கொரோனாவை கட்டுப்படுத்தாது அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுகிறது

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் குற்றச்சாட்டு

0 112

(எம்.எம்.மின்ஹாஜ்)
கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் சுகா­தார துறை­யி­னரின் ஆலோ­ச­னை­களை செவி­ம­டுக்­காது இரா­ணு­வத்­தி­னரின் யோச­னை­க­ளுக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை அளித்து அர­சாங்கம் சர்­வா­தி­கார போக்­குடன் செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார்.
நாட்டின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,
கொரோனா பரவல் கார­ண­மாக தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை மாத்­தி­ர­மின்றி மர­ணங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கின்­றன.அர­சாங்கம் கொரோனா தொடர்­பான உண்­மை­யான தர­வு­களை வெளி­யி­டாமல் மூடி மறைக்­கி­றது.அர­சாங்கம் சரி­யான தர­வு­களை ஏன் மூடி­ம­றைக்­கி­றது என்­பது புரி­யாத புதி­ராக உள்­ளது.

தடுப்­பூசி செலுத்தும் பணி­களில் மாத்­தி­ரமே முன்­னு­ரிமை அளித்த போதும் ஏனைய விட­யங்கள் தொடர்பில் கரி­ச­னை­யின்றி அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கி­றது.கொரோனா பர­வலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு யதார்த்­த­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எத­னையும் அர­சாங்கம் முன்­னெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மாக தற்­போது மக்­க­ளா­கவே முன்­வந்து பல நக­ரங்­களில் வர்த்­தக நிலை­யங்­களை மூடி வரு­கின்­றனர்.அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டின் மீதான மக்­களின் எதிர்ப்பே இதன் மூலம் வெளிப்­ப­டு­கி­றது. மக்­களே தங்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு முன்­வந்­தமை பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும்.

மக்­களின் மன­நி­லையை புரி­யாத அர­சாங்கம் சுகா­தார துறை நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களை செவி­ம­டுக்­காமல் இரா­ணு­வத்தின் ஆலோ­ச­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து வரு­கி­றது.இது அர­சாங்­கத்தின் சர்­வா­தி­கார போக்­கையே எடுத்துகாட்டுகிறது.அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களினால் இறுதியில் பாதிக்கப்படுவது மக்களேயாகும்.நாட்டை முடக்குவதன் மூலமே தற்போதைய பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.