புத்தளம் குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்

0 757

‘கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்.’
‘உலகக் குப்பை எமக்கு வேண்டாம்.’

என்ற கோஷங்கள் கடந்த 5 மாதங்­க­ளுக்கும் மேலாக புத்­தளம் எங்கும் ஒலிக்­கின்­றன. மக்­களின் எதிர்ப்புக் கோஷங்­க­ளுக்கு மத்­தியில், அர­சாங்கம் அரு­வக்­காடு, சேராக்­குளி பகு­தியில் திண்­மக்­க­ழிவு அகற்றும் திட்­டத்தின் கீழ் நிர்­மா­ணப்­ப­ணி­களைப் பூர்த்தி செய்­துள்­ளது.

தமது உள்­ளூ­ராட்­சி­மன்ற எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை அடுத்­த­மாதம் 15 ஆம் திகதி முதல் அங்கு கொட்­டு­மாறு புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தே­ச­சபை, கற்­பிட்டி பிர­தே­ச­சபை, சிலாபம் நக­ர­சபை, வணாத்­த­வில்லு, கரு­வ­ல­கஸ்­வெவ ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்­க­ளுக்கு பெரு­ந­கரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இந்த உத்­த­ர­வுக்­க­மைய அரு­வக்­காடு சேராக்­கு­ளியில் முதலில் புத்­த­ளத்துக் குப்­பை­களே கொட்­டப்­ப­ட­வுள்­ளன. கொழும்பு குப்­பையை எதிர்க்கும் மக்­களின் போராட்­டத்தை முறி­ய­டிக்­கவே அர­சாங்கம் இவ்­வா­றான முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது, அதன் பின்பே கொழும்பு குப்­பைகள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. இத்­திண்­மக்­க­ழிவு அகற்றும் திட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவின் காலத்­தி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்­டது. என்­றாலும் தவிர்க்க முடி­யாத கார­ணத்­தினால் பிற்­போ­டப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கி­றது.

குப்பை கொட்­டப்­ப­ட­வுள்ள அரு­வக்­காட்­டுக்கு அரு­கிலே வில்­பத்து தேசி­ய­வனம், கங்­கே­வாடி மீனவர் கிராமம், கரைத்­தீவு கிராமம் என்­பன அமைந்­துள்­ளன. கலா­ஓயா ஆறும் இப்­பி­ர­தே­சத்­திற்கு அரு­கிலே ஓடுகி­றது. அத்­தோடு புத்­தளம் உப்­பு­வளம் நிறைந்த பிர­தே­ச­மாகும். இதனால் உப்பு வளம் பாதிக்­கப்­ப­டு­வ­துடன் மக்­களின் வாழ்­வா­தா­ரமும் கேள்­விக்­கு­றி­யாகும்.

இதே­வேளை இத்­திட்­டத்­திற்குப் பொறுப்­பான அமைச்சர் எந்­தக்­கா­ரணம் கொண்டும் இதைக் கைவி­டப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ளார். அரு­வக்­காடு குப்பை முகா­மைத்­துவத் திட்­டத்­தினை எதிர்ப்­ப­வர்கள் தொடர்பில் நாம் கவ­லை­ய­டை­கிறோம் என்றும் தெரி­வித்­துள்ளார்.

அரு­வக்­காடு பகுதி குப்பை முகா­மைத்­துவத் திட்­டத்­தினை எம்மால் 80 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாகப் பயன்­ப­டுத்த முடியும். இதற்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­டன. இந்த ஆர்ப்­பாட்­டங்­களை நாம் தோற்­க­டிப்போம் எனவும் தெரி­வித்­துள்ளார். அரசு இவ்­வி­ட­யத்தில் உறு­தி­யாக இருப்­பது தெளி­வா­கி­றது. கோடிக்­க­ணக்­கான ரூபா செலவில் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட இத்­திட்டம் கைவி­டப்­படும் எனவும் எதிர்­பார்க்க முடி­யாது.

மீதொட்­ட­முல்ல மற்றும் கொழும்பு குப்­பைகள் களனி வன­வா­சல புகை­யி­ரத நிலை­யத்­துக்கு அருகில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள தொழிற்­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்டு குப்­பை­களின் நீர்த்­தன்மை அகற்­றப்­பட்டு பொதி­க­ளாக கொள்­க­லன்­களில் ஏற்­றப்­பட்டே புகை­யி­ரதம் மூலம் அரு­வக்­காட்­டுக்குக் கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ளன.

இது நவீன தொழில்­நுட்­பங்­க­ளுடன் கூடிய திட்டம் என அமைச்சின் செய­லாளர் பொறி­யி­ய­லாளர் நிஹால் ரூப­சிங்க தெரி­வித்­துள்ளார். அரு­வக்­காடு குப்­பைத்­திட்­டத்தின் கழிவு நீர், குடிநீர் மற்றும் உப்­பளம் நீருடன் கலக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். அர­சாங்கம் எத்­த­கைய உறு­தி­களை வழங்­கி­ய­போதும், புத்­தளம் மக்கள் புத்­தளம் குப்பைத் திட்­டத்தை ஏற்றுக் கொள்­வ­தாக இல்லை. இவ்­வா­றான நிலையில் மாற்­று­வழி என்ன? இத்­திட்­டத்தைக் கைவி­டு­வதா? கைவிடுவதற்கு அரசு தயாராக இருக்கிறதா-? என்ற வினாக்கள் எழுகின்றன.

இத்திட்டத்தினால் மக்களுக்கும், சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேவேளை தொடர்ந்தும் 5 மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வரும் மக்கள் நீதிமன்றின் மூலம் தடையுத்தரவு ஒன்றினைக் கோரலாம். நீதிமன்றத் தீர்ப்பு இப்பிரச்சினைக்கு ஓர் தீர்வினைத் தரலாம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.