திசை திருப்பப்படும் அரசியலமைப்பு முயற்சிகள்
நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறுகின்ற போதிலும் அதனைச் சாத்தியமாக்க முடியாத துரதிஷ்ட நிலையே தொடர்கிறது. இதற்கிடையில் இந்த முயற்சிகள் தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் மூலம் திசை திருப்புவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எமது நாட்டுக்கு காலத்துக்கேற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…