சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 பேர் கைது

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தா­லும்­கூட இவர்­களை விடு­தலை செய்ய முடி­யாது. அவ்­வாறு விடு­வ­தென்­றாலும் இவர்­க­ளை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தியே விடு­தலை செய்ய முடி­யு­மென பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு­மாத காலத்­திற்கு நீடிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும்…

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான இன­வாத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் எதிர்க்­கட்சி

நாட்­டி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கடந்த சில மாதங்­க­ளாக தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் எதிர்க்­கட்சி செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இந்த இன­வாத செயற்­பா­டுகள் அடுத்த தேர்­தலை மையப்­ப­டுத்­தியே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன எனவும் அவர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் கொழும்­பி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­களின் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம்…

ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கருத்­தடை விவ­காரம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்டு குறித்து இது வரை சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று சாட்சி சுருக்­கங்கள் அடங்­கிய அறிக்கை ஊடாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு நேற்று குற்­ற­வியல் நீதீ­மன்ற நீதி­ப­திக்கு அறி­வித்­தது. அத்­துடன் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­ய­தாக…

குழப்பம் ஏற்படுத்துவோருக்கு எதிராக அவசரகால சட்டம் பாவிக்கப்படாததேன்?

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக ஏன் அவ­ச­ர­கா­ல­சட்­டத்தை செயற்­ப­டுத்த முடி­யாமல் இருக்­கின்­றது என முஜிபுர் ரஹ்மான் கேள்­வி­யெ­ழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாத­கா­லத்­துக்கு நீடித்­துக்­கொள்ளும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு…