (IMF) கூறி­யுள்­ளது.
இந்தத் தீர்க்­க­மான தெரிவின் போது தமது நிலைப்­பாடு எது­வாக இருக்கும் என்­பதை எதிர்க்­கட்­சி­களும் இப்­போ­தி­லி­ருந்தே தீர்­மா­னிக்க வேண்டும். அதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும். அது­வல்­லாமல் வெறும் வாக்­கு­று­தி­களால் ஏதும் பய­னுண்டா? என்ற கேள்வி எழு­கி­றது.

ரஷ்­யாவின் உக்ரைன்
ஆக்­கி­ர­மிப்பும் நாமும்
விளா­டிமிர் புட்டினின் உக்ரைன் ஆக்­கி­ர­மிப்­புக்கும் ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக் ஆக்­கி­ர­மிப்­புக்­கு­மி­டையே வித்­தி­யா­ச­மில்லை. ஈராக் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டித்­த­வர்கள் சதாம் ஹுசைனின் ஆத­ர­வா­ன­வர்கள் என்று சாதிக்க புஷ் நிர்­வாகம் முயற்­சிகள் எடுத்த போதிலும் உண்மை அது­வல்ல. சதாம் ஹுசைனை விரும்­பாத பலரும் கூட அமெ­ரிக்­காவின் ஈராக் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டித்­தனர்.

ரஷ்ய ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிப்­பது என்­பது உக்­ரைனை அப்­பாவி என்று தீர்­மா­னிப்­ப­தன்று. உக்­ரைனின் இன்­றைய நிலைக்கு அந்­நாடு அண்மைக் காலங்­களில் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு செய்த கொடு­மைகள் கார­ண­மாக அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக எமது நாட்டின் ‘சிங்­களம் மட்டும்’ என்ற தவ­றையும் உக்ரைன் தாரா­ள­மாகச் செய்­துள்­ளது. உக்ரைன் மொழியை அந்­நாட்டில் தேசிய மொழி­யாக சோவியத் யூனி­யனில் இருந்து பிரி­வ­தற்கு முன்­னரே அதா­வது 1984 லேயே ஆக்­கி­யது. 1991 இல் நிறை­வேற்­றப்­பட்ட சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக ரஷ்ய மொழி உட்­பட ஏனைய மொழி­க­ளுக்கு ஓர­ளவு இடம் வழங்­கப்­பட்ட போதிலும் இனப்­பி­ரச்­சினை ஏலவே துளிர்­விட்­டி­ருந்­தது.

2014 ஆட்சி மாற்­றத்தின் பின்னர் உக்ரைன் மொழியை உயர்த்தி வைத்து ஏனைய மொழி­களை கீழி­றக்கும் மூன்று சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இந்த நட­வ­டிக்­கைகள் புட்­டி­னுக்கு இவ்­வி­ட­யத்தில் அழ இருந்­தவன் கண்ணில் விரலைக் குத்­தி­யது போலா­கி­விட்­டது.

சோவியத் ஒன்­றியம் வீழ்ச்­சி­ய­டைந்த பின்னர் நேட்டோ அமைப்பைத் தோற்­று­வித்த கார­ணங்­களும் வலு­வி­ழந்­தன. சோவியத் யூனி­யனின் வீழ்ச்­சியும் அமெ­ரிக்க தலை­மை­யி­லான மேலை நாடுகள் ரஷ்­யாவில் இருந்து பிரிந்த கிழக்கு ஐரோப்­பிய நாடு­களின் பொரு­ளா­தாரத்தை மேம்­ப­டுத்த மார்ஷர் திட்­டத்தை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் நேட்­டோவை பலப்­ப­டுத்தி பர­வ­லாக்கும் முயற்­சி­யி­லேயே தொடர்ந்தும் கவனம் செலுத்­தினர்.

அன்று மேற்­கை­ரோப்­பா­விற்­காக அமெரிக்கா நடை­மு­றைப்­ப­டுத்­திய மாஷல் திட்டம் கார­ண­மாக கம்­யூ­னி­சத்தின் வளர்ச்சி தடைப்­பட்­டது. 1989/90 களில் மேற்­கத்­தேய வல்­ல­ர­சுகள் வோர்ஸோ (war sa­w p­a­ct) ஒப்­பந்த நாடு­களில் அதே போன்ற ஒரு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருப்பின் அந்­நா­டு­களில் இன­வாதம் பர­வு­வது தடைப்­பட்­டி­ருக்கும். 1945 இல் மேற்­கை­ரோப்­பிய நாடு­களில் போன்றே ஒரு நீதி­யான அபி­வி­ருத்திப் பாதையை 1990 களில் ரஷ்­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருப்பின் புட்டின் போன்ற ஒரு ஜனா­தி­பதி வரா­மலும் இருந்­தி­ருக்­கலாம்.

