உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க கோரி கறுப்புக் கொடி போராட்டம்

சகல இனத்தவர்களுக்கும் பேராயர் அழைப்பு

0 332

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு வலி­யு­றுத்தி எதிர்­வரும் 21ஆம் திக­தி­யன்று தேவா­ல­யங்கள், வீடுகள், கடைகள், வாக­னங்கள் ஆகி­ய­வற்றில் கறுப்பு கொடி ஏற்­று­மாறும் இன,மத, மொழி பேத­மின்றி இப்­போ­ராட்­டத்தில் சக­ல­ரையும் ஒன்­றி­ணை­யு­மாறும் பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை அழைப்பு விடுத்­துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்­லத்தில் நடை­பெற்ற ஊடகச் சந்­திப்­பின்‍­போதே ஆண்­டகை மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில், முழு நாட்­டையும் சோகத்தில் ஆழ்த்­திய உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் இடம்­பெற்று 2 ஆண்டு காலத்தை கடந்­தி­ருப்­பினும், அதன் பின்­னா­டி­யி­ருந்த சூழ்ச்­சிக்­கா­ரர்­களை இது­வரை கண்­ட­றி­யாது இருப்­பது கவ­லை­ய­ளிக்­கி­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடத்த சூழ்ச்சி இடம்­பெற்­றது போலவே குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­பதை தவிர்க்­கவும் சூழ்ச்சி நடை­பெற்று வரு­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாது, அதனை ஆராய்­வ­தற்கு ஒரே கட்­சியைச் சேர்ந்த ஆறு அமைச்­சர்கள் கொண்ட உப குழு­வொன்றை நிய­மித்­தி­ருப்­பது நியா­ய­மா­னது இல்லை. இதன்­படி பார்த்தால் ஜனா­தி­பதி ஆணைக் குழு­வையும் மீறிய ஓர் குழு­வா­கவே இந்த நிய­மனம் உள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தோம். இருப்­பினும், அந்தக் கடி­தத்­துக்கு முறை­யான பதில் எமக்கு கிடைக்­க­வில்லை. அதற்­கான தகுந்த மறு­மொழி கிடைக்­காமை எமக்கு வருத்­த­ம­ளிக்­கி­றது. அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் எமக்கு திருப்­தி­யில்லை.

முழு நாட்­டையும் சோகத்தில் ஆழ்த்­திய கொடூரச் சம்­ப­வத்­துக்கு ஜனா­தி­பதி பதி­ல­ளிக்­காது, ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நீதி பிரிவின் பணிப்­பாளர் பதில் அனுப்­பி­யுள்­ளமை வருத்­த­ம­ளிக்­கி­றது. அந்த பதில் கடி­தத்தில் ஜனா­தி­ப­தியோ, ஜனா­தி­பதி செய­லா­ளரோ கையொப்­ப­மி­டாது, ஜனா­தி­பதி செய­லா­ள­ருக்­காக என குறிப்­பிட்டு ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நீதி பிரிவின் பணிப்­பா­ள­ரான சட்­டத்­த­ரணி ஹரி­குப்த ரோஹ­ன­தீ­ர­வினால் கையொப்­ப­மிட்டு பதில் கடிதம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளமை முறை­யா­ன­தல்ல.
நாட்டில் கொரோனா அச்­சு­றுத்தல் அதிகரித்து வருவதால் நாம் பாரி­ய­ள­வி­லான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்த நினைக்­க­வில்லை. எனினும், எதிர்­வரும் 21 ஆம் திகதி ஆல­யங்­களில், வீடு­களில், வேலைத்­த­ளங்­களில், வாக­னங்­களில் கறுப்புக் கொடி ஏற்று­வ­தற்கு இன, மத, மொழி தாண்டி சக­ல­ருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.