ஜெய்லானி பள்ளிக்கு சென்று வரலாம்

0 464

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­லா­தீர்கள். அங்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என்று ஒரு சிலரால் தவ­றான வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இதில் எவ்­வித உண்­மை­யு­மில்லை. நாட்டின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தரும் மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாகம் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.
இது தொடர்பில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் முகா­மை­யாளர் எம்.எஸ்.எம்.ரபி­யுதீன் தெரி­விக்­கையில், `ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தரும் பக்­தர்கள் எவ்­வித அச்­சமும் கொள்­ளத்­தே­வை­யில்லை. அவர்­க­ளது பாது­காப்பு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் பொறுப்­பாகும்.

இங்கு வரும் பக்­தர்கள் தொழுகை, திக்ர், ஸல­வாத்து, மெள­லூது மஜ்லிஸ், ராத்­திபு மஜ்லிஸ் உட்­பட அனைத்துக் கட­மை­க­ளையும் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி மேற்­கொள்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்­ளது.
இங்கு வரும் பக்­தர்­க­ளுக்கு எவரும் தடை விதித்தால் அல்­லது இடை­யூ­றுகள் விளை­வித்தால் அது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலை­வ­ருக்கு அறி­விக்க முடியும்.
நாட்டின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் பக்­தர்கள் இங்கு வரு­மாறு நாம் அன்­புடன் அழைக்­கிறோம். உங்­களின் வருகை பள்­ளி­வா­சலின் இருப்பை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு துணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கூரகல பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.