இந்தேனேஷியாவில் சுனாமி : 281 பேர் பலி

இந்தேனேஷியாவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்பொன்றினால் ஏற்பட்ட சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில் இருபுறங்களையும் தாக்கியதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், உணவகங்கள் என்பன அள்ளுண்டு சென்றன. இந்த அனர்த்தத்தினால் குறைந்து 281 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 57 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை, 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. அருகாமையில் அமைந்துள்ள கரகட்டாஉ எரிமலையிலிருந்து கடந்த…

கொழும்பு குப்பை வேண்டாம்! புத்தளத்தில் தொடரும் போராட்டம்

தற்­போது குப்பை கொட்­டு­வ­தற்­கென உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பிர­தேசம் சேரக்­குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்­ளது. இதனால் புத்­த­ளத்தை பாது­காக்கும் வேட்­கையில் புத்­தளம், வனாத்­த­வில்லு, கற்­பிட்டி மற்றும் சேரக்­குளி மக்கள் இறங்­கி­யுள்­ளனர். இந்தப் போராட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­க­ளு­டைய பங்­க­ளிப்பும் பெரும்­ப­லத்தைச் சேர்த்­துள்­ளது. முஸ்லிம் பெண்­க­ளு­டைய ஈடு­பாடு போராட்­டத்தை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது..

கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு  காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, துயரக் காவியமாக பதியச் செய்த 2004ஆம் ஆண்டின் சுனாமிக் கடற்கோள் பேரனர்த்தத்தின் பெரும் துயர நினைவுகள், அத்துயரை எதிர்கொண்டவர்களினதும் அவற்றை நேரில் கண்டவர்களினதும்…

அரச தலைவர்களிடம் புரிந்துணர்வு அவசியம்

2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் தோற்­று­விக்­கப்­பட்ட அர­சியல் நெருக்­கடி நிலைமை ஒரு­வாறு கடந்த 16 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்த ஜனா­தி­ப­தியின் செயற்­பாடு அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என உயர் நீதி­மன்றம் வழங்­கிய வர­லாற்­றுப்­பு­கழ்­மிக்க தீர்ப்பைத் தொடர்ந்தே, ஜனா­தி­பதி மீண்டும் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மிக்கும் தீர்­மா­னத்­துக்கு வந்தார். இந் நிலையில் நேற்­றைய தினம் 28 பேர் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்­ளனர். கடந்த…