எத்தனை கூட்டணி அமைத்தாலும் யானை சின்னத்துடனேயே பயணம்

ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் ஒருபோதும் மாற்றம் ஏற்பட போவதில்லை. எத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் யானை சின்னத்துடனேயே பயணிப்போம். தேர்தலுக்கு அஞ்சுவதன் காரணத்தினாலேயே எதிர்த்தரப்பினர் ஒவ்வொருவரின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக அடையாளப்படுத்தி வருகின்றனர். ஆனால் உரிய நேரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை அறிவிப்போம் என கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆயத்த நிலைகள் தொடர்பில்…

கலப்பு தேர்தல் முறை சிறுபான்மைருக்கு பெரும் பாதிப்பு

கலப்பு தேர்தல் முறையின் மூலம் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை உள்ளது. அதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகம் பரந்து வாழ்வதால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம் தெரிவித்தார். புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்து…

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக வேண்டியதில்லை

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய   பதவி விலக வேண்டிய அவசியமேதும் கிடையாது.  மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு பொதுஜன பெரமுன  நீதிமன்றத்தை நாடவுள்ளது. இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய  பலமாகக் காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர்  லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின்  தலைமை காரியாலயத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நவம்பர் மாதம் 10ஆம்…

ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?

அண்­மையில் சர்­வ­தேச சஞ்­சி­கை­யான Time (டைம்) கடந்த ஆண்டின் கதா­நா­யகர் என ஜமால் கஷோ­க்ஜியை பெய­ரிட்­டி­ருக்­கி­றது. காரணம் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தி­யிலும் அச்­ச­மின்றி உண்­மையை எழுதி பலி­யா­ன­தற்­கே­யாகும். இவ­ரோடு இன்னும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களும் அச்­சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஜமால் கஷோ­­க்ஜியின் கொலை குறித்து சவூதி செய்யும் விசா­ரணை ஐ.நா. வுக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. அது மென்­மேலும் பார­பட்­ச­மற்ற சர்­வ­தேச விசா­ர­ணை­யையே கோரிக்­கொண்­டி­ருக்­கி­றது. இவ­ரது படு­கொலை…