பாகிஸ்தானின் கடற்படை பயிற்சி நெறியில் 46 நாடுகள் பங்குபற்றின

0 564

பாகிஸ்தான் நாட்டின் கடற்­ப­டை­யி­னரின் அனு­ச­ர­ணையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘அமான்-19′ என்ற சர்­வ­தேச கடற்­படை பயிற்சி நட­வ­டிக்­கையில் 46 நாடுகள் பங்­கு­பற்­றி­ய­தாக அந்­நாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குறித்த பயிற்­சி­நெ­றிகள் கராச்சி கடற்­ப­கு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 5 நாட்கள் தொடர்ச்­சி­யாக நடை­பெற்ற இப்­ப­யிற்­சி­நெ­றியின் சகல பயிற்­சி­களும் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்­தன.  இதன்­போது, துறை­மு­கத்­திலும், கட­லிலும் எவ்­வாறு பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வது என்­பது குறித்து கூடிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கை மற்றும் மனி­தா­பி­மான உத­வி­களை செயற்­ப­டுத்தல் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறித்த பயிற்சி நெறிகள், கடற்­படை உட்­கட்­ட­மைப்பு, பாரம்­ப­ரிய மற்றும் பாரம்­ப­ரி­ய­மற்ற அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ரான உத்­திகள், நுட்­பங்கள் என்­ப­வற்றை மேம்­ப­டுத்தும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. பாகிஸ்தான்,  ‘அமான்’ கடற்படை பயிற்சி நெறிகளை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.