கொவிட் ஜனாஸா விவகாரம் மாற்றுக் காணியை அடையாளம் காண்பதற்கு கலந்துரையாடல்

0 329

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வா­டியின் செயற்­பா­டு­களை நிறுத்திக் கொள்­வது மற்றும் மாற்­றுக்­கா­ணி­யொன்­றினை அடை­யாளம் காணு­வது தொடர்­பி­லான இறு­திக்­க­லந்­து­ரை­யா­ட­லொன்று கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபைக்கும், இரா­ணுவ தரப்பு கொவிட் செய­லணி மற்றும் சுகா­தார தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்­ள­தாக ஓட்­டா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை­த­வி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார்.

விடி­வெள்­ளிக்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், ஓட்ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வாடி 7 ஏக்கர் பரப்­ப­ள­வினைக் கொண்­ட­தாகும். அங்கு மேலும் 250 ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய முடியும். இங்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு மைய­வா­டிக்கு மாற்­றுக்­காணி ஏற்­பா­டு­களை செய்­யும்­படி சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களைக் கோரி­யி­ருக்­கிறோம். அதற்­கி­ணங்­கவே கலந்­துரையாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இங்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வரை 3182 ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நேற்று முன்தினம் 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.