நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா?

“முஸ்லிம் கிரா­மங்கள் மாத்­தி­ரமே அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்­ளதை நாம் பார்க்­கின்றோம். தமிழ் கிரா­மங்­க­ளை­யல்ல. கத்­தோ­லிக்க மற்றும் இந்துக் கிரா­மங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஒரே வழி கோத்­தா­விற்கு வாக்­க­ளிப்­பதே.” - மன்­னாரில் நாமல்­ரா­ஜ­பக்ச. “நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­ட­வேண்டும். தமிழ் இளை­ஞர்­க­ளா­கிய நாம் சிந்­தித்துச் செயற்­ப­ட­வேண்டும்.” - SLPP இற்­காக கிரான் இளைஞர் முன்­னணி விநி­யோ­கித்த துண்­டுப்­பி­ர­சுரம்.

அன்று ஞானசாரரை விடுவித்த ஜனாதிபதி இன்று கொலையாளியை விடுவித்துள்ளார்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்­ததன் மூலம் தன்னை ஓர் இன­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொலை குற்­ற­வா­ளி­யையும் அதேபோல் விடு­வித்­த­மையின் ஊடாக சமூக விரோ­த­சக்­திக்கு துணை போகின்­ற­வ­ராக தன்னை அடை­யா­னப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார் என அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கான தேசிய இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் அருட்­தந்தை சக்­திவேல் தெரி­வித்தார்.

இனவாத சக்திகளிடம் ஆட்சியை ஒப்படைத்தால் முஸ்லிம்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கடந்த கால இன­வாத வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் இருந்து இயக்­கி­ய­வர்­க­ளி­டத்தில் ஆட்­சியை ஒப்­ப­டைத்தால் எவ்­வா­றான பார­தூ­ர­மான விளை­வு­க­ளுக்கு சமூகம் முகங்­கொ­டுக்க நேரிடும் என்­பதைப் பற்றி சிந்­தித்து, அவற்­றி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளி­யுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும் .

பல தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டில் கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த ஜன­நா­யக விழு­மி­யங்­களை புதிய ஜனா­தி­பதி நிலை­நி­றுத்­துவார் என்­பதே எமது நேர்­மை­யான எதிர்­பார்ப்பு என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு அதன் தலைவர் என்.எம். அமீன் மற்றும் செய­லாளர் எஸ்.ஏ. அஸ்­கர்கான் ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.