எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய்

முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்கிறார் அநுரகுமார

0 83

(எம்.வை.எம்.சியாம்)
நாம் ஆட்­சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்­டி­கை­களில் ஏதேனும் ஒன்று நிறுத்­தப்­படும் எனவும் ஐவே­ளைத்­தொ­ழுகை நிறுத்­தப்­படும் எனவும் தாடி வளர்க்க விட­மாட்டோம் எனவும் கூறு­கின்­றனர். எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு எம்மைப் பற்றி விமர்­சிப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. இவை அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­ கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

2015 இல் வீழ்ந்த மஹிந்த ராஜ­பக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்­வைத்து 2019 இல் ஆட்­சிக்கு வந்தார். இறு­தியில் மீண்டும் தோல்­வி­ய­டைந்தார். இன்று இன­வா­தத்தை வழி­ந­டத்­து­வது யார்? மொட்டுக் கட்­சியின் இன­வா­திகள் ரணிலின் பின்னால் உள்­ளனர். எஞ்­சி­ய­வர்கள் சஜித் பிரே­ம­தா­சவின் பின்னால் உள்­ளனர். நாட்டில் இன­வா­தத்தை தோற்­க­டிக்­கவும் உயிர்த்த ஞாயிறு சூத்­தி­ர­தா­ரி­களை கைது செய்­யவும் மக்கள் தேசிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

மாவ­னெல்ல பகு­தியில் இடம்­பெற்ற தேர்தல் பி­சார கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

எமது வெற்றி உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. எமக்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­யினர் போலி பிர­சா­ரங்­க­ளையும் பொய்­யான செய்­தி­க­ளையும் உரு­வாக்­கு­கின்­றனர். ஐக்­கிய மக்கள் சக்­தியின் உறுப்­பி­னர்கள் கண்­டிக்குச் சென்று நாம் ஆட்­சிக்கு வந்தால் பெர­ஹெ­ராவை நிறுத்­துவோம் எனக்­ கூ­று­கின்­றனர். குரு­நா­க­லுக்கு சென்று நாம் ஆட்­சிக்கு வந்தால் எத்­கந்த பெர­ஹெ­ராவை நிறுத்­துவோம் எனக் கூறு­கி­றார்கள். சமுர்த்­தியை இல்­லாமல் செய்வோம் எனக் கூறு­கின்­றனர். வர்த்­த­கர்­களை சந்­தித்து நாம் அவர்­களை வர்த்­தகம் செய்­ய­வி­ட­மாட்டோம் எனக் கூறு­கின்­றனர். இவ்­வா­றான போலிப் பிர­சா­ரங்­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றனர்.

முஸ்லிம் மக்­களை சந்­தித்து நாம் ஆட்­சிக்கு வந்தால் ரமழான் ஹஜ் பண்­டி­கை­களில் ஏதேனும் ஒன்று நிறுத்­தப்­படும் எனவும் ஐவேளைத் தொழுகை நிறுத்­தப்­படும் எனவும் தாடி வளர்க்க விட­மாட்டோம் எனவும் கூறு­கின்­றனர். அப்­ப­டி­யென்றால் நானும் தாடி வளர்த்­துள்ளேன். அந்­த­ள­வுக்கு அச்­ச­ம­டைந்­துள்­ளனர்.
எமது தேரர்­களை சந்­தித்து அன்­ன­தானம் வழங்­கு­வதை நிறுத்­து­வார்கள் எனவும் தேசிய கொடியை மாற்­று­வார்கள் எனவும் இரண்டு வீடுகள் கடைகள் இருந்தால் ஒன்றை பறி­முதல் செய்­வார்கள் எனவும் கூறு­கின்­றனர். இதன்­மூலம் என்ன விளங்­கு­கி­றது. எம்மைப் பற்றி விமர்­சிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு ஒன்­று­மில்லை. அவை அனைத்தும் உண்­மை­யற்­றவை. அடிப்­ப­டை­யற்­றவை.

இந்த நாட்டில் எவ்­வாறு இன­வாதம் பரவும் என்­பதை நாம் அறிவோம். நாட்டில் மத­வாதம் எப்­படி பர­வி­யது என்­பதை நாம் அறிவோம். 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்ஷ தோற்­க­டிக்­கப்­பட்டார். அவரை ஏன் மக்கள் தோற்­க­டித்­தனர்? வீழ்ந்த மஹிந்த ராஜ­பக்ஷ எவ்­வாறு எழுச்­சி­ய­டைந்தார்? மஹிந்த ராஜ­பக்ஷ திருடர் அல்ல எனவும் அவர் குற்­ற­வாளி அல்ல எனவும் நிரூ­பிக்­கப்­பட்டுவிட்­டதா?

வீழ்ந்த மஹிந்த ராஜ­பக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்­து­களை முன்­வைத்தார். ராஜ­ப­க்ஷக்கள் மீண்டும் ஆட்­சிக்கு கொண்டு வர­விட்டால் நாடு வீழ்ச்சி அடையும் என்றார். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் என்றார்.நாடும் நாட்டு மக்­களும் ஆபத்தில் என்றார். இறு­தியில் என்ன நடந்­தது. ராஜ­ப­க்ஷக்கள் ஆட்­சிக்கு வந்­தனர். மீண்டும் திருடத் தொடங்­கினர். மக்கள் அவர்­களை மீண்டும் வீட்­டுக்கு அனுப்­பினர்.

மொட்­டுக்கு என்ன நடந்­தது. இன்று மொட்டுக் கட்­சியில் இருந்­த­வர்கள் ரணிலின் பின்னால் உள்ளனர். இன்று இனவாதத்தை வழிநடத்துவது யார்? ரணில் விக்ரமசிங்கவே வழிநடத்துகிறார். எஞ்சியவர்கள் சஜித் பிரேமதாசவின் பின்னால் உள்ளனர். நாட்டில் இனவாதத்தை தோற்கடிக்கவும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டுமாயின் தேசிய மக்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.