ஜனாதிபதி செயலணி மீதான எதிர்ப்புகள் வலுவடைகின்றன

0 458

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு எதி­ராக எதிர்ப்­புகள் வலு­வ­டைந்து வரு­வ­துடன் கண்­ட­னங்­களும் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.

தமிழ்­பேசும் சிறு­பான்­மைக்­கட்­சிகள், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, தேசிய சூரா கவுன்ஸில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. உட்­பட சிவில் சமூக அமைப்­புகள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளன. இதே வேளை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் ஜனா­தி­பதி செய­லணி நிய­மனம் முறை­யற்­றது என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது.

தமிழ் பேசும் சிறு­பான்மை கட்­சிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்தில் ஒன்று கூடி இச்­செ­ய­லணி நாட்டு மக்­க­ளி­டையே இன,மத பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தக்­ கூ­டிய ஆபத்­தினைக் கொண்­டுள்­ளதால் இந்­நி­ய­ம­னத்தை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும், இச்­செ­ய­லணி ரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

இச்­சந்­திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமி­ழீழ விடு­தலை இயக்கம், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, தமிழ் மக்கள் விடு­தலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்­டணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, தமிழ் தேசிய கூட்­டணி என்­ப­ன­வற்றின் தலை­வர்­களும் முக்­கி­யஸ்­தர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இக்­கட்­சி­களின் இரண்டாம் கட்­ட­ சந்­திப்பு அடுத்து வரும் இரு­ வா­ரங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இதே வேளை அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் இச்­செ­ய­ல­ணியை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ள­துடன் எதிர்ப்பும் வெளி­யிட்­டுள்­ளது. நீதி­மன்­றினால் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த, இன­வா­தி­யான ஞான­சார தேரர் இச்­செ­ய­ல­ணியின் தலை­வ­ராக எவ்­வா-று பதவி வகிக்க முடியும்? என அக்­கட்­சியின் தவி­சாளர் அமீர் அலி கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உமலா சபை, தேசிய சூரா கவுன்ஸில் உட்­பட சிவில் சமூக அமைப்­புகள் எதிர்த்து கூட்­ட­றிக்கை வெளி­யிட்­டுள்­ளன.

இதே­வேளை, நீதி­ய­மைச்சின் செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்யும் வகை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செயலணியின் நியமனமானது, முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதாகும். என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.