இனவாத சக்திகளிடம் ஆட்சியை ஒப்படைத்தால் முஸ்லிம்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கடந்த கால இன­வாத வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் இருந்து இயக்­கி­ய­வர்­க­ளி­டத்தில் ஆட்­சியை ஒப்­ப­டைத்தால் எவ்­வா­றான பார­தூ­ர­மான விளை­வு­க­ளுக்கு சமூகம் முகங்­கொ­டுக்க நேரிடும் என்­பதைப் பற்றி சிந்­தித்து, அவற்­றி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளி­யுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும் .

பல தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டில் கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த ஜன­நா­யக விழு­மி­யங்­களை புதிய ஜனா­தி­பதி நிலை­நி­றுத்­துவார் என்­பதே எமது நேர்­மை­யான எதிர்­பார்ப்பு என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு அதன் தலைவர் என்.எம். அமீன் மற்றும் செய­லாளர் எஸ்.ஏ. அஸ்­கர்கான் ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குடியுரிமை குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு கோருவதில்லை

ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவி­னது அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்­தாலும் அவ்­வா­றான எந்த ஆவ­ணமும் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார்

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தேசம் அக்­கு­ற­ணை­யாகும். அக்­கு­ற­ணையில் உள்­ளூ­ராட்சி நிர்­வாகம் அக்­கு­றணை பிர­தேச சபை­யி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.