சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம்

சிறுபான்மைக்  கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே,  நாட்டில் இனவாதம் ஏற்படுகின்றதென, முன்னாள் அமைச்சர்  பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல்களின்போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால் நின்று,  'இலங்கையர்'  என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவு…

அரபுக்கல்லூரி குறித்த தீர்மானம்: தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன

அரபுக் கல்லூரிகள் தொடர்பில் நான் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனது தீர்மானம் எந்தத் தரப்பினதும் அழுத்தங்களுக்கு உட்பட்டதானதல்ல. அரபுக்கல்லூரிகளை தரமுயர்த்தி எமது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதே எனது இலக்காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார். அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அரபுக் கல்லூரிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில்…

குடியேற்றவாசிகளின் வன்முறையின்போது பலஸ்தீன நபர் சுட்டுக்கொலை

ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததோடு டசின்கணக்கானோர் காயமடைந்தனர். ஹம்தி நஸ்ஸான் என அடையாளம் காணப்பட்ட 38 வயதான நபர் முதுகுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர். ஹம்தி நஸ்ஸான் தனது மனைவி மற்றும் நான்கு…

மத்ரஸா, இயக்கங்களுக்கும் பதிவு கட்டாயமானதாகும்

அரபுக் கல்லூரிகள் மாத்திரமல்ல ஹிப்ளு மத்ரஸா, குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயமாக வக்பு சபையின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுகள் இன்மையால் அவற்றைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியாக இயலாமல் இருக்கிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார். அரபுக் கல்லூரிகள் வக்பு சபையின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான அமைப்புகளும் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு…