காத்தான்குடியில் ஒரேயொரு ஆயுதக்குழு சஹ்ரான் குழுவே

முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர

0 577

காத்­தான்­கு­டியில் முஸ்லிம் அமைப்­புகள் பல இருந்­தன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்­கி­ருந்த ஒரே­யொரு ஆயுதக் குழு­வாகக் காணப்­பட்­ட­தென காத்­தான்­கு­டியின் முன்னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி  ஆரி­ய­பந்து வெத­கெ­தர பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.  கடந்த காலங்­களில் முரண்­பா­டுகள் பல ஏற்­பட்­டன, அப்­போது ஆமி மொய்தீன் பெயர் அதி­க­மாக பேசப்­பட்­டது. அவர் சிப்லி பாரூக் என்ற மாகா­ண­சபை உறுப்­பி­ன­ருடன் இருந்தார். ஆனால்  ஆமி  மொய்தீன் பொலி­சா­ருடன் தொடர்பில் இருக்­க­வில்லை எனவும் குறிப்­பிட்டார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று காத்­தான்­கு­டியின் முன்னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி  ஆரி­ய­பந்து வெத­கெ­த­ர­விடம் விசா­ரணை நடத்­தி­யது. இதன்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் கூறி­ய­தா­வது,

நான் காத்­தான்­கு­டியில் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த காலத்தில் சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத  செயற்­பா­டுகள் குறித்து எந்த முறைப்­பா­டு­களும் கிடைக்­க­வில்லை. ஆனால் காத்­தான்­கு­டியில் மத­வாத அமைப்­புகள் பல இருந்­தன. இந்த அமைப்­புகள் இடையில் மத­வாத முரண்­பா­டுகள் இருந்­தன. மத­வாத முரண்­பா­டுகள் குறித்து  முறை­யி­டப்­பட்­டது. பள்­ளி­வாசல் பிரச்­சி­னைகள் ஏற்­படும். அவ்­வாறு ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்கள் பல இருந்­தன. பிள­வு­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் அமைப்­பு­க­ளாக அவர்கள் செயற்­பட்­டனர். அவ­ரவர் நியா­யப்­பா­டு­களை அவர்கள் கூறு­வார்கள்.  தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு அண்மைக் காலத்தில்  உரு­வாக்­கப்­பட்ட ஓர் அமைப்பு. ஏனைய அமைப்­புகள் அனைத்­துமே இந்த அமைப்­புடன் முரண்­பட்­டனர். இது குறித்த பல முறைப்­பா­டுகள் பதி­யப்­பட்­டதால் சரி­யான கார­ணிகள் எதுவும் எனக்கு நினை­வி­லில்லை. ஆனால் அடிப்­ப­டை­வாத திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக எந்த முறைப்­பா­டு­களும் இருந்­த­தில்லை.

மேலும், சூபி முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வ­மொன்று பதி­வா­கி­யது. அப்­போது நான் உரிய இடத்­துக்கு சென்றேன். அங்கு சஹ்ரான் இருந்தார். அந்த சம்­ப­வத்தில் நூறு அல்­லது நூற்று ஐம்­பது நபர்கள் இருந்­தனர்.  ஆரம்­பத்தில் எவ­ரையும் கைது­செய்­ய­வில்லை. ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் மூல­மாக இறு­வட்­டுக்கள், கருத்­துக்கள் என்­ப­வற்றை பார்த்து காணொ­லி­களின்  மூல­மாக ஒவ்­வொ­ரு­வ­ராக கைது செய்த போது இவர்கள் தலை­ம­றை­வா­கி­விட்­டனர்.  ஆயுதம் பயன்­ப­டுத்­திய முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். சஹ்ரான் குழுதான் ஆயுதக் குழு­வா­க­வி­ருந்­தது. எவ்­வாறு இருப்­பினும் தேர்தல் காலங்­களில் சஹ்­ரா­னுக்கு  அவ்­வாறு தனிப்­பட்ட பலம் இருந்­தது என நினைக்­க­வில்லை  தேர்தல் காலங்­களில் ஒவ்­வொரு அமைப்­பு­களும் பல­ம­டையும். அவ்­வாறே இந்த அமைப்பும் பல­ம­டைந்­தி­ருக்க வேண்டும். ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மையும் கூட்­டங்கள் நடத்த அனு­மதி கேட்­பார்கள். ஒலி­பெ­ருக்கி அனு­ம­தியும் கேட்­பார்கள். இவர்கள் எங்கு கூட்டம் வைக்­கின்­றனர் என்று பார்ப்போம். அவர்கள்  நடத்­திய கூட்­டங்­க­ளில்தான் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. சஹ்ரான் குழுவின் மோதல் சம்­ப­வத்தில் 12 பேர் கைது­செய்­யப்­பட்­டனர். ஆனால் அந்தக் கூட்­டத்தில் எத்­தனை பேர் இருந்­தனர், இதில் சஹ்ரான் கூட்­டணி ஆட்கள் யார் என கண்­ட­றிய முடி­ய­வில்லை. அவ்­வாறு செய்­யவும் முடி­யாது. ஒரே­டி­யாக பலர் கள­மி­றங்­கினால் யார் யார் என்று கண்­ட­றிய முடி­யாது. சஹ்­ரானை தனிப்­பட்ட முறையில் தெரியும். அதனால் அவர் இருந்தார் என்று கண்டேன். ஏனை­ய­வர்­களை காணொலி மூல­மா­கவே கண்­ட­றிய முடிந்­தது.

