விடுமுறை கால விபத்துகளில் 548 பேர் வைத்தியசாலையில்

நத்தார் விடுமுறை காலத்தில் ஏற்பட்ட விபத்துக்களினால் 548 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 48 மணிநேரத்திற்குள் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 13 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிக்கின்றது. இதேவேளை, வாகன விபத்துக்களினால் 163 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இது கடந்த வருடத்துடன்…

இந்தோனேஷியாவுக்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவுக்கு மீண்டும் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் கரையோரத்தை அண்டியுள்ள மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கடும் மழை மற்றும் பாரிய அலைகள் மேலெழுவதால், மீண்டும் சுனாமி தாக்கலாமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கரையோரப் பிரதேசங்களிலிருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவிற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.…

உரிமைகள் கோரும் சம்பந்தனும் ஹக்கீமும் வௌ்ளத்தின் போது தலைகாட்டவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ரவூப் ஹக்கீமோ தற்போது வெள்ளம் தாக்கிய வடக்கு, கிழக்கு பிரதேச மக்களைப் பார்வையிட வரவில்லை. இந்நலையில் இராணுவத்தினரே அந்த மக்களை தமது தோள்களில் தூக்கி சுமந்து, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ளத்தின் பின்னரான மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எண்ணிக்கை குறித்து அவரைத்…

முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்

மாவனெல்லையில் துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றலாம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். மாவனெல்லையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை குறித்து நேற்று வெலிகமன விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது விடயமாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில்,  மாவனெல்லையில்…