காத்தான்குடியில் ஒரேயொரு ஆயுதக்குழு சஹ்ரான் குழுவே

காத்­தான்­கு­டியில் முஸ்லிம் அமைப்­புகள் பல இருந்­தன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்­கி­ருந்த ஒரே­யொரு ஆயுதக் குழு­வாகக் காணப்­பட்­ட­தென காத்­தான்­கு­டியின் முன்னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி  ஆரி­ய­பந்து வெத­கெ­தர பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.  கடந்த காலங்­களில் முரண்­பா­டுகள் பல ஏற்­பட்­டன, அப்­போது ஆமி மொய்தீன் பெயர் அதி­க­மாக பேசப்­பட்­டது. அவர் சிப்லி பாரூக் என்ற மாகா­ண­சபை உறுப்­பி­ன­ருடன் இருந்தார். ஆனால்  ஆமி  மொய்தீன் பொலி­சா­ருடன் தொடர்பில் இருக்­க­வில்லை எனவும்…

முர்ஸியின் மரணம் குறித்து விசாரணை வேண்டும்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான முஹம்மத் முர்ஸியின் திடீர் மரணம் உலகளாவிய ரீதியில் பலத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் முர்ஸி, இராணுவ சதிப் புரட்சியினால் பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் விசாரணைகளின்போது நீதிமன்றினுள் வைத்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். சிறையிலிருந்த காலப்பகுதியில் அவர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டிருந்தார்.…

தேடப்பட்ட காலத்தில் காத்தான்குடிக்கு ரில்வான் இரகசியமாக வந்துள்ளார் சஹ்ரான் வந்ததாக தகவலில்லை

சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகி­யோ­ருக்கு  எதி­ராகப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு அவர்கள் தேடப்­பட்ட காலத்தில் ரில்வான் இர­க­சி­ய­மாக வந்து சென்­றுள்ளார், ஆனால் சஹ்ரான் வந்­தாரா என்ற தகவல் எவையும் கிடைக்­க­வில்­லை­யென  காத்­தான்­குடி பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எம்.பி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார். சஹ்ரான் குழு­வுடன் தொடர்­பு­பட்­ட­தாகக் கைது­செய்­யப்­பட்ட  13 நபர்­களும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்பில் இருந்­த­வர்கள் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது எனவும் அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்…

முஸ்லிம்களல்லாத அனைவரையும் கொல்ல வேண்டும் என சஹ்ரான் வெளிப்படையாக பிரசாரம் செய்தார்

முஸ்­லிம்கள் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக சஹ்ரான் மூன்று சந்­தர்ப்­பங்­களில் பேசினார். ஆனால் இது குறித்து எவ­ருமே எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உள்­ளிட்ட அனை­வரும் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என சூபி முஸ்லிம் பிரி­வினைச் சேர்ந்த பிர­தி­நி­தி­யாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வாக்­கு­மூலம் வழங்­கிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி­யுல்லா நம்­பிக்கைப் பொறுப்பின் செய­லாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான்  தெரி­வித்தார். இன்றும்…