சஹ்­ரானை கைது செய்ய பொலிசார் விரும்­ப­வில்லை என கூறு­வதை ஏற்­று­கொள்ள முடி­யாது. இந்­தக்­க­ருத்­தினை நான் நிரா­க­ரிக்­கின்றேன். அதேபோல் 120 வீடுகள் காத்­தான்­கு­டியில் தீவைக்­கப்­பட்­டது என்ற விடயம் உண்­மை­யில்லை. எனது காலத்தில் அவ்­வாறு இருக்­க­வில்லை. இது சாத­ாரண விடயம் அல்ல. இத்­தனை வீடுகள் தீ வைக்­கப்­பட்­டது என்றால் அது நாடே அறிந்­தி­ருக்கும். மேலும் சஹ்ரான் குறித்து தொடர்ச்­சி­யாக முறைப்­பா­டுகள் வந்­தன. அதுவும் இவ­ரது பிர­சா­ரங்­களில் ஏனைய மதங்­களை பிரி­வு­களை விமர்­சிக்­கின்றார், வேறு எவரும் கூட்டம் நடத்­தினால் கற்­களால் தாக்­குதல் நடத்­து­வ­தாக முறைப்­பா­டுகள் வந்­தன. அதனை கட்­டுப்­ப­டுத்­தவே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டி இருந்­தது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பும் உள்­ளது. இவர்­களின் எண்­ணமும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்­பு­களின் எண்­ணமும் ஒன்­றாக இருந்­தன. ஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது முறைப்­பா­டுகள் வந்­த­தில்லை.

ஆரம்­ப­கால கட்­டத்தில் சஹ்ரான் சாதா­ரண ஒரு நபர். 2000 வாக்­கா­ளர்­களைக்  கொண்ட ஓர் அமைப்பின் தலைவர் என்றே தெரியும். அதற்­கப்பால் ஒன்­றுமே எனக்குத் தெரி­யாது. ஒரு­சில அர­சி­யல்­வா­தி­க­ளுடன் பேசி­யதும், உடன்­ப­டிக்கை செய்து கொண்­ட­மையும் பின்னர் தெரிந்­து­கொண்டேன். அப்­போ­தைய தேர்­தல்­களில் அவர் என்ன செய்தார் என்று ஒன்றும் எனக்குத் தெரி­யாது. ஒரு நப­ராக தெரி­யுமே தவிர நேர­டி­யாகப் பழகும் அள­விற்கு ஒன்றும் இருக்­க­வில்லை. எனது கால­கட்­டத்தில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எந்த தடையும் இருக்­க­வில்ல. தலைக்­க­வசம் அணி­யாது அங்கு இளை­ஞர்கள் செல்­வது உண்டு. தெரிந்தால் உடனே நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சட்டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தாது இருந்­தில்லை.

தேர்தல் காலங்­களில் முரண்­பா­டுகள் பல ஏற்­பட்­டன. அப்­போது ஆமி மொய்தீன் பெயர் அதி­க­மாக பேசப்­பட்­டன. அவர் சிப்லி பாரூக் என்ற மாகா­ண­சபை உறுப்­பி­ன­ருடன் இருந்தார். ஆனால்  ஆமி  மொய்தீன் பொலிசாருடன் தொடர்பில் இருக்கவில்லை. பிடியாணை சம்பவத்தின் பின்னர் இவர்கள் ஊரில் இருக்கவில்லை. தலைமறைவாக இருந்தனர். மேலும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட காலத்தில் எனக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுவதும் பொய். ஆனால் காத்தான்குடி பொலிஸ் அதிகாரியாக எனது கால எல்லை முடிந்துவிட்டது. அப்போதுதான் இந்த முரண்பாடும் ஏற்பட்டது. அப்போது எனக்கு இடமாற்றம் வந்தது. இது சாதரணமாக நடந்த ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.