மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரம்: ஏழு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதான ஏழு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த 7 சந்தேக நபர்களும் கண்டி – வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் –…