பலஸ்தீனுக்கான ஆதரவை மீளவும் உறுதிப்படுத்தினார் சவூதி அரேபிய மன்னர்

மத்­திய கிழக்கில் சமா­தா­னமும் பாது­காப்பும் என்ற தலைப்பில் அமெ­ரிக்கா தலை­மையில் மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக 'கிழக்கு ஜெரூ­ச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர பலஸ்­தீன தேசம்' என்­பதில் சவூதி அரே­பியா உறு­தி­யாக இருப்­ப­தாக சவூதி அரே­பிய மன்னர் சல்மான் தெரி­வித்தார். சவூதி அரே­பியத் தலை­நகர் றியா­திற்கு விஜயம் செய்­துள்ள பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூட் அப்­பாஸை நேற்று முன்தினம் சந்­தித்து சவூதி அரே­பிய மன்னர் அவ­ருடன் பேசினார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர…

கிழக்கு மாகாண காணி பிரச்சினைக்கு 3 மாத காலத்தில் தீர்வு

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள காணிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னையைப் பெற்று ஓர் உயர்­மட்டக் குழு­வையும் நிய­மித்­துள்ளேன். மக்­களின் காணியை விடு­விப்­ப­தற்­காக அக்­கு­ழு­வுக்கு முழு அதி­கா­ரத்­தையும் வழங்­கி­யுள்ளேன். மூன்று மாத காலத்­திற்குள் சகல காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைக் காண நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். எதிர்­வரும் 15ஆம் திகதி அம்­பா­றையில் முத­லா­வது கூட்­டத்தை நடத்­த­வுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நிந்­தவூர்…

துருக்கியில் உலங்கு வானூர்தி விபத்து நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று இஸ்­தான்­பூலில் உலங்கு வானூர்­தி­யொன்று அவ­ச­ர­மாகத் தரை­யி­றங்­கி­ய­போது ஏற்­பட்ட விபத்தில் குறைந்­தது நான்கு இரா­ணுவ வீரர்கள் பலி­யா­ன­தாக மாகாண ஆளுநர் தெரி­வித்தார். உள்ளூர் நேரப்­படி பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் செக்­மெ­கோயி மாவட்­டத்தில் குடி­யி­ருப்புப் பகு­திக்­க­ருகில் இந்த உலங்கு வானூர்தி விபத்து நிகழ்ந்­துள்­ள­தாக அலி எர்­லி­காயா ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார். விபத்­திற்­கான காரணம் இது­வரை தெரி­ய­வ­ர­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார். இறந்­தோரின் எண்­ணிக்­கை­யினை டுவிட்டர்…

பால்மா விவ­காரம் குறித்து உடன் விசா­ரணை நடத்­துக

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவின் தரம் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளதால் அவற்றில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை அறி­வ­தற்கு முறை­யான விசா­ர­ணை­யொன்­றினை நடத்­து­மாறு அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எழுத்­து­மூலம் கோரி­யுள்­ளது. இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் உட்­பட வேறு சேர்க்­கைகள் அடங்­கி­யுள்­ள­னவா என்றும் சுகா­தார அமைச்சில் தற்­போது பணி­பு­ரியும் அதி­கா­ரிகள் மற்றும்  முன்­னைய அதி­கா­ரி­க­ளுக்கு பால்மா…