அஷ்ரபின் அரசியல் முன்மாதிரிகள் பின்பற்றப்படுமா?

0 78

எம்.எம்.எம். ரம்ஸீன்

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மறைந்து 24 வரு­டங்கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்டு இக்­கட்­டுரை எழு­தப்­பட்­டுள்­ளது.

அரை நூற்­றாண்­டுக்கும் மேல் இரு பெரும் பேரின கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து வந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கு அர­சியல் முக­வ­ரி­யையும் அடை­யா­ளத்­தையும் பெற்றுக் கொடுத்த பெருமை மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரப் அவர்­களைச் சாரும்.

தேசிய கட்­சி­களில் இருந்த முஸ்லிம் தலை­வர்கள் சூழ்­நிலைக் கைதி­க­ளாக அவ்­வப்­போது மாறு­வதைக் கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாற்­று­வ­ழிகள் பற்றி சிந்­தித்தார். இப்­பெருந்தேசிய கட்­சிகள் சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுத்­த­வை­களைப் பற்றி சிந்­தித்தார். வட­கி­ழக்கில் இடம்­பெற்று வந்த வன்­மு­றைகள் மற்றும் ஆயுதப் போராட்­டங்­களால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஜன­நா­ய­கத்தில் நம்­பிக்கை இழந்து ஆயு­த­மேந்த முற்­பட்டால் ஏற்­படப் போகும் விப­ரீ­தங்­களை முன்­னு­ணர்ந்தார். இளை­ஞர்­களை ஜன­நா­ய­கத்தில் நம்­பிக்கை கொள்ளச் செய்­வ­தற்­காக அர­சியல் ரீதியில் போராட்­டத்தை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்தார். இதன் விளை­வாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வா­கி­யது.
முஸ்லிம் அர­சியல் வெறும் சலு­கை­க­ளுக்­கான அர­சி­ய­லன்றி சுய­கௌ­ர­வத்­து­ட­னான உரி­மை­க­ளுக்­கான அர­சி­ய­லாக அமைய வேண்டும் என்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் விரும்­பினார். அர­சியல் களத்தில் அன்று இரு பெரும் அர­சியல் முகாம்­க­ளுக்குள் சிறைப்­பட்­டி­ருந்த முஸ்லிம் சமூ­கத்தை ஒரே கொடியின் கீழ் அணி திரளச் செய்து சாதனை படைத்தார்.

பன்­முக ஆளு­மை­மிக்க தனித்­துவ தலை­வரின் அர­சியல் பாச­றையில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அர­சியல் புடம் போடப்­பட்­டனர். அவர் கட்சி அர­சி­யலில் பல அதிர்ச்சி தரும் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டார். இதன் அடிப்­ப­டையில், கட்­சிக்குள் நம்­பிக்கைத் துரோ­கங்கள், கழுத்­த­றுப்­புக்கள், காட்­டிக்­கொ­டுப்­புக்கள், குத்­து­வெட்­டுக்­க­ளுக்கு முடிவு கட்­டினார். எச்­சந்­தர்ப்­பத்­திலும் எவ­ரையும் பதவி, அந்­தஸ்த்து, தரா­தரம் பாராது துணிச்­ச­லுடன் தூக்கி வெளியே வீசினார்.

அன்­றைய அர­சியல் களத்தில் அஷ்ரபின் இந்த முடி­வுகள் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ன. ஆனால் சந்­தர்ப்­ப­வாதம் மிகைத்த முஸ்லிம் அர­சியல் களத்தில் அவரின் இந்­ந­ட­வ­டிக்­கைகள் பல­ராலும் பாராட்டும் வண்ணம் அமைந்­தி­ருந்­தது. சமூ­கத்தின் அர­சியல் விடு­த­லைக்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட இயக்­கத்தின் கொள்­கைகள், கட்­டுக்­கோப்பு உடைந்து விடக் கூடாது என்­பதில் அவர் உறு­தி­யாக நின்றார்.

முஸ்­லிம்­களின் அர­சி­யலை அஷ்ரபிற்கு முந்­திய காலம் அஷ்ரபிற்கு பிந்­திய காலம் என்று கோடிட்டு ஆய்வு செய்யும் அள­வுக்கு திருப்­பங்கள் செய்த தலைவர் அவர். இதனால், முஸ்லிம் அர­சியல் களத்தில் எம்.எச்.எம். அஷ்ரபின் கொள்­கையின் பிர­காரம் அல்­லது அவரின் கொள்­கைக்கு மாற்­ற­மாக அர­சியல் செய்­வ­தாக இருப்­பினும் அஷ்ரப் என்ற பெய­ரைக்­கூ­றித்தான் மக்கள் மத்­தியில் அர­சியல் செய்ய வேண்டும் என்­ற­ள­வுக்கு அவரது ஆளுமையின் தாக்கம் காணப்­ப­டு­கின்­றது.

