எழுத்­து­லக ஜாம்­பவான் ‘ஜுனைதா ஷெரீப்’

0 526

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பிர­பல இலக்­கி­ய­வா­தியும் ஓய்வு பெற்ற அர­சாங்க அதி­கா­ரி­யு­மான ஜுனைதா ஷெரீப் தனது 82 ஆவது வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­யடி சேர்ந்தார்.

1940 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியில் பிறந்த இவர், 1967 ஆம் ஆண்­டி­லி­ருந்து ‘ஜுனைதா ஷெரீப்’ என்ற புனைப் பெய­ருடன் எழுத ஆரம்பித்தார்.

80 வயதைக் கடந்தும் மனைவி வபாத்­தா­கி­விட்ட நிலை­யிலும் இறு­தி­வரை எழுதி வந்தார். ‘ஜுனைதா ஷெரீப்’ என்ற பெயர் மூலமே இவர் அறி­மு­க­மா­கி­யி­ருந்­ததால் அவரை எல்­லோரும் ஒரு பெண் எழுத்­தாளர் என்றே நீண்ட கால­மாக எண்­ணி­யி­ருந்­தனர். ஜுனைதா எனும் தனது மனை­வியின் பெயரை இணைத்தே ‘ஜுனைதா ஷெரீப்’ எனும் புனைப் பெயரை அவர் உரு­வாக்­கி­யி­ருந்தார்.

20 நாவல்­க­ளையும் பல நூறு சிறு­க­தை­க­ளையும் வானொலி நாட­கங்­க­ளையும் எழுதி வாழ்­நாளில் ஏரா­ள­மான இலக்­கிய விரு­து­களைப் பெற்ற ஒரு­வ­ராக இவர் திகழ்­ந்தார்.
2019 ஆம் ஆண்­டுக்­கான அரச தேசிய இலக்­கிய விருது விழாவில் இவர் எழு­திய கன­வு­லகம் என்ற சிறு­கதை தொகுப்பு விருது வென்­றது.

1990 ஆம் ஆண்டு வானொலி நாடகத் தொகுப்­புக்­கான தேசிய இலக்­கிய விரு­தையும் 2006 ஆம் ஆண்டு நாவ­லுக்­கான தேசிய இலக்­கிய விரு­தையும் இவர் பெற்று சாதனை படைத்­துள்ளார்.

இதே போன்று இவர் 2006 ஆம் ஆண்டு ஜன­நா­ய­கர்கள் எனும் நூலுக்­காக வடக்கு கிழக்கு மாகாண விருதைப் பெற்­ற­துடன் இதே ஆண்டில் பெரி­ய­ம­ரைக்கார் சின்­ன­ம­ரைக்கார் என்ற நூலுக்­கான மாகாண மட்ட விரு­தையும் பெற்றார்.

2016 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை­யினால் நடாத்­தப்­பட்ட கிழக்கு மாகாண சபையின் இலக்­கிய விழாவில் சீதக்­கா­தினி என்ற நூலுக்­கான விரு­தையும் பெற்றுக் கொண்டார்.

இவர் எழு­திய சூனி­யத்தை நோக்கி எனும் நாவல் சர்­வ­தேச விரு­தையும் பெற்றுக் கொடுத்­தது.

2019 ஆம் ஆண்டு தமிழ் நாடு தஞ்­சாவூர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற விழாவில் இவர் கரிகாற் சோழன் எனும் சிறப்பு விருது வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்டார்.
இலங்கை, இந்­தியா, மலே­சியா, சிங்­கப்பூர் ஆகிய நாடு­களைச் சேர்ந்த இலக்­கிய ஜாம்­ப­வான்கள் கலந்து கொண்ட முஸ்­தபா அறக்­கட்­டளை நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெற்ற இந்த சர்­வ­தேச இலக்­கியப் பெரு விழாவில் இவ­ருக்கு இந்த சிறப்பு விருது வழங்­கப்­பட்­டது.

இவர் ஒரு எழுத்­தாளர், இலக்­கி­ய­வாதி மாத்­தி­ர­ம­ன்றி ஒரு சிறந்த நிரு­வாக அதி­கா­ரி­யா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

இவற்றைத் தவிர இக்பால் தின விருது, தமி­ழியல் விருது என பல இலக்­கிய விரு­து­களைப் பெற்­றுள்ள ஜுனைதா ஷெரீப் தனது கல்­வியை காத்­தான்­குடி முதலாம் குறிச்சி அந் நாசர் வித்­தி­யா­ல­யத்தில் கற்­றுள்ளார்.
1975 ஆம் ஆண்டு நடை­பெற்ற இலங்கை நிரு­வாக சேவை பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த இவர் கிழக்கு மாகா­ணத்தின் முதல் முஸ்லிம் நிரு­வாக சேவை அதி­கா­ரி­யாக தெரிவு செய்­யப்­பட்டார்.

அதன் பின்னர் 1975ஆம் ஆண்டு அட்­டா­ளைச்­சே­னையின் பிரி­வுக்­கா­ரி­ய­த­ரி­சி­யா­கவும் பின்னர் பிரிவு உதவி அர­சாங்க அதி­ப­ரா­கவும் 1977 ஆம் ஆண்டு வீசிய சூறா­வ­ளிக்குப் பின்னர் தலை­மை­யக உதவி அர­சாங்க அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றினார். பின்னர் 1990ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட மேல­திக அர­சாங்க அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலா­சாரத் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­ய­துடன் 1994 ஆம் ஆண்டு புனர்­வாழ்வு அதி­கார சபையின் மேல­திக பொது முகா­மை­யா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.

இன விவ­கார தேசிய நல்­லி­ணக்க அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ரா­கவும் கடமை புரிந்­துள்ளார்.

அரச சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐக்­கிய நாடுகள் வாழ்­விட நகர முகா­மை­யா­ள­ரா­கவும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்­டோவின் இணைப்­பா­ள­ரா­கவும் செய­லாற்­றி­யுள்ள இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் முகா­மைத்­துவ பட்­டப்பின் டிப்­ளோமா கற்­கை­நெ­றி­யையும் பூர்த்தி செய்­துள்ளார்.

இவ்­வாறு எழுத்­து­ல­கிலும் நிரு­வாக சேவை­யிலும் தடம்­ப­தித்த ஜுனைதா ஷெரீப், சிறிது காலம் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த நிலையில் தனது 82ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்­னா­ரின் ஜனாஸாவை பார்வையிட சமய தலை­வ­ர்கள், அரச உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள், எழுத்தாளர்கள் என பலரும் வருகை தந்தனர்.
அன்னாரின் ஜனாஸா காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.