பயங்கரவாத தடைச் சட்டம்: திருத்துவதா நீக்குவதா ?

அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறுகிறார் நீதியமைச்சர் அலி சப்ரி

0 304

இலங்­கையில் அமு­லி­லுள்ள சர்ச்­சைக்­கு­ரிய பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை நீக்­கு­வதா அல்­லது திருத்­து­வதா என்­பது தொடர்பில் அர­சாங்கம் ஆராய்ந்து வரு­வ­தா­கவும் அதற்­கென இரு குழுக்­களை அமைச்­ச­ரவை நிய­மித்­துள்­ள­தா­கவும் நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் அரப் நியூஸ் பத்­தி­ரி­கைக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மாற்­றங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும் அல்­லது கைவி­டப்­படும் என தெரி­வித்த நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி, அமைச்­ச­ரவை நிய­மித்­துள்ள இரு குழுக்­களின் பரிந்­து­ரை­களை அடிப்­ப­டை­யாக வைத்தே இது குறித்து தீர்­மா­னிக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்டார்.

இதில் ஒரு குழு அமைச்­ச­ரவை குழு என்றும் அடுத்­தது நிபு­ணர்கள் அடங்­கிய குழு என்றும் தெரி­வித்­துள்ள அமைச்சர் அலி சப்ரி, குறித்த குழுக்­க­ளுக்கு 3 மாத கால அவ­காசம் வழங்­க­வுள்­ள­தா­கவும் அதற்குள் அவர்கள் தமது பரிந்­து­ரை­களை சமர்ப்­பிக்க வேண்டும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

அர­சாங்­கத்தின் இந்த முடி­விற்கு என்ன காரணம் என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த நீதி­ய­மைச்சர் அலி சப்ரி, இணைய குற்­றங்கள், சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்றம் ஆகி­யவை அதி­க­ளவில் இடம்­பெ­று­வதால் காலத்­திற்கு ஏற்ப பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் மாற்­றங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது என்றார். மேலும் மனித உரி­மை­களை பேண­வேண்­டிய அவ­சியம் அதிகம் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

உள்ளூர் நலன்கள், சர்­வ­தேச தேவை­க­ளுக்கு ஏற்ப மனித உரிமை தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான சம­நி­லை­யான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க முயல்­வ­தா­கவும் நீதி அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

முன்­னைய அர­சாங்கம் இல்­லாமல் செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த – ஆனால் நிறை­வேற்­றாத – 1979 ஆண்டு நடை­மு­றைக்கு வந்த வலு­வான பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நபர் ஒருவர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார் என சந்­தேகம் உரு­வானால் அவரை நீதி­மன்ற அனு­ம­தி­யின்றி கைது­செய்­வ­தற்கும் சோத­னை­யி­டு­வ­தற்கும் அனு­ம­திக்­கின்­றது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பாது­காப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாத காலம் வரையில் நபர் ஒரு­வரை தடுத்து வைப்­ப­தற்­கான உத்­த­ரவை பிறப்­பிக்­கலாம்.
மார்ச் மாதம் செய்­யப்­பட்ட திருத்­தங்கள் மத, இன, சமூக ஐக்­கி­ய­மின்­மையை ஏற்­ப­டுத்­தி­யவர் அல்­லது ஏற்­ப­டுத்த முயன்றார் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வரை அவர் சர­ண­டைந்தால் அல்­லது சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்டால் இரண்டு வரு­டங்கள் நீதி­மன்ற விசா­ர­ணை­யின்றி தடுத்­து­வைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தன.

ஜூன் 8 ஆம் திகதி ஐரோப்­பிய பாரா­ளு­மன்றம் தீர்­மா­ன­மொன்றை நிறை­வேற்­றி­யது. அந்த தீர்­மா­னத்தில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மனித உரி­மைகள், ஜன­நா­யகம், சட்­டத்தின் ஆட்சி ஆகி­ய­வற்றை மீறு­வதால் அதனை நீக்­க­வேண்டும் என வேண்­டுகோள் விடுத்­தது.

இலங்கை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் என வேண்­டுகோள் விடுத்த ஐரோப்­பிய பாரா­ளு­மன்றம், ஜிஎஸ்பி வரிச்­ச­லு­கையை இரத்­துச்­செய்­யப்­போ­வ­தா­கவும் எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இதற்குப் பதி­ல­ளித்த இலங்கை அர­சாங்கம், தேசிய பாது­காப்­பிற்கு பாதிப்­பற்ற விதத்தில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­படும் என அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை, தமது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை அர­சாங்கம் துஷ்­பி­ர­யோகம் செய்­வது தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

“ ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அண்­மைய தீர்­மானம், பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றே வலி­யு­றுத்­து­கி­றது. மீளாய்வு செய்­யு­மாறு கோர­வில்லை” என மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் ஷிரீன் சரூர் குறிப்­பி­டு­கிறார்.

“இது ஒரு கடு­மை­யான சட்டம், இது முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்ரோசமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் இது கட்டுப்படுத்துகிறது. இது முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும், திருத்தப்படக்கூடாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.