மாவ­னெல்லை விவ­கா­ரத்தில் பௌத்த சமய தலை­வர்கள் நிதா­ன­மாக செயற்­ப­டு­கின்­றனர்

தைபா நிறுவன இயக்குநர் ரிஸ்வான்

0 671

மாவ­னெல்லைப் பிர­தே­சத்தில் இன நல்­லி­ணக்­கத்தைக் கருத்திற் கொண்டு தண்­ணீ­ரின்றி மிகவும் கஷ்­டப்­படும் மக்­க­ளுக்­காக எமது பல சமூக இயக்க அமைப்­புகள் கணி­ச­மா­ன­ளவு சிங்­கள சகோ­தர மக்­க­ளுக்கு குடிநீர் உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இந்த மனித நேய செயற்­பா­டு­களால் மாவ­னெல்லைப் பிர­தேச சிங்­கள – முஸ்­லிம் மக்­க­ளுக்­கி­டையே காணப்­படும் இன நல்­லி­ணக்க உறவு பாரிய முன்­னேற்றம் கண்­டுள்­ளது. தற்­போது ஏற்­பட்­டுள்ள சிலை உடைப்பு விட­யத்தில் கூட உண்­மை­யி­லேயே பௌத்த சமயத் தலை­வர்கள் இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்­தையும் நல்­லெண்­ணத்­தையும் பேணி நிதானப் போக்­குடன் நடந்து கொள்­வது என்­பது மிகவும் வர­வேற்­கத்­தக்க அம்­ச­மாகும். இந்த நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று தைபா சமூக அபி­வித்தி நிறு­வ­னத்தின் இயக்­குனர் அஷ்ஷெய்க் எம்.ஜே.ரிஸ்வான் மதனி தெரி­வித்தார்.

தைபா சமூக அபி­ருவித்தி நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் டுபாய் நாட்­டி­லுள்ள பொறி­யி­ய­லாளர் முஹமட் பஷீரின் நிதி ஒதுக்­கீட்டின்  5 இலட்சம் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பொது குழாய்க் கிணற்றின் நீர் விநி­யோ­கத்தை ஆரம்­பித்து வைக்கும் வைபவம்  மாவ­னெல்லை புளுப்­பிட்­டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் பள்ளிவாசலின் தலைவர் நளீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  அஷ்ஷெய்க் எம்.ஜே. ரிஸ்வான் மதனி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், மாவனெல்லைப் பிரதேசங்களில் நாங்கள் அதிகளவில் சிங்கள மக்கள வாழும் இடங்களில் தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றோம். இந்த பிரதேசத்தில் நிலவும் பிரச்சினையில் சிங்கள மக்கள் நிதானமாக செயற்பட எம்முடைய  முன்மாதிரிமிக்க  நல்லிணக்க ரீதியிலான செயற்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதுகிறோம்.  நாங்கள் பாடசாலைகள் தொட்டு பௌத்த விகாரைகள் மற்றும் பொது இடங்களுக்கு சகோரத்துவத்தையும் நல்லெண்ணத்தையும் கருத்திற் கொண்டு குடிநீர் உதவிகளை வழங்கி மனிதாபிமான செயற்பாடுகளைச் செய்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.