வாழ்க்கை செல­வு­களை அதி­க­ரிக்க வேண்டாம்

பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்

0 593

போலி­யான எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை மையப்­ப­டுத்தி நடுத்­தர மக்­களின் வாழ்க்கை செல­வு­களை அதி­க­ரிக்க வேண்டாம். ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தார கொள்­கை­யாக முறை­யற்ற வரி அறி­விடல், அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­யேற்றம் என்­பவை மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றன என்று பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர்ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார்.

வஜி­ராஷ்­ராம விகா­ரையில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இடைக்­கால அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பொழுது பிர­த­ம­ராகப் பத­வி­வ­கித்த மஹிந்த ராஜபக் ஷ எரி­பொ­ருட்­களின் விலை­யினை 15 ரூபா­விற்கு குறைத்து போலி­யான எரி­பொருள் விலை சூத்­தி­ரத்­தையும் முழு­மை­யாக இரத்து செய்தார். அதனை தொடர்ந்து  ஏனைய அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களும் சடு­தி­யாக குறைக்­கப்­பட்­டன.  52 நாட்கள்  நாட்டு மக்கள் சற்று திருப்­தி­யடைந்­தார்கள் என்றே குறிப்­பிட வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்சி போராடிப் பெற்ற அர­சாங்­கத்­தினால் இதுவரை காலமும் எவ்­வி­த­மான விலை குறைப்­புக்­களும் இடம் பெற­வில்லை. மக்­களை ஏமாற்­று­வ­தற்­கா­கவே கடந்த மாதம் எரி­பொ­ருட்­களின் விலை குறைக்­கப்­பட்­டது. தற்­போது மீண்டும் எரி­பொ­ருட்­களின் விலை  அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­விலை அதி­க­ரிப்பில் விலை சூத்­திரம் மீண்டும்  அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றாயின் இனி ஒவ்­வொரு மாதமும் 10ஆம் திகதி எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிக்­கப்­ப­டுமா என்ற அச்­சத்­திலே மக்கள் வாழ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. வரி அற­வி­டு­தலும், விலை­யேற்­ற­முமே அர­சாங்­கத்தின் குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­யாக காணப்­ப­டு­கின்­றது.

சுயா­தீ­ன­மாக செயற்­படும் என்று  எதிர்­பார்க்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்கள்  எதுவும் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வில்லை. உதா­ர­ண­மாக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினை குறிப்­பிட வேண்டும். சாதா­ரண ஒரு  பிரஜை இலஞ்சம் பெற்­றுள்­ளமை தொடர்பில் விரை­வா­கவும், சுயா­தீ­ன­மா­கவும் செயற்­படும் இவ்­வா­ணைக்­குழு, தேசிய நிதி­யினை கொள்­ளை­ய­டித்­த­வர்கள் விவ­கா­ரத்தில் எவ்­வி­த­மாக சுயா­தீனத் தன்மையினையும் பேணவில்லை. பிணைமுறி விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரத்தில்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எவ்விதமான  தமது ஆணைக்குழுவின் கடமைகளையும் முழுமைப்படுத்தவில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.