222 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
இந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக சென்ற 222 இலங்கைப் பணியாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மாதவ தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மாத்திரம் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலும் இலங்கைப் பணியாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
கொலை, வாகன விபத்து, திடீர் மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கைப் பணியாளர்களில்…