சமூகம் பாதிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களில் தலைவர் அஷ்ரப் துணிந்து நின்று குரல் கொடுத்து வந்­துள்ளார். அவரின் இக்­குரல் சமூ­கத்­திற்­குள்ளும் சமூ­கத்­திற்கு வெளி­யிலும் ஓங்கி ஒலித்­தது. இனப்­பி­ரச்­சி­னையில் ஓர் அங்­க­மான முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பா­டுகள், அபி­லாஷைகள் அன்­றைய வட்ட மேசை மாநாடு, இந்­திய இலங்கை ஒப்­பந்தம் என்­ப­வற்றில் கருத்­திற்­கொள்­ளப்­ப­டாத போது கவ­லை­ய­டைந்த அவர் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களில் இறங்­கினார்.

வட, கிழக்கில் முஸ்­லிம்கள் தமிழ் சமூ­கத்­துடன் கலந்து வாழ்­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வு அத­னை­யொட்­டிய விட­யங்­களில் ஒரு சமூ­கத்­திற்கு அநீதி இழைக்­கப்­பட முடி­யாது. இரு சமூ­கங்­களும் அநீ­தி­யின்றி தீர்­வு­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்­ப­டையில் தமிழ் சமூ­கத்­துடன் ஆரோக்­கி­ய­மிக்க உறவைப் பேணி வந்தார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்தின் அர­சியல் வழி­மு­றை­களில் கவ­ரப்­பட்டு ஆரம்பம் முதல் தமிழ் பேசும் சமூ­கங்­களின் ஐக்­கி­யத்­தையும் ஒன்­றி­ணைந்த செயற்­பா­டு­க­ளையும் வலி­யு­றுத்தி வந்­துள்­ள­துடன் யாழ் நூலக எரிப்பைத் தொடர்ந்து, அதன் புன­ர­மைப்­புக்கு நிதி திரட்டி அனுப்­பிய முதல் முஸ்லிம் தலை­வ­ராவார்.

அர­சியல் பலத்தை உறு­திப்­ப­டுத்தி நாட்டின் ஆட்­சியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மாறி மர்ஹூம் அஷ்ரப் அர­சி­யலில் உச்­சத்தைத் தொட்டார். முஸ்லிம் வாக்கு வங்­கியைக் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த அவர் பெரும் கட்­சி­க­ளுடன் தேர்தல் காலங்­களில் ஒப்­பந்­தங்கள் செய்தார். பேரம் பேசும் சக்­தி­யினால் சமூ­கத்தின் தேவை­களை முதன்­மைப்­ப­டுத்­தினார். முஸ்­லிம்­களின் வாக்­கு­களை வாக்­கு­று­தி­க­ளுக்கும் சலு­கை­க­ளுக்கும் அள்ளிச் செல்ல முடியும் என்ற அர­சி­யல்­வா­தி­களின் எண்­ணங்­க­ளுக்கு ஆப்பு வைத்தார்.

அர­சி­யலில் சாணக்­கி­யமும் தொலை­நோக்கும் கொண்ட அவர் சிறிய கட்­சி­களின் நன்­மைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ச­வுடன் பேரம் பேசி 12 சத­வீத பிர­தி­நித்­துவ வெட்­டுப்­புள்­ளியை 5 சத­வீ­த­மாக இர­வோ­டி­ர­வாக மாற்­றினார். இது பிற்­கா­லத்தில், மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முத­லான சிறிய கட்­சி­களின் இருப்பை பாது­காத்துக் கொள்ள உத­வி­யது.

அன்­னாரை நினை­வு­கூறும் அர­சி­யல்­வா­திகள் அவரின் அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களில் இருந்து பாடம் படிக்க வேண்டும். அவரின் தூநோக்­கு­மிக்க செயற்­பா­டு­களை முன்­மா­தி­ரி­யாகக் கொள்ள வேண்டும். இன்றேல், பாதிக்­கப்­ப­டு­வது சமூகம் மட்­டு­மே­யாகும்.

இன்று வெவ்­வேறு முகாம்­க­ளுக்குள் பிரிந்து நின்று அர­சியல் செய்யும் தலை­மைகள் மர்ஹூம் அஷ்ரபின் அர­சியல் வழி­காட்­டல்கள், அணு­கு­மு­றைகள், அர­சியல் சாணக்­கியம் முத­லா­ன­வற்றை கடை­ப்பி­டிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்­பார்க்­கின்­றது. இந்த எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வே­றாத போது சமூகம் ஏமாற்­றத்­திற்­குள்­ளா­வது மட்­டு­மன்றி சமூகம் அர­சி­யலில் பிள­வு­பட்டு செல்லும் என்­பதும் தவிர்க்­க­மு­டி­யா­தது.

இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு மீள­மு­டி­யாத அதிர்ச்­சி­யையும் சோகத்­தையும் ஏற்­ப­டுத்­திய அர­சியல் தலை­வ­ரொ­ரு­வரின் இழப்­பாக அஷ்ரப் அவர்­களின் திடீர் இழப்பு அமைந்­தது.

2000 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி கிழக்கில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகொப்டரில் புறப்பட்ட எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 45 நிமிடங்களில் அரநாயக்க ஊரகந்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தார்.

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக இரவு, பகல் பாராது பாடுபட்ட தலைவரின் திடீர் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பேரிழப்பாக இன்று வரை இருந்து வருகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அன்னாரின் பிழைகளை பொறுத்து சுவர்க்கத்தில் நுழைவிப்பானாக. ஆமீன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.