2021 ஜூனில் ஜனா­தி­பதி புட்டின் (On the historic unity of Russian and ukrainian) என்ற தலைப்பில் ஒரு கட்­டு­ரையை எழு­தினார். யுக்­ரே­னி­யர்கள் வேறு ஒரு இனம் அல்ல எனவும் அவர்கள் சின்ன ரஷ்­யர்கள் (Little Russians) மட்­டுமே எனவும் சார் அரசின் கருத்தை இக்­கட்­டு­ரையில் எழு­தி­யி­ருந்தார். 2021 பெப்­ர­வரி 21ஆம் திகதி நடத்­திய ஓர் உரையில் உக்­ரைனை உரு­வாக்கி விரி­வு­ப­டுத்­தி­யமை லெனின், ஸ்டாலின், குருஷேவ் ஆகியோர் மேற்­கொண்ட ரஷ்யன் விரோத நட­வ­டிக்கை என்று அவர் குற்­றம்­சாட்­டினார். அவரின் நோக்கம் சோவியத் யூனி­யனை மீண்டும் உரு­வாக்­கு­வ­தல்ல. சார் ஏகா­தி­பத்­தி­யத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாகும். இப்­போது நடை­பெறும் ஆக்­கி­ர­மிப்பு வெற்­றி­ய­டைந்தால் ரஷ்­யாவின் ஒரு குடி­யேற்ற நாடாக மாறும் ஆபத்து உக்­ரே­னுக்கு உண்டு. அதிர்ஷ்­ட­வ­ச­மாக உக்ரைன் ரஷ்­யா­வுக்கு மற்­று­மொரு ஆப்­கா­னிஸ்­தா­னாக மாறக்­கூ­டாது என்ற சமிக்ஞை கிடைத்­துள்­ள­தா­கவே தெரி­கி­றது.

கியூபா தொடர்­பி­லான அமெ­ரிக்­காவின் செயற்­பாட்டை பேரா­சி­ரியர் நோம் சொம்ஸ்கி ஒரு மாபியாக் கோட்­பாடு என வர்­ணித்தார். அதா­வது தனக்கு அடி­ப­ணிய மறுக்கும் நாடு­களை குரூ­ரத்­துடன் தண்­டிப்­ப­தாகும். உக்ரைன் தொடர்­பான ரஷ்­யாவின் கொள்­கையும் இத­னை­யொத்­த­தா­கவே உள்­ளது. பழி­வாங்கும் தலை­வர்­க­ளினால் தீங்கு விளை­வது அண்மிய நாடுகளுக்கு மட்டுமன்றி தமது நாட்டு மக்களுக்கும் தான் என்பது உண்மை.

இலங்­கையில் தற்­போது 7 மணி நேரத்­துக்கு மேற்­பட்ட மின் துண்­டிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. மழையை எதிர்­பார்த்துக் காத்­தி­ருப்­பது தவிர ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் மின்­சாரப் பிரச்­சி­னைக்கு தீர்­வேதும் இல்லை. மசகு எண்ணெய் நெருக்­க­டிக்­கான அவர்­களின் தீர்வு துவிச்­சக்­கர வண்­டியை மீளக் கொண்டு வரு­வ­தாகும். நாடும் மக்­களும் அனர்த்­தத்தில் இருந்து அனர்த்­தத்தை நோக்கிப் பய­ணிக்கும் இந்த இக்­கட்­டான கட்­டத்­திலும் அர­சாங்கம் தம் எதி­ரியைத் தேடிப் பழி­வாங்­கு­வ­தி­லேயே குறி­யாக உள்­ளது. உதிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடக்க விடாது தடுக்­காத குற்­றத்­துக்­காக முன்னாள் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சானி அபே­சே­கர மீது குற்றம் சுமத்தி அவரை பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் (PTA) கைது செய்யும் யோசனை இருப்­ப­தாக ஊட­கங்கள் கூறும் எதிர்­வு­கூறல் இதற்­கான உதா­ர­ண­மாகும்.

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்­பு­களை முறை­யாக முகா­மைத்­துவம் செய்­யா­மையின் விளைவை உக்ரைன் ஆக்­கி­ர­மிப்பில் காண­மு­டி­கி­றது. புட்டினின் குரூ­ர­மான ஆக்­கி­ர­மிப்­பினால் ரஷ்ய நாடு எதிர்­நோக்கும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையில் இருந்து அதி­கார வெறி பிடித்த தலை­வர்கள் தமது பதவி ஆசைக்கும் நாட்டின் உண்­மை­யான நன்­மைக்கும் இடையில் எந்த வேறு­பாட்­டையும் கண்­டு­கொள்­ளாமல் இருப்­பது எவ்­வ­ளவு ஆபத்­தா­னது என்­ப­தே­யாகும்.

இந்த இரு­வகைப் பிரச்­சி­னை­க­ளையும் இன்­றைய இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. நாளை ராஜ­பக்­சக்கள் இந்த மண்­ணி­லி­ருந்து மறைந்­தாலும் இந்த நெருக்­கடி தீரப்­போ­வ­தில்லை. ஆள் மாற்­று­வ­தாக அன்றி கொள்கை மாற்றமும் எமக்குத் தேவை. ஒரு இரட்சிப்பவரைத் தேடுவதை விடுத்து இன்றைய சிதைவு களை நாளைய முன்மாதிரிகளாக மாற்றுவதே எமது பணியாக அமைய வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.