கடும் விமர்சனத்துக்குள்ளாகும் அரசின் தொடர் தீர்மானங்கள்

0 561

அர­சாங்­கத்தின் அண்­மைக்­கால போக்­குகள் மக்கள் மத்­தியில் பாரிய அதி­ருப்­தியைத் தோற்­று­வித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஆளும் பொது ஜன பெர­மு­னவின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­குள்­ளேயே கருத்து முரண்­பா­டுகள் வலுத்­துள்­ளன. இந்த அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்டு வந்த பௌத்த பிக்­கு­களும் பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் கூட இன்று பகி­ரங்­க­மா­கவே தமது அதி­ருப்­தி­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளனர். பல பௌத்த பிக்­குகள் சமூக வலைத்­த­ளங்­களில் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் அமைச்­சர்­க­ளையும் கடும்­தொ­னியில் விமர்­சிப்­பதைக் காண முடி­கி­றது. மறு­புறும் கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்தும் அர­சாங்­கத்தின் மீதான தனது அதி­ருப்­தியை ஊடக மாநா­டு­களை நடாத்தி வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

கொவிட் 19 பெருந்­தொற்று நோயை வெற்­றி­க­ர­மாகக் கட்­டுப்­ப­டுத்­தாது மூன்­றா­வது அலையும் வேக­மாகப் பர­வு­வ­தற்கு இட­ம­ளித்­தமை அர­சாங்­கத்தின் பாரிய தோல்­வி­யாகும். கடந்த ஏப்ரல் புது வரு­டத்தின் பின்னர் நாட்டில் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்­கையும் கொவிட் மர­ணங்­களின் எண்­ணிக்­கையும் பல மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இதற்­கப்பால் இந்­தியா மற்றும் பிரித்­தா­னி­யாவில் பர­விய தீவிரம் கொண்ட கொவிட் வைரஸ திரி­பு­களும் இன்று இலங்­கையை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. வைத்­தி­ய­சா­லைகள் கொவிட் தொற்­றா­ளர்­களால் நிரம்பி வழி­கின்­றன. மர­ணங்கள் அதி­க­ரித்­துள்­ளன. சுகா­தாரப் பணி­யா­ளர்கள் இத் தொற்றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­த­வாறு திணறிக் கொண்­டி­ருக்­கின்­றனர். கொவிட் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் இலங்கை தோல்­வி­ய­டைந்த ஒரு தேச­மா­கவே இன்று நோக்­கப்­ப­டு­கி­றது. சுகா­தார நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களைப் புறந்­தள்ளி இரா­ணு­வத்தின் தீர்­மா­னங்­களை எடுப்­பதே இதற்குக் கார­ண­மாகும். ஆரம்­பித்­தி­லி­ருந்தே உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சுகா­தார நிபு­ணர்­களின் வழி­காட்­டலில் இதனைக் கையாண்­டி­ருப்பின் இலங்கை இந்­த­ளவு தூரம் சீர­ழி­வு­களைச் சந்­திக்க வேண்டி ஏற்­பட்­டி­ருக்­காது. இரா­ணு­வத்­த­ள­பதி கொவிட் செய­ல­ணியில் தலை­யிடக் கூடாது என ரணில் விக்­ர­ம­சிங்க புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகப் பத­வி­யேற்று சபையில் ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கடந்த வருடம் சுமார் 4 மாதங்கள் மக்கள் வீடு­க­ளுக்குள் முடங்­கி­யி­ருந்­தனர். இந்த வரு­டமும் ஒன்­றரை மாத காலத்­திற்கும் மேலாக மக்கள் முடங்­கி­யி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது சாதா­ரண கூலித் தொழி­லா­ளிகள் முதல் செல்­வந்­தர்கள் வரை அனை­வ­ரையும் பொரு­ளா­தார ரீதி­யாக பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. அர­சாங்­கத்தின் அலட்­சியப் போக்கே இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு காரணம் என எதிர்க்­கட்­சிகள் குற்­றம்­சாட்­டு­கின்­றன.

எவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்த போது­மான எச்­ச­ரிக்­கைகள் கிடைத்தும் அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களும் அதி­கா­ரி­களும் அலட்­சி­ய­மாக இருந்து 250 க்கும் அதி­க­மான உயிர்கள் பலி­யாகக் கார­ண­மாக இருந்­தார்­களோ அதே­போன்­றுதான் இன்று கொவிட் தொற்று விட­யத்­திலும் இந்த அர­சாங்­கத்­திற்கு போது­மான எச்­ச­ரிக்­கை­களும் ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்டும் அலட்­சி­ய­மாக இருந்­த­மையே உயி­ரி­ழப்­புகள் மூவா­யி­ரத்தை எட்டக் காரணம் எனலாம். இந்த அலட்­சியப் போக்கு தொட­ரு­மானால் இந்­தி­யாவைப் போன்று சட­லங்­களை வீதி­களில் போட்டு எரிக்க வேண்­டிய அவல நிலை­மையே ஏற்­படும். அவ்­வா­றான நிலைமை ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­பதே அனை­வ­ரதும் பிரார்த்­த­னை­யாகும்.

நேற்­றைய தினம் பொசன் தினத்தை முன்­னிட்டு ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ், படு­கொலைக் குற்­றச்­சாட்டில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா விடு­தலை செய்­யப்­பட்­ட­மை­யா­னது ஜனா­தி­ப­தியின் நேர்­மை­யையும் நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­தையும் இருப்­பையும் கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. தனக்கு நிறை­வேற்று அதி­காரம் இருக்­கி­றது என்­ப­தற்­காக கொலைக்­குற்­ற­வா­ளி­களைக் கூட, எந்­த­வித நியா­ய­பூர்­வ­மான கார­ணங்­க­ளு­மின்றி விடு­தலை செய்­வ­தா­னது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். இது முற்­றிலும் தனிப்­பட்ட அர­சியல் நலன்­களின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் என்­பது தெளி­வா­கவே விளங்­கு­கி­றது.

சிறு குற்­றங்­களைச் செய்­த­வர்கள் கூட பல வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் பட்­டப்­ப­கலில் நால்­வரின் மர­ணத்­திற்குக் கார­ண­மாக அமைந்த குற்­ற­வா­ளிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தா­னது நாட்டில் நீதி செத்­து­விட்­டது என்­ப­தையே தெளி­வாகக் காட்டி நிற்­கி­றது. ஜனா­தி­ப­தியின் இந்தத் தீர்­மானம் தற்­போது கடும் விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. சர்­வ­தேச நாடு­களும் மனித உரிமை அமைப்­பு­களும் இது பற்­றிய தமது கரி­ச­னையைச் செலுத்­தி­யுள்­ளன. ஏலவே ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கையின் மோச­மான மனித உரிமை நிலை­வ­ரங்­களை கருத்திற் கொண்டு ஜி.எஸ்.பி. வரிச் சலு­கையை நீக்­கு­வ­தற்கு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் இவ்­வா­றான அநா­வ­சி­ய­மான தீர்­மா­னங்கள் மேலும் மேலும் நாட்டை நெருக்­க­டிக்குள் தள்ளும் என்­பதே கசப்­பா­யினும் உண்­மை­யாகும். துமிந்த சில்வா என்ற தனி நபரின் விடு­த­லைக்­காக ஒட்­டு­மொத்த நாடுமே எதிர்­வரும் நாட்­களில் விலை கொடுக்க வேண்டி வரும் என்­ப­தையே ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற நாடு­களின் எச்­ச­ரிக்­கைகள் கட்­டியம் கூறு­கின்­றன.

நாட்டில் இடம்­பெற்ற போர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணமாகக் கொண்டு ஏராளமாக அப்பாவிகள் அநியாயமாக கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை இனங்கண்டு விடுவிப்பதானது நீதியை நிலைநாட்டியதாகவும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வரிச் சலுகைகளைப் பாதுகாத்து நாட்டு மக்களுக்கு நலனைத் தேடிக் கொடுத்ததாகவும் அமையும். மாறாக பகிரங்கமாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட, நியாயமான விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டுக்கு அவப் பெயர் கிடைக்குமே தவிர ஒருபோதும் நன்மை கிடைக்காது என்பது நிச்சயம் ஜனாதிபதிக்கு விளங்காமல் இருக்கப் போதில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.